விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்
Автор: Vithaigal
Загружено: 2026-01-06
Просмотров: 468
Описание:
விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை காணலாம். விழுப்புரம் வடக்கு மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அருகாவூர் மதுரா வேட்டைக்காரன் குடிசை கிராமத்தில்,
தலைமை நிலை அலுவலகப் பொறுப்பாளர் அவியூர் M செந்தில் குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆலகிராமம் P முருகன், விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் K சுரேஷ்குமார், மயிலம் மற்றும் வல்லம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் S சந்திரசேகரன், வல்லம் ஒன்றிய தலைவர் AA ஏழுமலை, வல்லம் ஒன்றிய செயலாளர் KG நாகேந்திரன், வல்லம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் M சதீஷ், வேட்டைக்காரன் குடிசை கிளை தலைவர் K காளி, கிளை செயலாளர் P நாகமணி, இவர்கள் முன்னிலையில் விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் திரு RR சக்திவேல் அவர்களின் தலைமையில் கடந்த 19-12-2025 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணியளவில் விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் 28 வது ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் K சுரேஷ்குமார் வரவேற்பை தொடர்ந்து அங்குள்ள நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில்
வல்லம் ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் R ஹரி, வேட்டைக்காரன் குடிசை கிளை தலைவர் E.பெருமாள், கிளை துணை துணை செயலாளர் K குமரவேல், கிளை பொருளாளர் V.வீரமணி , கிளை இளைஞர் அணி செயலாளர் M.பாண்டியன், மற்றும் S தனுஷ் அவர்களுக்கு கிளை IT TEAM ஆக பொறுப்புகள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் தேவைகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சங்கத்தின் தலைவர் திரு RR.சக்திவேல் பேசுகையில்
விவசாயம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அடிமை அல்ல!
இந்த விவசாய நிலம் எந்த அரசியல் கொடிக்கும் சொந்தமல்ல!
அரசியல்வாதிகள் மேடையில் நிற்பார்கள்…
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்காக பாடுபடுவோம்”
“விவசாயிகளின் வாழ்க்கையை உயர்த்துவோம்”
என்று அழகாக பேசுவார்கள்!
கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டும் ,
ஒரு விவசாயத்திற்கு என்ன தேவை என்று யாருக்கு தெரியும்?
எந்த பருவத்தில் என்ன பயிர் செய்ய வேண்டும்?
எப்போது விதை விதைக்க வேண்டும்?
எப்போது நடவு செய்ய வேண்டும்?
மழை வந்தால் என்ன செய்ய வேண்டும்?
வறட்சி வந்தால் எப்படி சமாளிக்க வேண்டும்?
பூச்சி தாக்குதல் வந்தால் எப்படி பாதுகாக்க வேண்டும்?
எவ்வளவு உரம்? எந்த ஊட்டச்சத்து?
👉 இது எல்லாம் அரசியல்வாதிக்கு தெரியுமா?
👉 இல்லை!
👉 இது ஒரு விவசாயிக்கு மட்டுமே தெரியும்!
ஆகையால்,
ஒரு விவசாயி அரசியலின் பின்னாடி சென்றால்,
அவன் வாழ்க்கையே பின்னோக்கி போகும்!
விவசாயி ஒன்றுபட்டால்…
அரசியல் நம்மை அணுக வேண்டிய நிலை வரும்!
இந்த மண்ணும்…
இந்த விவசாயமும்…
யாருக்கும் அடிமை அல்ல!
விவசாயி தலைநிமிர்ந்து நிற்கும் நாளே…
இந்த நாட்டின் உண்மையான வளர்ச்சி நாள்!
இதில் மாநிலப் போராட்ட குழு தலைவர் திரு J ஜானகிராமன், தலைமை நிலை, விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் S ரமேஷ், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் R முத்துகிருஷ்ணன், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை தலைவர் M சம்பத், வல்லம் ஒன்றிய துணைச் செயலாளர் A பார்த்திபன் மரக்காணம் ஒன்றிய செயலாளர் P சிவா வல்லம் ஒன்றிய பொருளாளர் R குமாரசாமி வல்லம் ஒன்றிய இளைஞரணி M சதீஷ், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் A சுரேஷ் செஞ்சி ஒன்றிய தலைவர் திரு கார்த்தி மற்றும் 100க்கு மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்தோகொண்டனர்
-----------------------------------------------------------
விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் 29 வது ஆலோசனைக் கூட்டம், கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில், விழுப்புரம் (தெ) மாவட்டம், முகையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, வி.புதுப்பாளையம் கிராமத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
முகையூர் ஒன்றிய செயலாளர் P. ராமமூர்த்தி வரப்பரப்புடன், விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் S .ரமேஷ், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் R.முத்துக்கிருஷ்ணன், விழுப்புரம் தெற்கு மாவட்ட துணை தலைவர் R.விக்னேஸ்வரன், முகையூர் ஒன்றிய தலைவர் G.சிவக்குமார், வி.புதுப்பாளையம் கிளை தலைவர் R.பாலசுப்ரமணியம், செயலாளர் C.முருகன் இவர்களின் முன்னிலையில், விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் திரு R.R.சக்திவேல் அவர்களின் தலைமையில் நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில்,
வி.புதுப்பாளையம் கிளை பொறுப்பாளர் பெ.ஆறுமுகம், பீரங்கிபுரம் கிளை தலைவர் M ரவிக்குமார், பொருளாளர் M ரேணு, இளைஞரணி செயலாளர் M குமார், கண்டாச்சிபுரம் கிளை தலைவர் K தனபால், செயலாளர் K சங்கர், சு பில்ரம்பட்டு கிளை தலைவர் R மணிகண்டன், கிளை செயலாளர் E இராமச்சந்திரன், ஒட்டம்பட்டு கிளை தலைவர் P செல்வம், கிளை செயலாளர், C கிருஷ்ணமூர்த்தி, கிளை தலைவர் திரு சுப்பிரமணி, கிளை செயலாளர் RC ஏழுமலை, இளைஞரணி செயலாளர் E சரண்ராஜ், வீரபாண்டி கிளை செயலாளர் திரு.ராஜேந்திரன், இளைஞரணி செயலாளர் மகேந்திரன், காங்கயனூர் கிளை செயலாளர் K செந்தில்முருகன், கிளை பொருளாளர் K செங்கல்வராயன், பூண்டி கிளை தலைவர் S. சக்திவேல், வீரங்கிபுரம் கிளை தலைவர் திரு.இமான், கிளைச் செயலாளர் திரு சரவணன், மகளிர் கிளை தலைவர் ஜெயந்தி மற்றும் லதா ஆகியோர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் தேவைகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சங்கத்தின் தலைவர் திரு RR.சக்திவேல் அவர்கள் பேசுகையில்....
இந்த நாட்டில் ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு தொழிலும்
தங்கள் வாழ்வதற்காக ஒன்று கூடி சங்கங்களை அமைத்து,
தங்கள் உரிமைகளை போராடி வென்றெடுக்கிறது.
ஆனால்…
இந்த நாட்டை உணவால் உயிர்ப்பிக்கும் விவசாயிகள் மட்டும்
ஏன் இன்று ஒன்றாக சேர முடியாமல் இருக்கிறோம்?
அதற்கான உண்மையான காரணத்தை
நாம் தைரியமாக பேச வேண்டிய நேரம் இது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: