திருச்சி துடையூர் அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை விஷமங்களேஸ்வரர் திருக்கோயில்(2 ஆயிரம் வருடம் பழமை)
Автор: ASTRO SENTHIL
Загружено: 2023-01-07
Просмотров: 9429
Описание:
உடம்பில் உள்ள அனைத்து விதமான நரம்பு சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்த கூடிய சக்தி உடைய திருத்தலம்.
வாதம் மற்றும் மூட்டு சம்பந்தமான வியாதிகளை குணப் படுத்தக்கூடிய ஸ்தலம்.
இந்த திருக்கோயிலில் தரக்கூடிய வாத முனிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணையை உடலில் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து தடவி வர வியாதி குணமாகும்.
ராகு-கேது சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த திருத்தலத்தில் உள்ள புற்று கண்ணுக்கு வழிபாடு செய்யும் பொழுது இந்த தோஷத்தினால் ஏற்பட்டுள்ள தடைகள் நீங்கி திருமணம் மற்றும் சுபகாரியங்கள் கைகூடும்.
திருமணம் ஆகாதவர்கள் திருமணத்தடை இருப்பவர்கள் இந்த திருத்தலத்தில் வந்து வேண்டினால் திருமணம் கைகூடி வரும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த திருத்தலத்தில் வந்து வேண்டும் பொழுது குழந்தை பாக்கியம் உண்டாகிறது.
பெண் குழந்தைகள் சரியான வயதில் பூப்பு அடையாமல் இருந்தாலும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருந்தாலும் இந்த திருத்தலத்தில் வந்து சிவ துர்க்கை அம்மன் வழிபாடு செய்தால் அனைத்தும் சரியாகும்.
கல்வியில் தடை இல்லாமல் சிறந்து விளங்க இத்திருத்தலத்திற்கு வந்து வீணை இல்லாமல் இருக்கும் சரஸ்வதி மற்றும் கையில் வீணையுடன் நின்ற கோலத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்தால் நல்ல கல்வி கிடைக்கும்.
ஜோதிடக் கலையை சிறப்பாக கற்றுக்கொள்ளவும் சிறந்து விளங்கவும் இந்தத் திருத்தலத்தில் வந்து வழிபாடு செய்யலாம்.
குறிப்பு :
இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான இந்த திருத்தலத்தை வந்து அனைவரும் கண்டு மகிழுங்கள்.
இந்தத் தளத்தைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
அவ்வளவு விசேஷங்கள் இந்தக் கோயிலில் புதைந்துள்ளன.
இந்தக் கோயிலைப் பற்றி விவரிக்க எனக்கு அனுபவம் இல்லை வயதும் இல்லை.
முடிந்தால் உங்களுக்கு பிராப்தம் இருந்தால் இந்தக் கோயிலுக்குச் சென்று இந்தக் கோயிலைப் பற்றிய விசேஷங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த கோயிலில் இருக்கும் குருக்கள் பரம்பரை பரம்பரையாக இத்திருத்தலத்தில் சேவை செய்து வருகிறார்கள்.
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்,
இந்த மாதிரி உள்ள பழமையான திருக்கோயில்களை காப்பதும் பாதுகாப்பது நம்முடைய கடமையாகும்.
ஆகையால் ஒவ்வொருவரும் உங்களால் முடிந்த உதவிகளை ,
அதாவது கோயிலுக்கு தேவையான பூஜை சாமான்கள் தீபம் ஏற்றும் நல்லெண்ணெய் மற்றும் கோயிலுக்கு தேவையான மற்ற பொருட்கள் அல்லது கோயிலில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்து இருந்தால் அதை சரி செய்வது போன்ற உதவிகளை செய்யலாம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: