தன்னறம் இலக்கிய விருது 2025 | Writer Srinivasa Ramanujam | எழுத்தாளர் சீனிவாச ராமாநுஜம் உரையாடல்
Автор: Cuckoo Movement for Children
Загружено: 2026-01-09
Просмотров: 1406
Описание:
தமிழ்ப்படைப்புலகில் தவிர்க்க முடியாத இலக்கியப் படைப்புகளைத் தந்து, அதன்மூலம் இவ்வாழ்வுக்கு நேர்மறைக்கோணம் அளிக்கும் முன்னோடி இலக்கிய ஆளுமைகளை மனமேந்தும் வாய்ப்பாகவும், சமகால இளம் வாசிப்பு மனங்களுக்கு அத்தகைய இலக்கியவாதிகளை இன்னும் அணுக்கப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரையில் எழுத்தாளர் யூமா வாசுகி (2020) , எழுத்தாளர் தேவிபாரதி (2021), எழுத்தாளர் சு.வேணுகோபால் (2022), எழுத்தாளர் பாலைநிலவன் (2023), எழுத்தாளர் ஷோபாசக்தி (2024) ஆகிய ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன்நீட்சியாக, 2025ம் ஆண்டுக்கான ‘தன்னறம் இலக்கிய விருது’ மொழியெர்ப்பாளரும் கோபாட்டாளருமான சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சமூக இயங்கியலின் அடியாழத்தை தத்துவமும் வரலாறும் இணைந்த அரசியலாய்வுப் பிரதிகளாக முன்வைக்கும் சீனிவாச இராமாநுஜம் அவர்களின் தீவிரமிகு இலக்கியப் பணியை வணங்கி இவ்விருதைப் பணிந்தளிக்கிறோம்.
இலக்கியம் என்பது உடலெனக் கொண்டால் மொழிபெயர்ப்பு என்பது அதன் இரத்தசுழற்சி செயல்பாடாகிறது. 'மொழிபெயர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால் நாம் மெளனத்தின் எல்லைகளால் கட்டமைந்த பகுதிக்குள் அடைபட்டு வாழ்ந்திருப்போம்' என ஜார்ஜ் ஸ்டைனர் சொல்வது அதைத்தான்.
தன்னுடைய படைப்புகளின் வழியாக சமூகப்புரிதல்களின் கோட்பாடுகளை துலக்கப்படுத்தி, ஒவ்வொன்றின் பின்னார்ந்த அரசியலையும் மொழியில் தெளிவுபடுத்தும் சீனிவாச ராமாநுஜம் அவர்களின் எழுத்துப்பங்களிப்பு சமகாலத்தில் குறிப்பிடத்தக்கது.
~
நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி
www.thannaram.in
****
Song: Meadowland
Composer: The Field Tapes · Recalibration Machine · Czarina Frost
Producer: Kyle McEvoy, Horace Bray
Writer: Kyle McEvoy, Dillan Witherow, Horace Bray
Link: • Meadowland
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: