எதிரிகளைக் கதறவிடும் 'ஜெயரஞ்சன்' யார் தெரியுமா? | Who is Jeyaranjan? | Economist | MK Stalin | TN
Автор: ABP Nadu
Загружено: 2021-06-06
Просмотров: 147868
Описание:
எதிரிகளைக் கதறவிடும் 'ஜெயரஞ்சன்' யார் தெரியுமா? | Who is Jeyaranjan? | Economist | MK Stalin | TN
#Jeyaranjan #MKStalin #TamilNadu
தமிழ்நாட்டில் மிக பிரபலமான பெயர். பொருளாதாரம் சார்ந்த விவாதம் என்றாலே அங்கு ஜெயரஞ்சன் இருப்பார்தானே என மக்களில் சிலரே கேட்கும் அளவுக்குப் பேசும் வல்லமை கொண்டவர். அவரு வந்தா நான் வரல என ஜெயரஞ்சனுக்கு எதிராக பேசுபவர்கள் ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு அவர்கள் செய்யும் தவறுகளை தோலுரித்துக் காட்டுபவர்.
பொருளாதாரத்தை சாமானியனுக்கும் புரிய வைக்கும் விதத்தில் பேசுவதில் ஜெயரஞ்சனுக்கு நிகர் ஜெயரஞ்சனே!
இலவசத்தால் மக்களை ஏமாற்றுகின்றனர் எனப் பலர் வைத்த விமர்சனத்தை, இலவசம் என்றே சொல்லாதீர்கள் என்றும் விலையில்லாமல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட நலத்திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் எப்படி வளர்ந்திருக்கிறது என்பதையும் சொல்லி புள்ளிவிவரங்களால் அவர்களுக்குப் பதிலடி கொடுத்தவர்.
விவாதங்களில் பாஜக அரசின் பொருளாதார கொள்கைகளை அக்குவேர் ஆணிவேராக பிரித்து தொங்கவிட்டவர்.
சமூகநீதி மண்ணாம் தமிழ்நாட்டில், இட ஒதுக்கீடும், திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகளும் மக்களின் வாழ்வாதாரத்தை எப்படியெல்லாம் வளர்த்திருக்கிறது எனும் புள்ளிவிவரங்களை தன் விரல் இடுக்குகளில் வைத்திருக்கிரும் வித்தைக்காரர்.
இவர்தான் இப்போது தமிழக அரசின் மாநில வளர்ச்சிக்குழுவின் துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார்
நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, இவர் எழுதிய `கருப்பு பணமும், செல்லாத நோட்டும்’ மிகவும் பிரபலம். இவர் எழுதிய `தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற புத்தகமும், இவர் மக்கள் நலனுக்கான தீப்பொறி என்பதை பறைசாற்றியது.
ஜெயரஞ்சன் 1960-ஆம் ஆண்டு மே மாதம் 29-ந் தேதி பிறந்தவர். தற்போது, திருவான்மியூரில் உள்ள கொட்டிவாக்கத்தில் வசித்து வரும் அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 1983-ஆம் ஆண்டு எம்.எஸ்.சி. பட்ட மேற்படிப்பை முடித்தார். பின்னர், புதுச்சேரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு 1984 முதல் 1994-ஆம் ஆண்டு வரை பேராசிரியராக பணிபுரிந்தார். பின்னர், 1995-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை பெற்றார்.
ஜெயரஞ்சன் பொருளாதாரம் தொடர்பாக எழுதிய கட்டுரைகள் ஏக பிரசித்தம். 1980-ஆம் ஆண்டுகளில் ஆராய்ச்சி மாணவராக ஜெயரஞ்சன் இருந்தபோது அவரது நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தூண்டுதலின்பேரில் பொருளாதார கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். தொடக்க கட்டத்தில் வேளாண்துறையையும், அதன் பொருளாதார நிலை குறித்தும் அதிகமாக எழுதிய அவர், தமிழகத்தில் காவிரிப்பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, காவிரி ஆறும், அதனால் விவசாயம் சார்ந்த பொருளாதாரம் பற்றியும் ஆய்வுக்கட்டுரை எழுதினார். புதுவை கல்லூரியில் இருந்து வெளியேறிய பிறகு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் முழுநேர ஆய்வுப் பணியாளராக பணிபுரிந்தார். இந்தியா, இந்தோனிஷியா, பிலிப்பைன்ஸ் நீர்ப்பாசனத்தின் ஒப்பீட்ட ஆய்வு குறித்து 1987 மற்றும் 88-ஆம் ஆண்டுகளில் கட்டுரைகளை எழுதினார்.
முதன்மை புலனாய்வாளராக பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய அவர், டெல்லி, வி.வி.கிரி தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்காக, 1998-99-ஆம் ஆண்டில் திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் பணியாற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றியும், 2000-01-ஆம் ஆண்டில் குரோம்பேட்டை தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றியும் எழுதியவை கடுமையான மனங்களையும் உடைத்து கேள்வி கேட்டது.
மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்துறையின் சார்பாக தேசிய குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு திட்டத்திற்காக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்களின் நிலை குறித்து முதன்மை புலனாய்வாளராக மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டவர் ஜெயரஞ்சன். தமிழகத்தில் உப்புத்தொழில்களின் கட்டமைப்பு குறித்து டெல்லி ஆய்வு நிறுவனத்திற்காக ஆய்வு செய்தவரும் அவரே.
பெங்களூரில் உள்ள இந்திய சமூக நிறுவனத்திற்காக `தலித்துகளும், பழங்குடியின மக்களும் நான்கு தென் மாநிலங்களில் இழந்தது’ என்ற தலைப்பில் முதன்மை ஆய்வாளராக ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். தமிழக அரசின் தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழகத்திற்காக வாழ்வாதார மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். யுனிசெஃப்பிற்காக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் குடிநீர் விநியோகம் மற்றும் துப்புரவு குறித்து முதன்மை புலனாய்வாளராக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார். உலகமயமாக்கல் மற்றும் சமூகத்துறை: முரு முன்னேறிய மாநிலத்தில் இருந்து ஒரு பார்வை ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியராக பணியாற்றினார். இந்தியாவில் உப்புத்தயாரிப்பின் நிலை அறிக்கை ஒன்றையும் தயார் செய்தார். 2010-ஆம் ஆண்டு ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உப்புத் கூட்டுறவு எவ்வாறு இயங்குகிறது மற்றும் அதன் கட்டமைப்புகள் குறித்து கட்டுரை எழுதினார்.
கட்டுரையை முழுமையாக வாசிக்க:
https://tamil.abplive.com/news/tamil-...
#ABPNadu #ABPNews #ஏபிபிநாடு
CREDITS:
Script: Sugumaaran
Editing: Reegan JNR
Voice Over: Dhinesh Venugopal
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: https://tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: