புத்தியாய் நடந்து வாருங்கள்(கீர்த்தனை - 222) Buthiyai Nadanthu
Автор: Composer Thought
Загружено: 2021-04-19
Просмотров: 5298
Описание:
Cm 2/4 80 bpm
[email protected]
நண்பர்களே!
நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள்
மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது.
சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்.
பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன்.
கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
W.Michael Samraj
பல்லவி
புத்தியாய் நடந்து வாருங்கள் - திரு வசனப்
பூட்டைத் திறந்து பாருங்கள்.
அனுபல்லவி
சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
நித்தமும் ஜெபம், தருமம்,
நீதி செய்து, பாடிக்கொண்டு - புத்தி
சரணங்கள்
1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்?-திரு உரையில்
அறிந்து உணர்ந்து பாருங்கள்;
சீருடைய தெய்வப் பிள்ளைகள்-நீங்கள்; ஏதிந்த
தித்தரிப்பு[1] செய்யும் வகைகள்?
கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே - புத்தி
2. ஆவியை அடக்காதிருங்கள்;-மறை சொல்லுவதை
அசட்டை செய்யாமல் பாருங்கள்;
ஜீவனை அடையத் தேடுங்கள்;-யேசுக் கிறிஸ்தின்
சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்;
மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம் வேண்டுதலோடு
தாவி, யேசுவைப் பிடித்துத், தளரா நடையோடுன்னிப் - புத்தி
3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத்-துதித்துப் போற்றி,
இன்பமாய்ச் சத்திய வேதத்தை
வாசித்து ஆராய்ந்து, நலத்தைப்-பிடித்துளத்தில்
வைத்துக்கொண்டு, இவ்வுலகத்தை
நேசியாமல் பகைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்
ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் - புத்தி
4. பரிசுத்த கூட்டம் அல்லவோ?-நீங்கள் எல்லாரும்
பரன் மகன் தேட்டம் அல்லவோ?
தரிசிக்க நாட்டம் அல்லவோ?-கிறிஸ்தின் உள்ளம்
தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ?
பரிசனை செய்தவர்பொற் பாதத்தை மனதில் உன்னிக்,
கரிசனை யோடு தேடிக், காணத் தீயோன் நாணப் படிப் - புத்தி
மரியான் உபதேசியார்
[1] உபாயம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: