தென் திருப்பதியான வேங்கடநாதபுரத்தில் திருப்பதி பெருமாளுக்கு செலுத்த வேண்டிய நேர்ச்சையை செலுத்தலாம்!
Автор: TEMPLELIFE
Загружено: 2023-11-03
Просмотров: 61
Описание:
#தென்திருப்பதி #venkatanathapuram #perumaltemple #மேல்திருப்பதி #கீழ்திருப்பதி
#tirunelveli #varada #templelife #வேங்கடநாதபுரம்
தாமிரபரணி கரையில் ஒரே பகுதியில் மேல் திருப்பதி, கீழ்த்திருப்பதி மற்றும் காளகஸ்தியை போன்ற ஆலயமுள்ள தலமே திருவேங்கடநாதபுரம்!!!
திருநெல்வேலியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சங்காணி என்ற ஊர். இங்கு ஸ்ரீதேவி - பூதேவி உடனாய வரதராஜப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், வீரபாண்டிய மன்னன் ஆட்சியில் கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன!
இந்த ஆலயத்தில் வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் சர்வ அலங்கார ரூபத்தில் காட்சியளிக்கிறார். இவரது வலது கரத்தில் ‘தன ஆகர்ஷண ரேகை’ உள்ளது!!
இதனால் பக்தர்கள், பொன்னோ, பொருளோ கொண்டு வந்து, பெருமாளின் வலது கரத்தில் வைத்து வழிபட்டு எடுத்துச் சென்று, வீட்டில் வைத்தால், அந்த பொருள் பன்மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை!
இந்த ஆலய பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு, குறைவில்லாத செல்வம் வந்துசேரும் என்பது ஐதீகம். மேலும், ஆணவம், மாயை, காமம், வெகுளித்தனம், மயக்கம், சாபம், நோய், பீடை, கண்திருஷ்டி போன்ற 19 வகையான தோஷங்கள் நீங்கி சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். தங்களது கோரிக்கை நிறைவேறிய பக்தர்கள், இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்!!!
இத்தலத்திற்கு நெல்லை சந்திப்பிலிருந்து டவுன் பஸ் வசதி உள்ளது. ஆட்டோவிலும் செல்லலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருத்தால் லைக் செய்யவும், பகிரவும். இது போன்ற பல அற்புதமான ஆலய தகவல்களுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும். நன்றி!
If you like this video kindly like, share, subscribe and support our TEMPLELIFE channel. Thank you!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: