ஆன்லைன் கோர்ஸ் மோசடி!
Автор: MADRAS KURAL 360
Загружено: 2023-10-03
Просмотров: 34
Описание:
இணையதளம் மூலம் ஆன்லைன் 'சர்டிபிகேட் கோர்ஸ்' நடத்துவதாக கூறி பணமோசடி செய்தும், தற்கொலைக்கு தூண்டும் விதமாக அச்சுறுத்தியும் வரும் கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப் பட்டது.
மனு சுருக்கம்: "எங்களுக்கு தெரியாமலே ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் எங்கள் பெயரில் பணம் பெற்றதோடு; வாங்கிய கட்டணத்துக்கு ஏற்றவாறு சரியான முறையில் கோர்ஸ் சொல்லிக் கொடுக்க வில்லை- மேலும், தனியார் நிதி நிறுவனம் மூலமும் மிரட்டுகிறார்கள்.
ஸ்கில் லிங்க் (skill link) நிறுவனத்தில் (post graduate program in data analytics & Data science) மூன்று மாத கோர்ஸ் படித்தால் நல்ல நிறுவனத்தில் வேலை வாங்கி தருவோம் என வாக்குறுதி அளித்தனர்.
3 மாதங்கள் படிப்பதற்கு ஒரு நபருக்கு ரூ.7,500 முதல் 8,000 வரை செலுத்தக் கூறி, 'லிங்க் ஆப்' ஒன்றை அனுப்பி வைத்தனர். முடிவில் எல்லாமே ஏமாற்று வேலை என தெரிந்து போனது. உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களுக்கு உதவிட வேண்டுகிறோம்" - இவ்வாறு மனுவில் சொல்லப் பட்டிருந்தது.
#job #jobs #online #onlineclasses #awareness #cmotamilnadu #madraskural #tngovt #police #programming #skills #graduation #web
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: