வெற்றி ரகசியத்தை அருளி வாழ்வை வெற்றி மார்க்கத்திற்கு அழைத்து செல்லும் SUKHA BRAMHA MAHARISHI!!!
Автор: TEMPLELIFE
Загружено: 2023-10-29
Просмотров: 1022
Описание:
#sukabrahmamaharishi #suka #maharishi #templelife #சுகபிரம்ம #மகரிஷி
சுகா என்ற வடமொழிச் சொல்லுக்கு கிளி என்று பொருள். அதனால் அவருக்குப் பெயர் சுகர். கிளி முகம் கொண்ட மகரிஷி ஸ்ரீ சுகப் பிரம்ம ரிஷி. இவர் தனது தாயின் சாயலை முகத்தில் தாங்கியவர். தாயின் சாயலைப் பெற்ற மகனும், தந்தையின் சாயலைப் பெற்ற பெண்ணும் பெரும் அதிர்ஷ்டசாலிகள் என்பார்கள். சுகர் உலகிலேயே மிகச் சிறந்த ஞானவான் என்ற தகுதியைப் பெற்ற அதிர்ஷ்டசாலிதான். தனது அதிர்ஷ்டத்தைக் கூட உணர வேண்டிய அவசியமில்லாத பிரம்ம ஞானி!
அவரை மனதார நினைத்து வணங்கினாலே எண்ணற்ற பலன்களை அள்ளி தரும் மகான் அவர்! அவரை இன்றைய பதிவில் தரிசித்து அவர் அருளை பெறுவோம்!
தமிழகத்தில் சேலத்தில் உள்ள சிவன் கோயில் மூலவர் இவரால் வழிபடப்பட்டவர். அதனால் அந்த இறைவனின் திருநாமம் சுகவனேஸ்வரர் ஆனது.
இக்கோயிலில் சுகப்பிரம்ம ரிஷிக்கு தனி சந்நிதி உண்டு. சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் தெத்திகிரிப்பட்டி கிராமத்தில் உள்ள அபய ஆஞ்சநேயர் ஆலயத்திலும் சுகருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் சுகப்பிரம்ம மகரிஷி ஆசிரமமும், அடையாறு மத்ய கைலாஷ் ஆலயத்தில் தனி சந்நிதியும் உள்ளது. கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் அருகில் பில்லாலி தொட்டி என்ற கிராமத்தில் சுகருக்கு அருட்பீடம் உள்ளது. இங்கு பிரதான மூர்த்தியாக தனது சீடர் மார்க்கண்டேயருடன் சுகர் காட்சியளிக்கின்றார்.
வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற வேண்டி இக்கோயிலுக்கு வருகை புரிகிறார்கள். பலன் அடைகிறார்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருத்தால் லைக் செய்யவும், பகிரவும். இது போன்ற பல அற்புதமான ஆலய தகவல்களுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும். நன்றி!
If you like this video kindly like, share, subscribe and support our TEMPLELIFE channel. Thank you!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: