சென்னை புறநகர் மாவட்டம், 191வது வார்டு - அதிமுக, பள்ளிக்கரணை பகுதி கழகத்தின் சார்பில் பொங்கல் விழா
Автор: NEWS 4
Загружено: 2026-01-12
Просмотров: 339
Описание:
பொங்கல் மற்றும் தமிழர் திருநாளை
முன்னிட்டு...
*பரிசு பொருட்கள் மற்றும் நலத்திட்ட
உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி*
அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, பொங்கல் திருநாள் மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, 2000 நபர்களுக்கு புடவை, கரும்பு, டிபன் பாக்ஸ், இனிப்பு மற்றும் கோலப் போட்டிக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி 11.01.2026 அன்று ஜல்லடியான்பேட்டை, வீராத்தம்மன் கோவில் தெரு அருகில், சென்னை புறநகர் மாவட்டம், 191வது வார்டு - அதிமுக, பள்ளிக்கரணை பகுதி கழகத்தின் சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கழக அமைப்புச் செயலாளர் கே.சிங்காரம், சென்னை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் கே.பி.கந்தன், அதிமுக-வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் லியோ என்.சுந்தரம், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் மற்றும் பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பெரும்பாக்கம் E.ராஜசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கோலப்போட்டி, உறியடித்தல் மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளை வழங்கினர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், சோழங்கநல்லூர் மேற்கு பகுதி கழகச் செயலாளர் டி.சி.கருணா, தெற்கு பகுதி செயலாளர் வி.குமார், வடக்கு பகுதி செயலாளர் ஜி.எம்.ஜானகிராமன், கொட்டிவாக்கம் பகுதி கழக செயலாளர் A.கிருஷ்ணமூர்த்தி, மத்திய பகுதி செயலாளர் OMR பி.ரவி, கழக இலக்கிய அணி செயலாளர் சக்திவேல் கழக அமைப்புச் செயலாளர் பாபு, 189வது கிழக்கு வட்டக் கழக செயலாளர் வி.எஸ்.டி.பிராமிஸ் அம்பேத்கர், 190வது மேற்கு வட்டக் கழகச் செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பி.சிவப்பிரகாசம், 190 வது கிழக்கு வட்டக் கழகச் செயலாளர் டி.பி.மாறன் (எ) சுரேஷ்குமார், 191வது மேற்கு வட்டக் கழக செயலாளர் இராம.சேகர், 191வது கிழக்கு வட்டக் கழகச் செயலாளர் எம்.குமார் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்டக் கழக, பகுதி கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் அதிமுக-வினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 191 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் பள்ளிக்கரணை பகுதி கழகத்தின் பகுதி செயலாளர் ஜெ.எல்.லக்ஷ்மி சிறப்பாக செய்திருந்தார்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: