ஆறுதல் அடை, மனமே;(கீர்த்தனை - 297) Arudhal Adai Maname
Автор: Composer Thought
Загружено: 2021-04-19
Просмотров: 2969
Описание:
Cm 2/4 80 bpm
[email protected]
நண்பர்களே!
நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள்
மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது.
சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்.
பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன்.
கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
W.Michael Samraj
பல்லவி
ஆறுதல் அடை, மனமே;-கிறிஸ்துவுக்குள்
ஆறுதல் அடை, மனமே.
அனுபல்லவி
பாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின்
கூரை அழித்த யேசு கொற்றவன் றனை நோக்கி. - ஆறு
1. நம்பிக்கை யற்றோரைப் போலே,-மரித்தோர்க்காக
நலிவதேன் ஒருக்காலே;
உம்பர் கோன் மேகத்தின் மேலே-தோன்றிடும் போ
துயிர்த்தெழும்புவ தாலே,
வெம்பிப் புலம்பி அழ வேண்டாம்; கிறிஸ்து வெனும்
தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து. - ஆறு
2. ஜீவ நதிகள் ஓடுமே;-எருசலேமில்
திரளாய் ஜனங்கள் கூடுமே;
தேவ துதியைப் பாடுமே;-யேசுகிறிஸ்தின்
ஜெயத்தைச் சொல்லிக் கொண்டாடுமே;
ஆவலுடனே நாமும் அதையே அடைவதற்கு
ஜீவ வசனந் தன்னைத் திடனாய்ப் பிடிப்போமாக. - ஆறு
3. எண்ணம் கவலைகள் உண்டாம்;-மரித்தோர்க்காக
ஏக்கம் பெருமூச்சும் உண்டாம்;
கண்ணீர் சொரிவதும் உண்டாம்;-துயரம் மிஞ்சிக்
கலங்கி அழுவதும் உண்டாம்;
அண்ணல் கிறிஸ்துவும் முன் எண்ணிக் கண்ணீர் விட்டார்,
நண்ணி அவரை ஜெபம் பண்ணித் துயரைவிட்டு. - ஆறு
4. யேசுவைப் பற்றின பேர்கள்-மரித்தும் உயிர்த்
தெழுந்து புறப்படுவார்கள்;
மாசற்ற தேவன் அவர்கள்-உடனிருக்க
மகிமை பெற்றிருப்பார்கள்;
பேச வேண்டுமோ? யேசு ராசன் சமுகமதில்
நேசமுடன் என்றைக்கும் வாசம் செய்வார்கள் அல்லோ? - ஆறு
மரியான் உபதேசியார்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: