ஆகாய ஊஞ்சல் /முழு நாவல்//PremiBala Novels/TamilNovels Audiobooks/Tamil Novels/Audio Novel
Автор: PremiBala Novels
Загружено: 2024-01-18
Просмотров: 59979
Описание:
@TamilNovelsAudiobooks
"அண்ணே...நாளைக்கு காலையிலே குறிச்ச நேரத்திலே என் பையன் கல்யாணம் நடக்கணும். இப்போ நடக்காட்டி எப்பவும் நடக்காதுன்னு அந்த ஜோசியர் வேற சொல்லியிருக்காரு. சுந்தரியை என் பையனுக்கு கட்டிக் கொடு." என்ற தங்கையின் பேச்சில் அதிர்ந்து நின்ற சின்னசாமி என்ன சொல்வதென்று புரியாமல் தயங்கி நின்றார்.
"அத்தை, இதென்ன அநியாயம்? பொண்ணு ஓடிப் போயிட்டான்னா, அதுக்கு என் தங்கச்சி பலியாடு ஆகணுமா என்ன?" என்று பொண்ணு சொல்ல,
"வாடி, எங்க அண்ணன் பெத்த மவளே. என் பையனை கட்டிக்கிறதுக்கு கசக்குதா அவளுக்கு? நீ பண்ணி வச்சிருக்க வேலைக்கு உனக்கு எவனும் வர மாட்டான். உனக்கு கல்யாணமாகாம அவளுக்கு மட்டும் எங்கே ஆகப் போகுது? ஏதோ போனாப் போகுதுன்னு பொண்ணு கேட்டா, ரொம்பத்தான் அலட்டிக்கிறியே?" என்று அத்தை எப்போதும் போல நாக்கில் நரம்பில்லாமல் பேசினார்.
பொண்ணு பதில் பேச வாயெடுக்கும் முன், "ரங்கம், சுந்தரி வேண்டாம். பொண்ணுவை மருமகளா எடுத்துக்கறியா?" என்று சின்னசாமி வினவ, அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
"அந்த ராங்கிக் காரியா?" என்று அதிர்ந்த அத்தைக்கும் ஒரு நொடியில் மனம் மாறியது.
பெரியவள் என்று பாராமல் எவ்வளவு பேசியிருப்பாள். இவளை மருமகளாக்கி அதற்கெல்லாம் பழி வாங்கினால் என்ன? என்ற குருட்டு யோசனை தோன்ற, "அவ ஒத்துக்கணுமே அண்ணே?" என்றார்.
மகளிடம் வந்த சின்னசாமி, "பொண்ணு, நீ என்னை அவமானப் படுத்தினத்துக்கு கடைசி வரை உன் கூட பேசக் கூடாதுன்னு தான் இருந்தேன். இப்போ என் வைராக்கியத்தை விட்டுட்டு உன்கிட்ட கேட்கிறேன். முத்துவை கல்யாணம் பண்ணிக்கோ. நீ என்னை அப்பாவா நினைக்கிறது உண்மைன்னா, அவனை கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கு கல்யாணம் ஆனா தான் சுந்தரிக்கு நான் மாப்பிள்ளை பாக்க முடியும்." என்று அழுத்தமாக சொல்ல, பொண்ணு நிலைகுலைந்து போனாள்.
Hi All,
This is the official channel for Premalatha Balasubramaniam's Audio novels.
Please do subscribe, like, share.
Link for other full novels :-
• Tamil Audio Novels
To read my novels in Amazon :-
https://www.amazon.in/s?k=premalatha+...
3https://www.amazon.com/PREMALATHA-BAL...
Thank you all for your support.
#tamilnovelsaudiobooks
#tamilnovelsonline
#tamilaudionovels
#newaudionovels
#fullaudionovel
#audionovelstamil
#tamilnovelsonline
#tamilnovels
#tamilstories
#AudioBooks
#romancestory
#familystory
#tamilvoiceover
#lovestory
#tamilromanticnovels
#premalatha_balasubramaniam_novels
#audionovelstamil
#tamilaudionovels
#ramanichandran_novels
#ramanichandrantamilnovelsaudio
#rcnovelsaudio
#PREMIBALANOVELS
#PREMIBALA_NOVELS
#தமிழ் ஒலிப்புத்தகம்
#தமிழ் நாவல்கள்
#தமிழ் கதைகள்
#trending
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: