Karthar Nallavar | அற்பாமாய் எண்ணப்படுகிற நம்மை தான் தேவன் காண்பார் தெரிந்துகொள்வார்
Автор: Karthar Nallavar
Загружено: 2026-01-13
Просмотров: 83
Описание:
உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும் , அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.
1 கொரிந்தியர் 1: 28
உலகத்தின் இழிவானவைகளையும் , அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார் என்று
அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். ஆம் நம் தேவன் அற்பமாய் எண்ணப்பட்டவைகளை
கண்டு தெரிந்து கொண்டு, அற்புதத்தையும், அதிசயத்தையும் செய்து ஆசீர்வதித்தார். சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார். எனவே என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.
அடிமைப்பெண் ஆகாய் கர்ப்பந்தரித்தாள். அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும். என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன். அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள். கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.
ஆபிரகாம் முதிர் வயதாய் இருக்கையில் சாராள் கர்ப்பவதியாகி தேவன் குறித்திருந்த காலத்திலேயே அவனுக்கு ஒரு குமாரனை பெற்றாள். அற்பமாய் எண்ணப்பட்ட சாராளை கர்த்தர் தெரிந்து கொண்டார் அதிசயம் செய்தார் அற்புதம் செய்தார் ஆசீர்வதித்தார். யாக்கோபு ராகேல் மேல் பிரியப்பட்டு, லாபானிடம் ஏழு வருடம் வேலை செய்தான். ஆனால் லாபானோ யாக்கோபை ஏமாற்றி
லேயாளை மனைவியாக கொடுத்தான். தான் அதிகமாய் நேசித்த ராகேலுக்காக யாக்கோபு மேலும் ஏழு வருடம் வேலை பார்த்தான். ராகேலாலும் யாக்கோபாலும் அற்பமாய் எனப்பட்ட லேயாளை கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பம் தரிக்கும்படி செய்தார் ராகேலோ மலடியாய் இருந்தாள்.
லேயாள் தான் பெற்ற முதல் குமாரனுக்கு கர்த்தர் என் சிறுமையை பார்த்தார் என்று சொல்லி ரூபன் என்று பேரிட்டாள். மறுபடியும் ஒரு குமாரனை பெற்று நான் அற்பமாய் எண்ணப்பட்டதை கர்த்தர் கேட்டருளினார் என்று சொல்லி சிமியோன் என்று பெயரிட்டாள். மீண்டும் ஒரு குமாரனை பெற்று என் புருஷன் என்னோடு சேர்ந்திருப்பார் என்று சொல்லி அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள். மேலும் ஒரு குமாரனை பெற்று கர்த்தரை துதிப்பேன் என்று சொல்லி யூதா என்று பேரிட்டாள். இப்படியாக அற்பமாக எண்ணப்பட்ட லேயாளை கர்த்தர் கண்ணோக்கியதால் 6 குமாரர்களையும் ஒரு குமாரத்தியையும் அவள் பெற்றாள்.
சாமுவேல் பெத்லகேமுக்கு போய் ஈசாயின் இடத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ண உன் குமாரர்களை அனுப்பு என்று சொல்லி அவர்களைப் பார்த்தபோது
ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணினான். பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்து கொள்ளவில்லை என்று சொல்லி, உன்பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டார். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான். அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி என்றார். அற்பமாய் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அந்த தாவீதை தான் கர்த்தர் தெரிந்து கொண்டு ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்: இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் ஆயக்காரனை அற்பமாய் எண்ணி தன்னை நீதிமானாக்கி ஜெபித்தான்.
ஆனால் அற்பமாய் எண்ணப்பட்ட ஆயக்காரனோ தன்னை தாழ்த்தி ஜெபித்தான். ஆயக்காரனே நீதிமானாக்கப்பட்டான் என்றார். மேலும் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று நமக்கு சொல்லியிருக்கிறார். மேலும் நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே என்றும் வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர் என்றும் பவுல் நமக்கு சொல்கிறார்.
கர்த்தருக்கு பிரியமானவர்களே,
நம்மையும் நம்முடைய சகோதரர்கள் சகோதரிகள் உறவினர்கள் நண்பர்கள் உடன் வேலை செய்பவர்கள் அருகில் இருப்பவர்கள். நமக்கு மேலானவர்கள் அதிகாரிகள் செல்வாக்கும் அந்தஸ்து உடையவர்கள் நம்மை அற்பமாக எண்ணுகிறார்களா? கவலையே வேண்டாம். மற்றவர்கள் நம்மை அற்பமாக எண்ணும்போது தான் கர்த்தர் நம்மை தெரிந்து கொள்வார் நம்மேல் கண்ணோக்கமாய் இருப்பார். ஆகாது என்று தள்ளப்பட்ட நம்மை தான் கர்த்தர் மூலைக்கல்லாய் நிறுத்துவார். #Kartharnallavar #God is Good #KARTHARNALLAVAR #கர்த்தர்நல்லவர் #Morningdevotion #TamilMessage #Shortmessage #GoodMorning #PraisetheLord #Gospel #Gospelmessage #Hope #Word #Godsword #TodayMessage #TodayWord #Bibleword #Hopeword #Blessingword #Blessingway #Goodway #Successway #Successword #Godisgood. #Kartharnallavar #TamilMessage #Morningdevotion #Praise# the Lord #Gospel #Gospelmessage #Hope #Word #Blessingword #Blessingway #Goodway #Successway #Successword #Godisgood
#Prophetic word, #Prophetic voice
#இறைவார்த்தை #இன்றைய வார்த்தை #இன்றையமன்னா #கர்த்தர்நல்லவர் #Goodword #kartharnallavar #gospel #hope #tamilmessage #word #godisgood #morningdevotion #prophetic #successway
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: