சகல பாவங்களை நீக்கும் ரத சப்தமி பரிகார குளியல் | Ratha Saptami 2025 in Tamil | ரத சப்தமி 2025
Автор: Aalayam Selveer
Загружено: 2025-01-28
Просмотров: 123882
Описание:
Ratha Saptami 2025 has covered in detail the Purana Behind Ratha Saptami Viratham, way to worship,Ratha Saptami Bathing Procedure, Ratha Saptami Kolam and the complete Ratha Saptami worship procedure.
Ratha Saptami 2025 Date : 4-02-2025, இந்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ரத சப்தமி குளிக்கும் நேரம் வருகிறது.
ரத சப்தமி பரிகார குளியல் செய்யும் நேரம்:
Feb 4, 2025, செவ்வாய்க்கிழமை அன்று காலை 6.35 AM சூரியோதயம், அதில் இருந்து 48 நிமிடங்களுக்குள் இந்த பாவங்களை நீக்கும் பரிகார குளியலை செய்ய வேண்டும், அதாவது 6.35 AM முதல் 7.23 AM குள் செய்யவேண்டும். இந்த குளியல் நேரம் சென்னையில் வசிப்பவர்களுக்கானது,
நீங்கள் வசிக்கும் இடத்திற்கு ஏற்ப இந்த சூரியோதய நேரம் வேறுபாடும், கூகுளில் உங்கள் ஊரின் பெயர் போட்டு தேதி குறிப்பிட்டு surise time என்று தேடினால் உங்கள் ஊரின் சூரியோதய நேரம் தெரியும், அதில் இருந்து 48 நிமிடங்களுக்குள் இந்த பாவங்களை நீக்கும் பரிகார குளியலை நீங்கள் செய்ய வேண்டும்
ரத சப்தமி பூஜை செய்யும் நேரம்:
Feb 4, 2025, செவ்வாய்க்கிழமை, காலை ரத சப்தமி பரிகார குளியலை முடித்து விட்டு 6.35 AM முதல் 8.30 AM குள் ரத சப்தமி பூஜை செய்யவேண்டும்.
ரத சப்தமி விரத முறை:
எருக்கம் இலை எப்படி வைக்க வேண்டும்?
எருக்கம் இலையின் முன் பகுதி(வழுவழுப்பான பக்கம்) நம் உடலை தொடவேண்டும், நரம்பு உள்ள பின் பகுதி வெளியே தெரிய வேண்டும்.
எருக்கம் இலையின் நுனி பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும்(கண், தோள், கால்)/ தலையில் வைக்கும் போது நுனி பகுதி முன் நோக்கி இருக்க வேண்டும்.
முதலில் தலையில் ஒரு எருக்கம் இலை, இரண்டு கண்களில் ஒரு எருக்கம் இலை, இரண்டு தோள்களுக்கு ஒரு எருக்கம் இலை, இரண்டு கால்களுக்கு இரண்டு ஒரு எருக்கம் இலை வைத்து மனதார பின்வருமாறு வேண்டிக்கொள்ளவேண்டும்.
ரத சப்தமி வழிபாடு:
கிழக்கு நோக்கி நின்றோ /உக்காந்து கொண்டோ வேண்டிக்கொள்ள வேண்டும்.
ஸப்தமி தேவியே என்னால் முன் ஏழு ஜன்மங்களிலும் செய்யப்பட்ட
1,முன்பிறவி,
2,இந்த பிறவி,
3,மனது,
4,உடல்,
5,வாக்கு,
6,அறிந்து செய்தது,
7,அறியாமல்செய்தது
என 7 ஏழுவிதமான பாபங்களால் ஏற்படப்போகும் நோயிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் என்னை விடுவிப்பாயாக.
குளியல் முறை :
பின்னர் 7 இலைகளையும் ஒன்றாக எடுத்து வைத்து குளிக்க செல்ல வேண்டும். மேல் உள்ள இலையில் ஆணுக்கு சிறிதளவு விபூதியும், பெண்ணுக்கு சிறிதளவு மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும்.
இந்த 7 இலை அடுக்கைத் தலைமீது வைத்து கிழக்கு திசை குளிக்க வேண்டும். எருக்கம் இலையின் முன் பகுதி(வழுவழுப்பான பக்கம்) நம் உடலை தொடவேண்டும், நரம்பு உள்ள பின் பகுதி வெளியே தெரிய வேண்டும், இலைகளின் நுனி பகுதி முன் நோக்கி இருக்க வேண்டும்.
#aalayamselveer #rathasaptami #rathasaptami2024 #rathasapthamimuggulu #rathasaptamirangoli
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: