வீரப்பன் தேடுதல் வேட்டை! இது வீரப்பன் கூட்டாளிகளின் கதை! பெரு நிலமே! எங்கள் கண்ணீர் தடம் காண்! | VPG
Автор: களிறாடும் காடு ராஜன்
Загружено: 2021-10-21
Просмотров: 28691
Описание:
WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
வீரப்பன் தேடுதல் வேட்டை,
இது இதுவரை அறியப்படாத
வீரப்பன் கூட்டாளிகளின்
கண்ணீர் கதை!
#veerappankuttalikal
#veerappanstory
#veerappankuttalithuppakisithen
#sethukkuligovinthanstory
#veerappanhistory
#thuppakkisithan
வீரப்பன் தேடுதல் வேட்டை!
மலை மனிதர்களின்
கொடுந்துயர் வாழ்வியல்!
சோளகர் தொட்டி நாவல்
கதை சொல்கிறார்
திரு. பவா செல்லத்துரை!
#bavachelladurai
#solakarthotti
• வீரப்பன் | துப்பாக்கி சித்தன் | சோளகர் தொட...
episode 1
வீரப்பன் தேடுதல் வேட்டை
stf கொடுமைகள்
go the above link and must watch full episode
episode 2
• வன்புணர்வு! சிறை சித்ரவதை! வீரப்பன் கூட்டா...
Go the above link and must watch full episode
வன்புணர்வு சிறை சித்ரவதை
வீரப்பன் கூட்டாளிகள் என்று
அடையாளப் படுத்தப்பட்ட
மலை மனிதர்களுடன்
குருதி உறையும்
கடுந்துயர்
வாழ்வியல்.
என் வழியெங்கும்
முகங்கள் முகங்கள் மனங்கள் மனங்கள்
பேரன்பு கொண்ட மனிதர்களை மனங்களை
தேடிச் சென்றடைவதில் தான்
என் தேடல்கள் விரிகின்றன !
ஆற்ற முடியாத துயரங்களையும்
கடக்க முடியாத பிரிவுகளையும் துடைத்து வீசிவிட பேரன்பு கொண்ட மனிதர்களின்
ஒரே ஒரு சந்திப்பு அதை நிகழ்த்தி விடுகிறது!!
இது
எவரும் அறியாத
வீரப்பன் கூட்டாளிகளின்
நெடுரந்துயர் வாழ்வியல் !!
கண்ணீர்
தடம்!
எளிய மக்களிடம் செல் !
அவர்களை நேசி !
அவர்களை உணர் !
அவர்களிடம் கற்றுக் கொள் !
அவர்களுக்கு
தெரிந்ததிலிருந்து தொடங்கு !
அவர்களிடம் இருப்பதிலிருந்து
கட்டமை !
மிகச் சிறந்த தலைவர்கள்
பணி முற்றுப் பெற்றதும்
மக்களை நாங்களாகவேதான்
முடித்தோம் என்று
சொல்ல வைப்பார்கள் !!
தாவோ.
வணக்கம் தோழர்!💞❤️💞 என் பெயர் ராஜன் .நான் சத்தியமங்கலம் வனப்பகுதி குண்டேறிப்பள்ளம் அருகில் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி க்கு வடக்கே வனப்பகுதி யை ஒட்டி வாழும் சிறு விசாயக்குடும்பம் ! ஐயா வீரப்பன் அவர்கள் ....குண்றி, கடம்பூர்,மாக்கம் பாளையம் பகுதியில் இருந்த பொழுது அப்போது எனக்கு வயது 8 . ரேஞ்சர் சிதம்பரம் அவர்களை வீரப்பன் ஐயா சுட்டுக்கொன்ற இடத்திற்கு மலையை ஒட்டி கிழக்குப்பக்கம் எங்களது காடு ! ரேஞ்சர் அவர்கள் குண்டடிப்பட்டு மல்லாந்து கிடந்ததை நேரில் பார்த்தவன் ! தற்பொழுது எனக்கு வயது 38. இன்றளவும் அந்த காட்சி மன அடுக்கில் அழியாத புகைப்படமாய் அப்படியே இருக்கிறது ! அவரது வலது மார்பில் குண்டு துளைத்திருந்தது .மேல் சட்டைக்கு உள்ளே வெள்ளை முண்டாசு பனியன் அறிந்திருந்தார் . கழுத்தில் பெரிய டாலர் சையின் ஒன்று கிடந்தது. பெரிய பெரிய அதிகாரிகள் சுற்றி நிற்க ... கண்களில் பீதியோடு நின்ற நாட்களை இன்றளவும் மறவேன் !
அதுவல்ல விசயம் ! என் தகப்பனார் பெயர் ...சீரங்கன் . என் தாய் தந்தை க்கு நான் ஒரே மகன் ! காட்டில் விவசாயம் கிடையாது ..என் தகப்பனார் காட்டில் பட்டி போட்டு நிறைய ஆடு மாடுகள் வைத்து வனத்தில் மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தோம் ! இங்கே விரிவாக சில விசயங்கள் பேச இயலவில்லை ! சுருக்கமாக சொல்கிறேன் !
என் தகப்பனார் வீரப்பன் ஐயாவை கண்ணால் கண்டதுகூடக்கிடையாது!
பின்னாலில் STF ஆட்கள் சந்தேகத்தின் பேரில் பொய்வழக்கு போட்டு என் தகப்பனாரையும் .. பக்கத்து காட்டுக்காரர் குருநாதர் என்பவரையும் பிடித்துக் கொண்டு போய்....தட்டகரை,தாமரைகரை, மாதேஸ்வரன் மலை கேம்ப்களில் வைத்து செய்த சித்ரவதை சொல்லி மாளாது ! காது மடல்களிலும் ...ஆண்குறியிலும்.... மின்சாரம் வைத்து செய்த சித்திரவதை ரத்த வரலாறு ! இதை எழுதும் போது கூட கண்கள் திரை மறைவதை தவிர்க்க இயலவில்லை ! ஒரு பாவமும் அறியாதவர்கள் என் தகப்பனாரும், குருநாதரும் ! காது மடல்களில் மின்சாரம் பாய்ந்ததால் குருநாதருக்கு தற்பொழுது பார்வையில் லை ! என் தகப்பனார் மிகவும் திடகாத்திரமானவர் . மின்சாரத் தாக்குதலால் நரம்பு தளர்ச்சிக்கு ஆளாகி நாளுக்கு 18 முறை ஜன்னி கண்டு செத்தே போனார் . தற்பொழுது குருநாதர் குருடராய் நிலுவை . STF எங்கள் குடும்பத்தையே நாசம் செய்து போனார்கள் ! STF ஆட்கள் தகப்பனாரை கொண்டு போனபோது எனக்கு வயது 14. விபரம் அறியாத வயது ! எந்த வித ஆதரவும் இல்லாமல் என் தாயும் நானும் ..தட்டகரைக்கும் ,தாமரை கரைக்கும், மாதேஸ்வரன் மலைக்கும் அப்பனைத்தேடி அலைந்த நாட்கள் இன்றளவும் தொண்டை அடைக்கும் ரணம் !
• பயணிக்காதவளுக்கு கால்கள் எதற்கு? வனம் போவோ...
Go the above link and must watch full video
M : 9025115646
M : [email protected]
KALIRADUM KADU RAJAN
MOBILE : 9025115646.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: