கயத்தாறு | வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் பெயர் நீக்கம் | வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
Автор: Jayam Entertainment
Загружено: 2020-01-08
Просмотров: 67
Описание:
#Election #Voternamelist #kayathar
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் வடக்கு இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் கடந்த 30ம் தேதி நடைபெற்றது. வடக்கு இலந்தைகுளம் ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு உமா வீரபத்திரன், வள்ளித்தாய் தங்கையா ஆகியோர் போட்டியிட்டனர்.இவர்களது பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் போட்டியிட்டனர்.
கடந்த டிசம்பர் 23ம் தேதி வெளியிடப்பட்ட துணை வேட்பாளர் பட்டியலில் உமா மற்றும் அவரது கணவர் வீரபத்திரன் ஆகியோரது பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதற்கு முன்பே அவர்கள் இருவருக்கும் வாக்களிப்பதற்கான பூத் சிலிப் வழங்கப்பட்டிருந்தன. இதையடுத்து அவர்கள் மாநில தேர்தல் ஆணையத்தை தொடர்புகொண்டு கேட்டபோது தேர்தலில் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 30ம் தேதி நடைபெற்ற தேர்தலில் இருவரும் வாக்களித்தனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது வடக்கு இலந்தைகுளம் ஊராட்சி 3வது வார்டில் பதிவான வாக்குகள் மட்டும் வகை பிரிப்பு செய்து சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் தனி வாக்கு பெட்டியில் வைத்து சீலிடப்பட்டது.
வேட்புமனு தாக்கல், பரிசீலினையின் போது வேட்பாளர்கள் பெயர் இருந்தது . ஆனால் அதன்பின் வெளியிட்ட துணை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் தேர்தல் ஆணைய விதிகளின் படி வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
JAYAM NEWS16 Tamil News Channel in YouTube . We are committed to Give you an Unbiased, Straightforward and a balanced News, knowledge and Cinema programme with credibility. we can assure you that we will bring the best of the world in Tamil Language .. " Be with Us to know the real Truth " come to us for very day updates
To Subscribe JAYAMNEWS16
Share this link
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: