யா காதிர் மீரா | Ya Qadhir Meera | Nagoor | Tamil Sufi Song | 2024 | Shums Media Unit Presents
Автор: Shums Media Unit
Загружено: 2024-12-12
Просмотров: 29661
Описание:
Ya Qadhir Meera | யா காதிர் மீரா | Tamil Sufi Song
PRESENTS | Shums Media Unit
PRODUCTIONS | MH. Sahdi Hilal (HILAL's)
DOP | Moulavi Safraz Rabbani
MUSIC & MIXING MASTERING | K. Jude Niroshan
LYRICIST | Moulavi Fasmil Rabbani
VOCAL | MF. Mohamed Fiham
EDITING | Moulavi Bilaal Rabbani
DESIGN | Nathhar Nadhayee
CAMERA | Narendran Nirushanth
CAST | Miskee, Naja, Rajas, Zainee, Chisthee, Utharith
SPECIAL THANKS TO | Shaikhuna Misbahee Nayaham, Moulavi Qurais Rabbani, Moulavi Fayas Rabbani, Basul Azhab, Nifras, Sidreeth, Izzee
© Shums Media Unit. All Rights Reserved
#yaqadhirmeera #tamilsufisong #tamilislamicsongs #islamicsong #nagoor #நாஹூர் #newislamicsong
--------------------------------------------------------------------------
நற்குண நதியே! நறுமணப் பொதியே!
நாகூர் பதியின் வான் மதியே!
நற்குண நதியே! நறுமணப் பொதியே!
நாகூர் பதியின் வான் மதியே!
காருண்ய நதியே!
பேரின்பக் கனியே!
காதிர் வலீயே என்னுயிரே!
யா மீரா!... யா மீரா!...
யா மீரா!... யா மீரா!...
கண்தேடும் கென்ஜே ஸவா!
காரணக் கடலே! நாகூரா!...
நற்குண நதியே! நறுமணப் பொதியே!
நாகூர் பதியின் வான் மதியே!.....
அலங்கார வாசல் தூயவரே!
முகம் பார்ப்பீரா!
கலங்காத நேசம் என்னுள்ளே!
எனை ஏற்பீரா!
கரம் தாரும் காதிர் மாவலீயே!
என் கவலைகள் நீங்குமே!
தீராத பாரம் தீருமே!
உம் திருமுகம் தோன்றிட
அருள்வீரே அப்துல் காதிரே!
ஷாஹே மீரா! சர்வ கம்பீரா!
நபீமணி பேரா! நாகூரா!
ஷாஹே மீரா! சர்வ கம்பீரா!
நபீமணி பேரா! நாகூரா!
சுந்தர நாகூர் சந்திரனே! உங்கள்
சந்தனப் பாதங்கள் தாங்கனுமே
செம்மலர் மீரான் சந்நிதியில் எந்தன்
சோதனை மேகங்கள் நீங்கனுமே!
தரை ஆளும் என் பீரா! கரை சேர்த்தருள்வீரா!
இறை ஆசையில் வாழும் எனதுயிர் ஷாஹே மீரா!
கடல் தாண்டி நாகை நகர் வருவேன்!
எஜமான் அருகே!
கரம் ஏந்தி கண்ணீர் சிந்திடுவேன்!
கருணைக் கடலே!
மலர் மாலை நானும் ஏந்தி
மனம் உருகி நிற்பேனே!
மலை போன்ற பாவம் எண்ணி
மழை நீராய் அழுவேனே!
கண்களை மூடியே வலம் வருவேன்!
பூமுகம் காணவே உயிர் தருவேன்!
ஷாஹே மீரா! சர்வ கம்பீரா!
நபீமணி பேரா! நாகூரா!
ஷாஹே மீரா! சர்வ கம்பீரா!
நபீமணி பேரா! நாகூரா!
வெள்ளிக் கதவில் முட்டிடுவேன் - இந்த
ஏழையின் ஏக்கங்கள் ஏற்றிடுவீர்!
வள்ளல் பாதம் முத்திடுவேன் - இந்த
பாவியின் பாவங்கள் போக்கிடுவீர்!
எந்தன் காவலும் நீரே! எமை காத்தருள்வீரே!
உங்கள் பார்வையில் நாளும் வாழ்ந்திட வரம் தருவீரே!
நற்குண நதியே! நறுமணப் பொதியே!
நாகூர் பதியின் வான் மதியே!
நற்குண நதியே! நறுமணப் பொதியே!
நாகூர் பதியின் வான் மதியே!
காருண்ய நதியே!
பேரின்பக் கனியே!
காதிர் வலீயே என்னுயிரே!
யா மீரா!... யா மீரா!...
யா மீரா!... யா மீரா!...
கண்தேடும் கென்ஜே ஸவா!
காரணக் கடலே! நாகூரா!...
நற்குண நதியே! நறுமணப் பொதியே!
நாகூர் பதியின் வான் மதியே!.....
யா காதிர் மீரா!...........
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: