கன்னி. சிப்பிப்பாறை வேட்டை நாய் பண்ணை | துரை நாட்டு நாய் பண்ணை | ராஜபாளையம்
Автор: Hello Madurai
Загружено: 2023-10-05
Просмотров: 12523
Описание:
#dog #dogs #doglover #doglovers #dogshorts #viralvideo #indiandog #indiandoglovers #indiandogbreeds #indiandogs #kanni #kannidogs #kannidog #chippiparaipuppy #chippipari #chippiparaihound #chippiparaidogs #chippiparaidog #chippiparai #சிப்பிப்பாறை #சிப்பிப்பாறைநாய் #கன்னி #கன்னிநாய் #வேட்டைநாய் #நாட்டுநாய்கள்வளர்ப்பு
👉 Durai.Karthigaiselvakumar, M.E
DURAI FARM VENTURES - PROPRIETOR
👉 Contact Number: 8940095559
👉 Address: Tenkasi Main Road, Krishnapuram OP Rajapalayam Taluk. 626143.
👉 பயண அனுபவம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் பண்ணை வீடியோ எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆறு மாதங்களுக்கு முன்பாகவே பொறியாளர் திரு.துரை அவர்கள் அவரது நாட்டு நாய் பண்ணை குறித்து வீடியோ எடுக்க தொடர்பு கொண்டார். அதற்கான காலம் இப்பொழுது கனிந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
நாய் பண்ணைகள் என்பது வியாபாரம் என்பதை தாண்டி ஒவ்வொரு பண்ணையாளரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். ஏதோ வீடியோ பதிவுக்காகவும். அதில் வரும் வருமானத்திற்காகவும் மட்டுமே நான் எப்பொழுதும் பயணிப்பதில்லை. நல்ல மனிதர்களைத் தேடியும் தான்.
படித்தவர்கள் எல்லோரும் பண்பானவர்கள் என்று கூறிவிட முடியாது. ஏனெனில் கல்வி அறிவுக்கும், வாழ்வியல் அறிவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அதை அனுபவத்தால் மட்டுமே கற்றுக் கொள்ளக்கூடும்.
அந்த வகையில், திரு,துரை அவர்கள் படித்த பண்பாளர். சக மனிதருக்கு மரியாதை வெறும் வார்த்தைகளால் மட்டுமே கொடுத்துவிட முடியாது என்பதை முழுமையாக நம்புகின்றவன் நான். ஏனெனில் வார்த்தைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் நிறை வேறுபாடுகள் உள்ளது.
கோழிப்பண்ணை ஆரம்பித்து, அதில் இலாபம் எடுக்க இயலாமல் போனது கொரோனா காலத்தால் மட்டுமே, இல்லை என்றால் கோழிப்பண்ணை வளர்ப்பில் துரை பண்ணை நிச்சயமாக வெற்றியை அடைந்திருக்கும். அதனால் என்ன ? மாற்றாக நாட்டு நாய் பண்ணையை உருவாக்கியுள்ளார். இவர் இதில் வெற்றி அடைய எங்களுடைய வாழ்த்துக்கள்.
பொறியாளராக வெளிநாட்டில் ஒரு மாதம், பண்ணை உரிமையாளராக இங்கு ஒரு மாதம் என தனது தொழிலை நடத்தி வரும் திரு.துரை அவர்களுக்கு துணை அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்தான்.
இந்த முறை என் மனைவியுடன் சென்றேன். அழகாபுரி வரை இருசக்கர வாகனத்தில். அதன் பிறகு துரை அவர்கள் அவரது காரில் எங்களை அழைத்துச் சென்றார். வழி நெடுக நிறைய பகிர்ந்து கொண்டோம்.
நாய் பண்ணை வீடியோ பதிவு என் மனைவிக்கு இதுவே முதல் முறை. சொகுசாக வந்தார்கள் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி 😍. அதிகாலை 6 மணிக்கு ஆரம்பமான பயணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் காலை உணவுடன் 9 மணி அளவில் கிருஷ்ணாபுரம் துரை பண்ணைக்குச் சென்றோம். ராஜபாளையத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் மெயின் ரோட்டில் உள்ளது துரை பண்ணை.
எங்கள் நேரம், மேக கூட்டத்துடன் வெயில் தாக்கம் இல்லாத ரம்மியமாக இருந்தது. பண்ணை சற்று வித்தியாசமாக இருந்தது. பறக்கும் கேமரா இருந்தால்தான் இதை முழுமையாக எடுக்க இயலும் என்பதை உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் உணர்ந்தேன். ஏற்கனவே அப்படி ஒரு காட்சியை துரை அவர்கள் எடுத்துவைத்திருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.
3 வருட போராட்டத்தில் நிறைய கற்றுக் கொண்டுள்ளார். எல்லாவற்றையும் கடந்து, பல பாடங்கள் கற்று, பண்ணையை உருவாக்கியது குறித்து அவரது நேர்காணலில் நானும், நீங்களும் அறிந்திருப்போம். கிட்டதட்ட ஒரு மணி நேரம் நேர்காணல். என் மனைவிதான் இந்த முறை கேமரா வுமன் 😎.
துரை பண்ணையில் நல்ல, நல்ல நாட்டின நாய்கள் உள்ளது. இவர் கன்னி, சிப்பிப்பாறை எனும் பெயர்கள் கொண்ட வேட்டை நாய்கள் 60க்கும் மேல் இப்பண்ணையில் உள்ளது.
அப்பு என்ற ஒரு நாயிடம் மட்டும், யாரும் செல்லவில்லை. கோபக்காரன் 😡. உடல் நிலை சரியில்லாாத காரணத்தால் அப்புவை வீடியோவில் காட்ட இயலவில்லை.
27 இன்ஞ் உயரத்திலிருந்து 31 இன்ஞ் உயரம் வரை உள்ளது. பால் கன்னி நாய்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கருவாய் மூஞ்சி, மயிலை, பிள்ளை, சந்தன பிள்ளை என பல கலர்களில் நாய்கள். புதிய தலைமுறை நாய்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.
பண்ணை நாய்கள், மனிதர்களுடன் பழக்கம் இல்லாத காரணத்தால், வீடியோ எடுப்பதில் சிரமம் அதிகம். எப்படி எடுக்கப்போகிறேன் என்ற கவலை இல்லாமல் இல்லை. ஒரு வழியாக முடிந்த வரை எடுத்துள்ளேன்.
மதியம் 2 மணிக்கு பண்ணையை விட்டு கிளம்பி, ராஜபாளையத்தில் அருமையான கறி சாப்பாட்டுடன் மீண்டும் அழகாபுரியில் எங்களை வழி அனுப்பிவைத்தார் திரு.துரை அவர்கள்.
இந்த பயணம் மனதுக்கு மிகுந்த நிறைவைத் தந்தது. எனது மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சி. நன்றிகள் பொறியாளர். திரு.துரை சார்.
மீண்டும் இதுபோல் ஒரு பயணத்தில் உங்களை சந்திக்கின்றேன். நன்றி வணக்கம்🙏.
___________________________________________________
Join this channel to get access to perks:
/ @hellomadurai
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க 📺 Take Promotional Videos for your Business
Hello Madurai Ramesh 📞 95 66 53 1237 📢 Whats app
_________________________________________________________
🔵Online Web Tv : https://hellomaduraitv.com/
🔵 Facebook : / hellomaduraipage
🔵 Facebook : / rameshhellomadurai
🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/
🔵 Agri News website : https://tamilvivasayam.com/
🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: