தன்னறம் இலக்கிய விருது 2022 - எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களின் தன்னனுபவப் பகிர்தல்
Автор: Cuckoo Movement for Children
Загружено: 2022-12-28
Просмотров: 3332
Описание:
தமிழ்ப்படைப்புலகில் தவிர்த்துவிட முடியாத எழுத்துப்படைப்புகளைத் தந்து, எல்லா தரப்புக்கும் உரிய நேர்மறையாளர்களாகத் திகழ்கிற முன்னோடி இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடி மனமேந்தும் வாய்ப்பாகவும், இளைய வாசிப்பு மனங்களுக்கு அவர்களை இன்னும் அண்மைப்படுத்தும் செயலசைவாகவும் 'தன்னறம் இலக்கிய விருது' வருடாவருடம் வழங்கப்படுகிறது. அவ்வகையில், 2022ம் ஆண்டிற்கான இவ்விருது, தமிழின் முதன்மைப் படைப்பாளுமைகளுள் ஒருவராகிய எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
தமிழின் யதார்த்தவாதச் சிறுகதையுலகில் தீமையின் கொடும்பரப்பை எழுதி, இலக்கியம் வழியாக வாழ்வை விசாரணைக்கு உட்படுத்தி விளக்கமுயலும் படைப்புகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த வித்து புதுமைப்பித்தன் இட்டது. ஆனாலும், யதார்த்தத்தின் இருளை சிறுகதையின் கருப்பயையாகக் கொண்டு, உள்ளசையும் சினையாக வாழ்வு மீதான நம்பிக்கையைத் தருகிற புனைவுப் படைப்புகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைவரை ஆயுள்நீளும் ஆற்றலைப் பெற்றுவிடுகின்றன. அவ்வாறு, தமிழ் மண்ணின் வேளாண் வாழ்வியலைத் தன்னுடைய பிரதானக் கதைக்களமாகக் கொண்டு சிறுகதைகளும் நாவல்களும் எழுதும் முன்னோடிப் படைப்பாளுமை திரு சு.வேணுகோபால்.
எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்கள் தனது வாழ்வின் சுயவரலாற்றுப் பக்கங்களை அடுக்கடுக்காக நினைவுகூரும் தன்னனுபவப் பகிர்வின் முழுமையான காணொளிப் பதிவு இது. மனித அகத்தின் ஆழங்களையும் சலனங்களையும் மண்ணுயிர்ப்புடன் இலக்கியத்தில் பதியமிட்ட தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளுமையை மனமேந்திக் கொண்டாடுவதில் நிறைமகிழ்வு அடைகிறோம்.
~
நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி
9843870059 / www.thannaram.in
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: