உலகத்தின் முதல் பிரம்மா கோவில்!! பல விசித்திர கதைகளால் சூழப்பட்ட 800 வருட பழமையான கோவில்!!
Автор: Praveen Mohan Tamil
Загружено: 2021-07-05
Просмотров: 65684
Описание:
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - அறிமுகம்
01:00 - ராட்சச மரங்கள்
02:16 - சிதைந்த கோவில்
03:44 - வித்தியாசமான உருவம்
06:15 - விசித்திரமான கதை
07:49 - ஒரே சிற்பத்தில் 4 வகை தியானங்கள்
08:27 - வேற லெவல் சிற்பங்கள்
09:40 - கோவிலுக்குள்ள இப்படி தான் இருக்குமா?
11:33 - முடிவுரை
Hey guys, இன்னைக்கு நாம Cambodia ல இருக்குற Ta Prohm ங்கற கோவிலுக்கு தான் போறோம். இது 12ஆம் நூற்றாண்டோட பின்பகுதில கட்டுனதா Archeologists சொல்றாங்க, அப்படினா இந்த கோவில் கிட்டத்தட்ட 800 வருஷம் பழசு. Ta Prohm -ங்கற வார்த்தைக்கு அர்த்தம் என்னவா இருக்கும்?
Ta Prohm -னா ancestor Brahma – அதாவது படைப்பின் கடவுள்னு சொல்லுற ஹிந்து கடவுள் Brahmaவ, Cambodians அவங்களோட முன்னோரா நினைக்குறாங்க. ஆனா இந்த கோவிலோட உண்மையான பெயர் RajaVihara . அப்படினா சமஸ்கிருதத்துல ராஜாவோட rest houseனு அர்த்தம். இந்த கோவில் ரெண்டு முக்கியமான விஷயத்துக்காக பெயர் போனது.
ஒன்னு , இந்த டைனோசரோட சிற்பம். அதுவும் குறிப்பா stegosaurus வகை டைனோசர். அது இதோ இந்த சுவருல இருக்கு. நான் ஏற்கனவே இத பத்தின videos போட்டுருக்கேன்.
ரெண்டாவது விஷயம் என்னனா, இந்த மரங்கள் தான். ரொம்ப பெரிய பெரிய ராட்சத மரம் எல்லாம் இந்த கோவில கிட்ட தட்ட ஆக்கிரமிச்சுருக்குனே சொல்லலாம்.
அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா இந்த மரம் எல்லாம் உண்மையில இப்படி வளர்ந்து இருக்கறதையும் இந்த கோவில் அழிஞ்ச விதத்தையும் பாக்குறதுக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கு.
இது எப்படி நடந்திருக்கும்?
கிட்டத்தட்ட 500 வருஷத்துக்கு முன்னாடி இங்க இருந்த Cambodians இந்த மொத்த city யும் விட்டு வெளியேறிட்டாங்க. இதனால தான் இந்த ஊர்ல இருக்கிற நிறைய கோவில்ல இந்த மாதிரி புதரும் மரமும் வளர்ந்திருக்கிறத நாம பாக்கறோம். ஆனா இந்த கோவில்ல செடியையும் பறவைகளையும் ஈர்க்குற, ஏதோ ஒரு வித்தியாசமா energy இருக்கு. அதனால தான் இங்க உங்களால நிறைய பறவைகளையும், இவ்ளோ பெரிய மரங்களையும் பாக்க முடியுது.
Infact, ஒரு நாள், இந்த கோவில, இந்த மாறி பெரிய பெரிய மரங்கள் கையகப்படுத்தும்னு பழங்காலத்து builders அப்பவே கணிச்சுருக்காங்க. அதுமட்டுமில்லாம, எதிர்காலத்துல, இந்த கோவிலுக்கு என்ன ஆகும்ன்றத கூட, அவங்க சிற்பமா செதுக்கி வச்சிருக்காங்க.
இந்த கோவிலுக்கு உள்ளயே நிறைய சின்ன சின்ன கோவில்லாம் இருக்கு. அதுல ஒரு mandapathukkulla போய், அங்க என்ன இருக்குதுனு நாம பாக்கலாம். ஒரு காலத்துல இந்த இடத்தில, சிலை இருந்திருக்கும். ஆனா இன்னைக்கு ceiling, அப்புறம் சுவரெல்லாம் கூட இடிஞ்சு விழுந்து கிடக்குறத நீங்களே பாக்கலாம்.
பெரிய பெரிய ராட்சத கல் எல்லாம் இடிஞ்சு விழுந்து கிடக்குறதால, அந்த இடத்துல original ஆ என்ன இருந்திருக்கும்னு guess panna கூட முடியல. இதோட side view-அ பாருங்க, அத பாக்குறதுக்கு ஒரு தேர் மாதிரி இருக்குல்ல? ஒரு கட்டத்துல இந்த கோவிலும், அது பக்கத்துல இருக்குற காடும், மெது மெதுவா, ஒன்னா சேர்ந்தத பாக்கவே ரொம்ப புதிரா இருக்கு.
இந்த கோவில் Americans மத்தில ரொம்பவே பிரபலமாகிடுச்சு. அது மட்டுமில்லாம கோவில சுத்தி வளர்ந்திருக்கிற இந்த மரத்துக்கு அடில நிக்கும் போது அவங்க நிறைய pictures ம் எடுத்துகிறாங்க. Tomb Raider ங்கற படத்துல இந்த particular location அ use பண்ணிருப்பாங்க. அதுவரைக்கும் யாருக்குமே தெரியாம இருந்த இந்த கோவில் அந்த படத்துக்கு அப்பறம் ஒரு பெரிய tourist place ஆவே மாறிடுச்சு.
இன்னைக்கு, indian Government restoration project க்காக (adhaavadhu மறுசீரமைப்பு திட்டத்துக்காக) , ஒரு amount-அ நிதியா கொடுத்துட்டு இருக்காங்க. அது மட்டுமில்லாம, Indian archaeology department, Cambodian Government கூட சேர்ந்து இந்த கோவில்ல உள்ள structures- அ சரி பண்ணிட்டு வராங்க.
நீங்க இப்ப உள்ள photos-அயும் பழைய pictures-அயும் compare பண்ணி பாக்கலாம். actual ஆ இவங்க ரொம்ப நல்லா வேல செஞ்சிட்டு இருக்காங்க. இந்த கோவில்ல நிறைய சுவாரஸ்யமான சிற்பங்கள்லா இருக்குது. ஆனா அதுல நிறையா சிற்பங்கள் இந்த மரங்களாலேயே அழிஞ்சுருச்சு.
அதோட வேர பாருங்க. அத பாக்குறதுக்கு என்னமோ பெரிய பாம்பு, இந்த கோவில சுத்தி வளச்சுட்ட மாதிரி இருக்கு. இங்க சுவர்ல ஏதோ வித்யாசமான உருவத்த செதுக்கிருக்குறத நாம பாக்கலாம். அது என்னவா இருக்கும்?
இது ஒரு 5 தல பாம்பு. ஆனா idhula என்னமோ தப்பா இருக்கு. அதோட உடம்புல மத்த பகுதியெல்லாம் எங்க? நாம அந்த சுவர உத்து பாத்தா, அதுலயே நிறைய clues-அ நம்மளால பாக்க முடியுது.
இதுல கீழ உள்ள கால்ல பெரிய நகத்த நம்மளால பாக்க முடியுது. ஆனா பாம்புக்கு கால் கிடையாது.
அதே மாதிரி ரெண்டு side -லயும் பெரிய றெக்க விரிஞ்சிருக்கிறதயும் நம்மளால பாக்க முடியுது. நிச்சயமா ஏதோ superaana ஒன்னதான் இங்க செதுக்கிருக்காங்க. அது என்ன?
இது பக்கத்து கோவில்ல செதுக்கியிருக்க சிற்பம், ஒரு வேள இந்த சிற்பம் இந்த மாதிரி இருந்திருக்கலாம். இதுல இருக்கறது கருடன். இந்த கருடன நாம தெய்வத்துக்கு சமமா பாப்போம்ன்னு உங்களுக்கே நல்லா தெரியும். அதோட கால வச்சு ரெண்டு பாம்போட தலையயும், தரையோட சேர்த்து அழுத்தி பிடிச்சுருக்கு. அது மட்டுமில்லாம அந்த பாம்போட வால, கருடன் அதோட தலைக்கு மேல தூக்கி பிடிச்சிருக்கு.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: