ஸ்டாலினின் Jeyaranjan and Team... யார் அந்த 10 பேர்? | MK Stalin | Narthaki | Jeyaranjan | Amal
Автор: ABP Nadu
Загружено: 2021-06-06
Просмотров: 233624
Описание:
ஸ்டாலினின் Jeyaranjan and Team... யார் அந்த 10 பேர்? | SDPC Team | MK Stalin | Tamil Nadu | Narthaki
#Jeyaranjan #NarthakiNataraj #MKStalin
மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. முதலமைச்சரின் தலைமயின் கீழ் செயல்படும், இந்த குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழகத்தில், மாநில திட்டக் குழு. முன்னாள் முதல்வர் கலைஞரால், 1971 ஆம் ஆண்டு மே திங்கள் 25 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதலமைச்சர் அவர்களின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மாநில திட்டக் குழுவானது, கடந்த 23.04.2020-ல் "மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக" மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவைப் பின்வருமாறு திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும்;
திரு. இராம சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும்,
பேராசிரியர் ம. விஜயபாஸ்கர்.
பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்,
மு தீனபந்து, இ.ஆ.ப.(ஓய்வு).
T.R.B. இராஜா, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்,
மல்லிகா சீனிவாசன்,
மருத்துவர் ஜோ அமலோற்பவநாதன்.
சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும்
முனைவர் நர்த்தகி நடராஜ்
உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
#ABPNadu #ABPNews #ஏபிபிநாடு
CREDITS:
Editing: Vivekanandhan
Voice Over: Dhinesh Venugopal
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: https://tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: