உள்ளங்கையில் தவழும்/ புதிய நற்கருணை பாடல்/ Ullangaiyil Thavalum/ New Song
Автор: Tamil Catholic Channel
Загружено: 2025-05-11
Просмотров: 52941
Описание:
உள்ளங்கையில் தவழும்/ புதிய நற்கருணை பாடல்/ Ullangaiyil Thavalum/ New Song @TamilCatholicChannel
Lyrics & Music:
Fr.G.V. Panneer Selvam
Background Score:
Mr.D. Joseph
Singer:
Daisy
Lyrics:
உள்ளங்கையில் தவழும் உயிருள்ள அன்பே
உன்னைச் சரணடைந்தேன் உளம் வருவாயே - 2
நதியென நானும் நடந்தேன் இறைவா - 2
கதியென உன்னை அடைந்தேன் தலைவா
நிறைந்தேன் முழுதாய்
1.
நீ வந்து என்னில் இணைந்தாலே - நான்
கனி தரும் அழகிய கிளையாவேன்
நான் எனும் கர்வம் களைந்தாலே
மனம் நிறைவேன் உந்தன் அருளாலே - 2
அழகுருவே ஆ... அகநிறைவே ஆ...
நிறையருளே பரம்பொருளே
தாகம் தீர்ந்திட தேகம் தந்திடும்
இறைமகனே உன் தியாகம் நினைந்து
உன்னைத் தொழுதிடுவேன் - 3
2.
நீ செய்த நன்மை நினைத்தாலே
மலைத்திடுவேன் மனம் களித்திடுவேன்
நான் செய்த பாவங்கள் மலைபோலே - அவை
எனக்கே நான் செய்த சிலுவைகளே
கைம்மாறு கொடுத்திடவே
கைகளிலே ஏதுமில்லை
மீட்பின் கிண்ணத்தை கைகளில் ஏந்தி
பணிந்திடுவேனே பருகிடுவேனே
பலனடைவேனே - 3
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: