Karthar Nallavar | கர்த்தர்இந்தஆண்டு நமக்குஆலோசனையில்ஆச்சரியமானவராய் செயலில்மகத்துவமானவராய்இருப்பார்
Автор: Karthar Nallavar
Загружено: 2025-12-31
Просмотров: 135
Описание:
கர்த்தர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.
ஏசாயா 28:29
நம் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் ஆலோசனையில் ஆச்சரியமானவர் செயலில் மகத்துவமானவர். இன்று நாம் காண்கிற இந்த புத்தாண்டின் முதலாம் நாள் காலை வேளையில் கர்த்தர் நமக்கு கொடுக்கிற வார்த்தை என்னவென்றால் நான் ஆலோசனையில் ஆச்சரியமானவர் செயலில் மகத்துவமானவர் என்பதே. ஆம் நம்முடைய வாழ்க்கையில் அவருடைய ஆலோசனைகள் இந்த ஆண்டு ஆச்சரியமானவைகளாக இருக்கும் அவருடைய செயல் நம்முடைய வாழ்க்கையில் இந்த ஆண்டு மகத்துவமானதாய் இருக்கும். கர்த்தருக்கு பிரியமானவர்களே எனக்கு அன்பானவர்களே, உங்கள் யாவருக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள். கடந்த ஆண்டு முழுவதும் நம்முடைய தேவன் நம்மை பாதுகாத்தார் வழி நடத்தினார் ஆசிர்வதித்தார் இந்த புத்தாண்டை காணச் செய்தார். கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் ஒரு நோக்கத்தையும் திட்டத்தையும் வைத்திருப்பார் அந்த நோக்கமும் திட்டமும் நிறைவேறும்படியாக அவர் நமக்கு இந்த ஆண்டு நல்ல ஆலோசனைக்காரராக இருப்பார் நம்முடைய வாழ்க்கையில் அவர் செய்கிற செயல்கள் மகத்துவமானவைகளாக இருக்கும்.
கர்த்தர் தமக்கு பயந்தவர்களுக்கும்,
தம்மால் அழைக்கப்பட்ட தெரிந்து கொள்ளப்பட்ட தம்முடைய ஜனங்களுக்கும், அவரை நோக்கி கூப்பிடுகிற, அவரை விசுவாசிக்கிற யாவருக்கும் அவர் நல்ல ஆலோசனைக்காரராக இருப்பார்.
அவருடைய ஆலோசனைகள் ஆச்சரியமானவைகள். எனவேதான் அவரால் அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜாக்களும் அவருடைய ஜனங்களும் சத்துருக்களுக்கு முன்பாக யுத்தத்திற்கு செல்லும் போதும் எந்த ஒரு காரியத்தை செய்யும் போதும் கர்த்தரிடத்தில் ஆலோசனையை பெற்றார்கள்.
நமக்கு ஆலோசனை கொடுக்கிறவர் மாத்திரமல்ல. அவருடைய ஆலோசனைகள் மிகவும் ஆச்சரியமானவைகள். மனிதனால் கிரகிக்க முடியாதவைகள். அதே நேரத்தில் நமக்காக நம்முடைய சத்துருக்களின் ஆலோசனைகளை அபத்தமாக்குகிறவர். தம்முடைய ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமாகிய கானான் தேசத்திற்கு கொண்டுவர அவர் கொடுத்த ஆலோசனைகள் ஆச்சரியமானவைகள். இப்படித்தான் கர்த்தர் நமக்கு கொடுத்த வாக்குத்தத்தை நிறைவேற்றும் படியாக நம்மை ஆசீர்வதிக்கும் படியாக இந்த ஆண்டு நாம் அவரிடத்தில் கேட்கும் ஆலோசனைகளுக்கு அவர் செவி கொடுத்து அவர் கொடுக்கும் ஆலோசனைகள் நம்முடைய வாழ்க்கையில் அதிசயமானவைகளாய் ஆச்சரியமானவைகளாய்
அற்புதத்தையும் அதிசயத்தையும் செய்கிறவைகளாக இருக்கும்.
எனவே தான் யோபு துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக என்றும்,
துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும் என்றும் தாவீதும் சொல்கிறார்கள்.
மேலும் தாவீதுக்கு கர்த்தர் கொடுத்த ஆலோசனைகள் ஆச்சரியமானவைகளாய் இருந்தது எனவேதான் தாவீது, எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன் என்றும், கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும் என்றும்,
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் என்றும் சொல்கிறார். அதே போல் நம்முடைய கர்த்தர் செயலில் மகத்துவமானவர். கர்த்தருடைய ஜனங்களை தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திருப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னபோது,
அவர்களில் ஒருவரும் தப்பி விடாத படி அவர்களை செங்கடலில் மூழ்கடிக்க செய்து, கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார் என்று தம்முடைய ஜனங்களாலே மகிமைப்படுத்தப்பட்டவர் கர்த்தர். கர்த்தருக்கு பிரியமானவர்களே கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட அழைக்கப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்ட, அவரை நாடுகிற தேடுகிற, அவரையே நம்புகிற, விசுவாசிக்கிற, அவருடைய பிள்ளைகளாகிய நம்முடைய வாழ்க்கையில் நாம் அவரை இந்த ஆண்டு தேடும்போது அவரிடத்தில் ஆலோசனை கேட்கும் போது அவர்
நமக்கு கொடுக்கிற ஆலோசனைகள் ஆச்சரியமானவைகளாக இருக்கும் அவர் நம்முடைய வாழ்க்கையில் செய்யப் போகின்ற ஒவ்வொரு காரியமும் மகத்துவமானவைகளாய் இருக்கும். 2026 ஆம் ஆண்டு, நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் ஆலோசனையில் ஆச்சரியமானவராகவும் செயலில் மகத்துவமானவராகவும் இருப்பாராக. ஆமென். சர்வவல்லமை உள்ள சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமத்தை விசுவாசத்தோடு தொழுது கொள்கிற எங்களுடைய வாழ்க்கையில் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் இந்த ஆண்டு ஆலோசனையில் ஆச்சரியமானவராகவும் செயலில் மகத்துவமானவராகவும் எங்களுடைய வாழ்க்கையில் இருக்க வேண்டும் என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இன்ப நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் ஆமென் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் முழுவதும் நம்மோடு கூட இருப்பதாக ஆமென். #Kartharnallavar
#God is Good #KARTHARNALLAVAR #கர்த்தர்நல்லவர் #Morningdevotion #TamilMessage #Shortmessage #GoodMorning #PraisetheLord #Gospel #Gospelmessage #Hope #Word #Godsword #TodayMessage #TodayWord #Bibleword #Hopeword #Blessingword #Blessingway #Goodway #Successway #Successword #Godisgood. #Kartharnallavar #TamilMessage #Morningdevotion #Praise# the Lord #Gospel #Gospelmessage #Hope #Word #Blessingword #Blessingway #Goodway #Successway #Successword #Godisgood
#Prophetic word, #Prophetic voice
#இறைவார்த்தை #இன்றைய வார்த்தை #இன்றையமன்னா #கர்த்தர்நல்லவர் #Goodword. #kartharnallavar #gospel #hope #tamilmessage #word #godisgood #morningdevotion #prophetic #successway
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: