கம்பராமாயணம் (வாலி வதைப் படலம்) திருவள்ளுவர் பல்கலைக் கழகப் பாடத்திட்டம்.இரண்டாம் ஆண்டு
Автор: தமிழ் விவேகா பாரி
Загружено: 2020-09-26
Просмотров: 48665
Описание:
கிட்கிந்தா காண்டம். வாலி வதைப் படலம்.
கதைச்சுருக்கம்
வாலி சுக்ரீவன் ஆகிய இருவரும் அண்ணன் தம்பி. வாலி மாயாவி என்ற அரக்கனிடம் போரிடுவதற்காக குகைக்குள் செல்கின்றான்.நெடு நாளாகியும் வாலி திரும்ப வராததால்,வானரக் கூட்டங்கள் சுக்ரீவனை அரசனாக ஏற்றுக் கொண்டார்கள்.திரும்ப வந்த வாலி சுக்ரீவன் மீது கோபம் கொண்டு அவன் மனைவியைக் கவர்ந்து சென்றான்.இதை அறிந்த இராமன் சுக்ரீவன் மீது இரக்கம் கொண்டு அவனுக்கு உதவும் பொருட்டு வாலியின் மீது மறைந்து நின்று அம்பு எய்தி கொன்றான்.
1.கம்பராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?
ஆறு காண்டங்கள்.பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம் ,சுந்தர காண்டம், யுத்த காண்டம்.
2.இராமன் மறைந்திருந்து அம்பு எய்தமைக்கானக் காரணம் என்னவென்று இலக்குவன் கூறினான்.
சுக்ரீவனைப் போல நீயும் என் அண்ணன் முன் நின்று அடைக்கலம் கேட்டு விட்டால்,உன்னை தென்புலம் அனுப்புவேன் என்று சுக்ரீவனிடம் கூறியது பொய்த்து விடும் என்பதால் என் அண்ணன் மறைந்து நின்று அம்பு எய்தினார்.
2. வாலி இராமன் இடத்தில் நான் செய்த குற்றம் என்ன என்று கேட்டான்?
I. உன் தம்பி மீது குற்றம் இல்லை என்று தெரிந்த பின்பும் அவனை கொல்ல முயன்றாய்.ll. உன் தம்பியின் ஆருயிர் அனைய மனைவியைக் கவர்ந்து சென்றாய்.
4. தன் தவறை உணர்ந்த வாலி ராமனிடத்தில் என்ன வேண்டுகோள் வைத்தான்?
மலர்களில் உண்டாகும் மதுவை குடித்து அறிவு திரிந்து செய்ய தகாத காரியங்களை என் தம்பி செய்தாலும் செய்யக்கூடும் அப்போது என் தம்பி மேல் வெகுண்டு என் மீது செலுத்திய அம்பு என்கின்ற எமனை அவன் மீது செலுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: