கன்னிமார் தெய்வங்கள் உருவான வரலாறு | அவர்களின் ஏழு பெயர்கள் என்ன?
Автор: MAHESHA CREATIONS
Загружено: 2025-03-30
Просмотров: 546
Описание:
கிராமங்களில் உள்ள கோவில்களில் கன்னிமார்கள் என்று 7 பெண் தெய்வ சிலைகளை வைத்து நாம் அனைவரும் வழிபடுவது வழக்கம் அந்த 7 பெண் தெய்வங்களை நாம் ஏன் வழிபடுகிறோம் அவர்கள் எப்படி உருவானார்கள் வாருங்கள் அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
பண்டைய காலத்தில், பூமியில் மனிதர்கள் சந்தோஷமாகவும் அமைதியுடனும் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், அந்த அமைதி நீடிக்கவில்லை. மிகவும் சக்தி வாய்ந்த ஒரு அரக்கன் தோன்றினான். அவனுடைய பெயர் வித்திராசுரன். அவன் கொடூரமான அரக்கனாகவும் இருந்தான், பல ஆண்டுகள் தவம் செய்து பிரம்மனிடமிருந்து பல அபாரமான சக்திகளை பெற்றிருந்தான்.
அவன் மூவுலகத்திர்க்கும் தானே தலைவனாக வேண்டும் என்று எண்ணி தேவர்களை அடிமைகளாக மாற்றினான். மனிதர்கள் அவனது கொடுமையால் மிகவும் துன்பத்தில் இருந்தனர். இவற்றை தாங்க முடியாமல் தேவர்கள் பார்வதி தேவியை நாடிச் சென்றனர். அம்மா இந்த கொடுமையில் இருந்து எங்களுக்கு யார்?விடுதலை தரபோகிறார்கள் இந்த கொடூர அரக்கனை
யார் அழிக்கப்போகிறார்கள்?" என்றும் அவரிடம் கேட்டனர்
உடனே பார்வதி தேவி தன்னுடைய சக்தியால் ஏழு ஒளிவடிவங்களை உருவாக்கினாள். அந்த ஒளிகள் உருவமடைந்து ஏழு சக்தி பெண்களாக வெளிப்பட்டன. இவர்கள் தான் ஏழு கன்னிமார் —பிரம்மி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி
அந்த ஏழு கன்னிமார்கள் வித்திராசுரனை எதிர்த்தனர். அவர்கள் மிகவும் சக்தி மிக்க வீராங்கனைகளாக இருந்தனர்! ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்த ஆயுதங்களை ஏந்தியிருந்தனர்.
வித்திராசுரன் முதலில் தனது சேனைகளை அனுப்பினான். ஆனால், பிரம்மி தனது யோக சக்தியை கொண்டு அந்த மாயைகளை அழித்துவிட்டாள். மஹேஸ்வரி தனது திரிசூலத்தால் ஆயிரக்கணக்கான அசுரர்களை அழித்தாள். கௌமாரி வேலால் எதிரிகளை தாக்கினாள். வைஷ்ணவி தனது சக்கரத்தால் சக்திகளை அழித்தாள். வராகி தனது கோப சக்தியை கொண்டு நிலத்தை உலுக்கியாள். இந்திராணி வஜ்ராயுதத்தால் மின்னலை உருவாக்கி அசுர சேனைகளைச் சிதறடித்தாள்.
வித்திராசுரன் கடும் கோபத்துடன் நேரடியாக போர்க்க்களத்தில் இறங்கினான். அவன் பல வகையான மாயவலிகளை பயன்படுத்தினான். ஆனால் சாமுண்டி அவனுடைய மாயையை அழித்து, அவனை நோக்கி சென்றாள்
ஒரு கடுமையான யுத்தத்திற்குப் பிறகு, சாமுண்டி தனது கோப சக்தியை கொண்டு வித்திராசுரனை மண்ணில் வீழ்த்தினாள். அவனுடைய உடலிலிருந்து தீப்பொறிகள் பறந்தன.
"ஓம் சக்தி! ஓம் சக்தி! #பார்வதி #அம்மன் #அம்மன்அருள்வாக்கு #அம்மன்கோவில் #அம்மன்வாக்கு #அம்மன்வழிபாடு #கதை #கதைகள் #கதைகேப்போம் #கதைகேட்போம் #கதைகளால்_இணைவோம் #கதைநேரம் #கதைபடிப்போம் #சாமிகதைகள்#சாமி #amman #ammnblessings #god #devotional #godstory#devotionalstory#bhakti
#tamilstories #tamilstory #tamil #spirituality #spiritualjourney #spiritualhistory #spiritual #kathaikalam #godstatusonly #godstatus #devotionalsongs #devotion #devocional #devotees #bhkti #bhaktibhajan #bhakthisongs #bhaktisong #bhaktistatus #bhakthi #tamilstories#swami#பக்தி #பக்திக்கதைகள் #பக்திகதைகள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: