Tamil sufi song 2023 Ya Gaus Gwaliori Shattari - Music: Sajid Khan|Voice: Umar|Lyrics:MashookRahman
Автор: Sufi Musix
Загружено: 2023-01-08
Просмотров: 19968
Описание:
Sufi Musix presents "Ya Gaus Gwaliori Shattari" produced by Sheikh Muhammad Qadiri.
This song is dedicated to Muhammad Gaus Gwaliori Shattari R.A. the revered Sufi Master of Hazrat Qadir Wali of Nagore
Music: Sajid Khan | Singer: Umar| Lyrics: Mashook Rahman | Sound Design: A M Rahmathulla.
Lyric Video created by Mohamed Haja Maraicar
/ @mhcreations
**யா கௌஸ் க்வாலியரி ஷத்தாரி**
ஹக் ஹக் ஹக் அல்லாஹூ
ஹக் ஹக் ஹக் அல்லாஹூ
ஹக் ஹக் ஹக் அல்லாஹூ
அல்லாஹூ ஹூ ஹக்
யா கௌஸ் க்வாலியரி ஷத்தாரி
யா பீரே காதிர் ஹக் நாகூரி
யா கிந்தீலே இர்ஃபானீ யா ரஹ்மானீ
யா கன்ஜுல் அர்ஷே ஹக்கானி நூரானீ
சரணம் – 1
சருகை உண்டே உடலில் உயிர் நிறுத்தி
தவிப்பின் நெய்யில் தவத்தின் சுடர் கொளுத்தி
அகந்தை என்னும் சழக்கை எல்லாம் எரித்தீர்
மிஃராஜ் சென்றே ஹக்கின் கனியை புசித்தீர்
படைப்புகளெல்லாம் மின்னும் பொருளாய் திரிய
ஒவ்வொரு அணுவிலும் ஹக்காய் ஹக்கே ஹக்காய் தெரிய
ஹக்கோன் திறந்த வெட்டவெளிக்குள் பாங்காய் சென்றீர்
துவக்கத்தின் முன்னும் முடிவின் பின்னும் தெளிவாய் கண்டீர்
ஏகனின் அர்ஷின் அருகினிலே
மாநபி பின்னால் சென்றீரே
இறையில் தோய்ந்தே மீண்டீரே
மிஃராஜை பதிந்தீரே பீரே
யா கௌஸ் க்வாலியரி ஷத்தாரி
யா பீரே காதிர் ஹக் நாகூரி
யா கிந்தீலே இர்ஃபானீ யா ரஹ்மானீ
யா கன்ஜுல் அர்ஷே ஹக்கானி நூரானீ
சரணம் – 2
இறையில் தோய்ந்த தங்கள் திருமுகம் காண
இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறேன் இப்பாவி
நானெனும் பாவச் சுழலில் சுழன்றேன் நானே
அகந்தைத் தொழும்பை உடைப்பீரே கோமானே
லா அன இல்லாஹூ என்றே இக்கணமே
ஹக்கில் கரைந்தால் ஆறும் என் ரணமே
தேடும் குருவின் பாதம் கிட்டும் வரமே
கேட்டே தங்கள் தாளில் வைத்தேன் சிரமே
காதிரெனும் கருணைக்கடலின்
சிர்ரே யா கௌஸ் க்வாலியரி
கல்பின் கடல் கடைந்தே அமுதை
பருகிட அருள்வீர் ஷத்தாரி
யா கௌஸ் க்வாலியரி ஷத்தாரி
யா பீரே காதிர் ஹக் நாகூரி
யா கிந்தீலே இர்ஃபானீ யா ரஹ்மானீ
யா கன்ஜுல் அர்ஷே ஹக்கானி நூரானீ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: