ஓசூர் சார ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்....
Автор: Ethir Neechal tv 24x7
Загружено: 2025-05-03
Просмотров: 269
Описание:
ஓசூர் சார ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாதத்தின் முதல் வாரத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகின்றது இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஓசூர் சாராட்சியார் பிரியங்கா அவர்கள் தலைமை வகித்தார்
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் வேளாண்மை துறை இயக்குனர்கள் மாவட்ட வன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விவசாயிகள் குறைந்திருக்கும் கூட்டத்தில் சூளகிரி தாலுகா அஞ்செட்டி தாலுக்கா தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பி,கே, கணேஷ் ரெட்டி தெரிவிக்கையில்.
சூளகிரி தளி அஞ்சட்டி தேன்கனிக்கோட்டை பகுதிகளில் உள்ள ஏரிகளை ஆகிரமிப்பு செய்யப்பட்டுள்ளனர் அதனை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அதேபோன்று மலை கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக சாலை வசதியின்றி தவித்து வருகின்றனர் இதனால் அந்த மலை கிராம மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் குறிப்பாக நீர்நிலை ஆதாரமாக உள்ள அரசு நிலங்களை சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் அதனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீட்டு தர வேண்டும் அதேபோன்று வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில்யானைகள் ஊருக்குள் வந்து உலா வருவதை வனத்துறை அதிகாரிகள் மெத்தனப்போக்கின் காரணமாக யானைகள் ஊருக்குள் உலா வந்து அட்டகாசம் செய்கிறது இதனால் அதிகாரிகள் உயிர் பலிகள் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் வனத்துறை அதிகாரிகள் சிலர் விவசாயிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் தொலைபேசி எண்களை தூண்டிக்கப்படுகிறார்கள் இதற்கு ஒரு முறையான தீர்வு காண வேண்டும் தாலுகா பகுதிகளில் உள்ள வருவாய் துறை அதிகாரிகள் விவசாயிகள் கொடுக்கப்படும் மனுக்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகிறது வருவாய்த்துறை அதிகாரிகள் சிலர் அதுமட்டுமின்றி சூளகிரி பகுதியில் உள்ள சிறு குரு நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவினால். விவசாயிகள் விளையும் பயிர்கள் கருகி நாசமாகிறது மாவட்ட ஆட்சியர் ஓசூர் சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு வழங்கப்பட்டது அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி ஆனால் இந்த நாள் வரைக்கும் வருவாய் துறை அதிகாரி நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்கு காட்டி வருகின்றனர் ரசாயன கழிவினால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது விவசாயிகளுக்கு இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மனு வழங்கியும் சிறு குறு நிறுவனங்களிடமிருந்து உரிய நிவாரணம் பெற்று தரவில்லை என தெரிய வருகிறது எனவே மாவட்ட ஆட்சியர் சார் ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டாலும் வருவாய்த்துறை அதிகாரிகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து கையூட்டல் பெற்றுக்கொண்டு விவசாயிகள் கொடுக்கப்படும் மனுக்களை குப்பை கிடங்கில் போடப்படுகிறார்கள். அதேபோன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் இருந்து கெலவர்பள்ளி அணைக்கு வரும் ரசாயன கழிவுநீரால் விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் இதனை உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ஒரு தீர்வு காண வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பி,கே,கணேஷ் ரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்..
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: