சங்க கால நட்பு, கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு, Friendship in Sangam
Автор: முயற்சி முருகேசன் Muyarchi Murugesan
Загружено: 2022-01-03
Просмотров: 336
Описание:
வணக்கம்.
இலக்கியங்கள் வகைப்படுத்தியிருக்கும் உறவுகளில் நட்பு சிறப்பிடம் பெறுகின்றது. தாய் - பிள்ளை, கணவன்- மனைவி என்ற உறவுகளுக்கு ஈடாகப் போற்றப்படுகின்ற உயர் உறவு நட்பாகும். நட்புக்காகத் திருக்குறள் நான்கு அதிகாரங்களை ஒதுக்கியிருக்கின்றது.
“நெஞ்சத்து அகநக நட்பது நட்பு' என்றும், "அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு" என்றும், "இடுக்கண் களைவதாம் நட்பு" என்றும், "கொட்புன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை' என்றும் நட்புப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார் வள்ளுவர்.
கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையர்
இலக்கியங்கள் இன்றுவரை போற்றிக் கொண்டாடும் நட்பு பிசிராந்தையர் என்ற புலவருக்கும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனுக்கும் இடையிலானது.
பாண்டிய நாட்டிலே பிசிர் என்ற ஓர் ஊர் இருந்தது. இந்த ஊரிலே வாழ்ந்த ஒரு புலவரின் பெயர் ஆந்தையார். ஊரின் பெயரைக் கூடவே இணைத்து தன் பெயர் கொள்வது அக்கால புலவோர் வழக்கம். இவரும் பிசிராந்தையர் ஆனார்.
இவரது நாடு பாண்டிநாடு ஆயினும் சோழ மன்னனான கோப்பெருஞ்சோழனின் நல்லியல்புகளைக் கேள்வியுற்று அவன் மேல் பேரன்பு கொண்டார். தமிழ்மேல் பெருங்காதல் கொண்ட சோழன் செய்யுள் இயற்றுவதிலும் வல்லவன். புலவோரைப் போற்றுவதிலும் உயர்ந்தவன். இத்தகைய ஒரு மன்னன் மீது தமிழ்ச்சான்றோர் பேரன்பு கொள்வது இயல்பே.
பிசிர் என்ற ஊரிலிருந்து நெடுந்தொலைவில் இருந்தது சோழனின் உறையூர். சோழனைக் கண்டு வர பிசிராந்தையரால் முடியவில்லை.
அக்காலத்தில் சிறந்த செய்யுள்களை இயற்றிப் புகழ்பெற்றிருந்தார் பிசிராந்தையர்.
“யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின், .....”
என்று தொடங்கும் இவரது செய்யுள் பெரும் புகழ் பெற்றது. இவை யாவற்றையும் செவியற்ற சோழனும் பிசிராந்தையர் மீது பெரும் அன்பு கொண்டான். பாண்டி நாட்டுக்குச் செல்வோர் வாயிலாகத் தன் அன்பைப் புலவருக்குத் தெரிவித்துவந்தான்.
இந்நிலையில் கோப்பெருஞ்கோழனது கொடையும் புலவரைப் போற்றும் மாண்பும் அவனது புதல்வர்களுக்கு எரிச்சலை மூட்டியது. தந்தையோடு போரிட்டு அரசைக் கைப்பற்றத் தயாராயினர். சூழ்ச்சிகளோடு கலந்து மூண்ட போரில் தன் புதல்வரைக் எதிர்க்கத் தயாரான கோப்பெருஞ்சோழனை புலவர் எயிற்றியனார் தடுத்தார். ‘மன்னா நீ மறைந்த பிறகு இந்த நாடு யாருக்கு? அவர்களுக்குத்தானே’ என உணர்த்தினார்.
புதல்வர்களை மன்னித்து அவர்களுக்கு அரசை வழங்கிவிட்டு வடக்கிருந்து உயிர்நீக்கப் புறப்பட்டான் சோழன்.
இந்த செய்திகள் எதுவும் பிசிராந்தையருக்குத் தெரியாது.
வடக்கிருக்கச் சென்ற சோழன் உடன் சென்ற பலவர் பொத்தியாரை நோக்கி, பொத்தியாரே, என் நண்பர் பிசிராந்தையார் என்னைக் காண வருவார். அவரிடம் என் அன்பைத் தெரிவித்துவிடுங்கள் என்றான்.
“மன்னா அது எப்படிச் சாத்தியம்? இங்கு நடந்த எதுவும் அவருக்குத் தெரியாதே?”
“அவர் நிச்சயம் என்னைக் காண வருவார்” என்றான் சோழன் உறுதியுடன்.
நட்பின் மிகுதியால் மன்னர் கருத்திழந்து பேசுகின்றார் என அருகிருந்த சான்றோர் தமக்குள் பேசிக்கொண்டனர். இது மன்னன் செவியில் விழுந்தது.
“பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.” (புறம் 215)
“பிசிர் எனும் ஊரைக் கொண்டோன் நான் செல்வச் செழிப்போடு இருந்தவேளை என்னைக் காண வருபவன் அல்லன். நான் துன்பமுற்றிருக்கும் வேளையிலேயே வரக் கூடியவன். நிச்சயமாக வருவான்” என்றான் மன்னன்.
கூட இருந்தோர் அனைவரும் அதை நம்பவில்லை ஆயினும் மன்னன் வேண்டுகோளை ஏற்றனர்.
நீரும் உணவும் இன்றி வடக்கிருந்து உயிர்நீத்தான் சோழன். அரசன். இறந்த ஓரிரு நாட்களில் அவன் கூறியதைப் போன்றே பிசிராந்தையர் அங்கு வந்தார். அவர் வரவு கண்டு எல்லோரும் வியந்தனர். நடந்ததைக் கூறினர். ஆறாத் துயர் கொண்டார் பிசிராந்தையர். மரணத் தறுவாயிலும் மன்னன் கொண்டிருந்த நடபின் ஆழம் அவரைத் துயரத்தின் எல்லைக்கு இட்டுச் சென்றது.
மன்னன் வடக்கிருந்து உயிர்நீத்த இடத்திற்கு இருகே தானும் வடக்கிருந்து உயிர்நீத்தார்.
கண் கொண்டு காணாத இருவரின் நெஞ்சார்ந்த நட்பின் ஆழத்தை பொத்தியார் துயரம் சொரியப் பாடினார்.
“இசைமரபு ஆக நட்பு கந்தாக
இனியதோர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே." (புறம் 217)
புகழ் மேம்பாடு அடையும்படியாக நட்பையே பற்றுக்கோடாகக் கொண்ட “மன்னன் நல்லதொரு பொழுதில் என் நண்பரான பிசிராந்தையர் இங்கு வருவார்” என்றான். இவ்வாறு உரைத்த மன்னனமு பெருமையும், மன்னன் கூற்று பொய்க்காவண்ணம் வந்துசேர்ந்த பிசிராந்தையரின் அறிவும் பெரு வியப்பைத் தருகின்றது.
காலம் உள்ளவரை போற்றப்படவல்ல இலக்கிய நட்பு இதுவெனச் சான்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: