#Tamil
Автор: Joseph Y
Загружено: 2021-08-15
Просмотров: 503
Описание:
I dedicate this parts of the mass to our beloved new Tiruchirappalli Bishop Most Rev.ArockyaRaj Savari Muthu.
ஆண்டவரே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்!
கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
ஆண்டவரே இரக்கமாயிரும்!
ஆண்டவரே இரக்கமாயிரும்!
உன்னதங்களிலே கடவுளுக்கு
உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக!
உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக!
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே!
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவனே! இணையில்லாத விண்ணரசே!
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே!
ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே!
ஆண்டவராகிய இறைவனே! இறைவனின் திருச் செம்மறியே!
தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்!
உலகின் பாவம் போக்குபவரே, நீர் எம்மீது இரங்குவீர்!
உலகின் பாவம் போக்குபவரே, எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்!
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம்மீது இரங்குவீர்!
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!
தூய ஆவியரோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.
ஆமென்!
தூயவர், தூயவர், தூயவர், வான் படைகளின் கடவுளாம் ஆண்டவர்!
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன!
உன்னதங்களிலே ஓசன்னா! (2)
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசீ பெற்றவர்!
உன்னதங்களிலே ஓசன்னா! (2)
உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச்செம்மறியே,
எம்மேல் இரக்கம் வையும்.
உலகின் பாவம் போக்கும்
இறைவனின் திருச்செம்மறியே,
எம்மேல் இரக்கம் வையும்.
உலகின் பாவம் போக்கும்
இறைவனின் திருச்செம்மறியே,
எமக்கு அமைதி அருளும்.
Music and Keyboard
Joseph Y
Singers
Janet Rina J
Kemila De Nihetha
Tiruchirappalli
15.08.2021
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: