நகரத்தார் யார்? எங்கிருந்து வந்தார்கள்? DNA விளக்கம்- டாக்டர் இராம.பிச்சப்பன்.
Автор: Nattukottai Nagarathar Tv
Загружено: 2020-10-20
Просмотров: 25489
Описание:
Nattukottai Nagarathar Tvயில் வெளிவந்துள்ள மிக முக்கியமான நிகழ்ச்சி இது. நகரத்தார்கள் யார்? பட்டினத்தாரும், கண்ணகி, கோவலனும், அறுபத்துமூவரில் நால்வரும், நம் நகரத்தார் மரபில் வந்தோர் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். மன்னர் பின்னோர் என்று சொல்லுவார்கள். மன்னனுக்கு முடி சூட்டும் வாய்ப்பைப் பெற்றிருந்தோம் என்பார்கள். ஒன்பது கோவில்கள் என்று வகுத்து வைத்துள்ளோம். சுய பிரிவில் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை. ஒரே கோவிலைச் சேர்ந்தவர்களை பங்காளிகள் என்கின்றோம். நடப்பது 2020ம்ஆண்டு. எதையும் விஞ்ஞானப் பூர்வமாக விளக்கினால் தான் அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளும். டாக்டர் இராம. பிச்சப்பன் கடந்த முப்பது வருடங்களாக மரபியல் விஞ்ஞானியா பணியாற்றி வருபவர். அவரது முப்பது வருட உழைப்பில் நகரத்தார் எங்கிருந்து வந்தார்கள்? அவர்களின் டிஎன் ஏ பிரிவு என்ன? பங்காளிகளுக்கு ஒரே டிஎன்ஏ வகைதான் உள்ளதா? ஒவ்வொரு கோவிலைச் சேர்ந்தோருக்கும் தனித் தனி வகை டிஎன்ஏக்கள் உள்ளனவா? என்பதை தன் ஆராய்ச்சி மூலம் விளக்குகின்றார். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது உண்மையா? நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு காரணம் ஊழ்வினையா? தலையெழுத்து என்பது உண்மையா? தலையெழுத்தை டிஎன்ஏ குறீயீடுகள் நிர்ணயிக்குமா? மனித இனம் இடப்பெயர்வு என்பதன் மூலமே பல நாகரீங்களை அடைந்தது, அப்படி வழிப்போக்கர்களாக வந்தவர்கள்தான் நகரத்தாரா?அப்படி என்றால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இராம பிச்சப்பனின் இந்த உரையைக் கேட்கும் பொழுது நம் முன்னோர்கள் எந்த விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை அறிவாளிகளாக, விஞ்ஞான விதிப்படி வாழ்ந்துள்ளார்களா? என்று வியக்கத் தோன்றும். இந்த விஞ்ஞானப் பேருரை திருச்சி நகரத்தார் சங்க விழா2019ல் பதிவு செய்யப்பட்டது. நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியை (Nattukottai Nagarathar Tv) சப்ஸ்கிரைப் செய்யுங்கள். உங்கள் நண்பர்களின் வாட்ஸ் அப் குழுக்களில் இந்த டிவியை ஷேர் செய்யுங்கள். ஏற்கனவே வந்துகொண்டிருந்த செட்டிநாடு டிவிக்கு மாற்றாக வந்து கொண்டு இருப்பதே Nattukottai Nagarathar Tv.
விளம்பரம் மற்றும் நிகழ்ச்சி தொடர்புகளுக்கு +91 8608008999 – 9176696136
#NattukottaiNagaratharTv #DrRMPitchappan #ProfDrRMPITCHAPPAN
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: