முருகனை தினமும் பூஜிக்க | சண்முக நாமாவளி | Shanmugha Namavali | ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளியது
Автор: Kavitha Kameswaran
Загружено: 2023-08-12
Просмотров: 20812
Описание:
ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய
சண்முக நாமாவளி
பதம் பிரித்து பொருளுடன் கொடுக்கப்பட்டுள்ளது
ஹரஹர சிவசிவ சண்முகநாதா
சிவபெருமானின் மகனாகிய ஆறுமுகன் இறைவனே, உன்னையே நான் வாழ்த்துகிறேன்!
ஹரஹர சிவசிவ வென்முகநாதா
ஒளிவீசும் முகமுடையவனே, அருள்புரிவாயாக!
ஹரஹர சிவசிவ பரமவிலாசா
மகிழ்ச்சியின் மிகுதியான வடிவாக விளங்கும் இறைவனே!
ஹரஹர சிவசிவ அபயகுகேசா
பயங்களை நீக்கி அருள் செய்வோனே, குகா!
அருணகிரி பரவும் அருணெறிநாதா
அருணகிரிநாதர் புகழும், அருட்சோதியை வெளிப்படுத்தும் இறைவா!
தரும உறுவர்புகழ் சததள பாதா
தருமத்ததை கடைப்பிடிப்பவர்களால் (துறவிகள், முனிவர்கள்) புகழப்படும் தாமரைப் போன்ற பாதங்களை உடையவனே
அரிபிரமாதிகத் தொழுவடிவேலா
விஷ்ணு, பிரம்மா, முனிவர்கள் தொழும் அழகிய வேல் உடையவனே!
திருவடி நாரவர் அருள்முறைசீலா
திருவடியை அடைந்த பக்தர்களுக்கு (நாரணர் ) அருள் செய்வோனே!
எனினியகுரு நிதம் எணுமதியீசா
இனிமையான குருவாக இருந்து என்னாலும் வழிகாட்டும், ஒளிமிக்க அறிவு உடைய இறைவா!
சனனவெய்தறவளி தரு பரமேசா
பிறவிச் சுழற்சியை நீக்குவதற்கான வழி தரும் பரமேசா!
பாசா பாச பாப விநாசா
பாச பந்தங்களையும், பாவங்களையும் அழிக்கும் இறைவனே!
மாசேறாத மான நடேசா
குற்றமற்ற, உயர்ந்த நடராஜா!
போஜா வாஜா பூஜகர் நேசா
போஜா (ஆஹாரம்) | வாஜா (கீதங்கள்) | பூஜா (வழிபாடு) | கொண்டு வழிபடும் பக்தர்களை நேசிப்போனே
தேஜா ராஜா தேவ ஸமாஜா
தேஜா (ஒளிமிக்க) | ராஜா (அரசன்) | தேவ (இறை) | சமாஜா (சமூகம்)
ஒளிமிக்க அரசனாகிய தேவ சமூகம் கொண்டவனே!
தீஞ்சுவையருளொரு திருவாரமுதே
இனிய சுவைபோல அருள் வழங்கும் திருவார அமுதமே!
ஓஞ்சரவணபவ உருவே அருவே
உருவும் அறிவும் அற்றவனே !! உனக்கு என்னுடைய வணக்கங்கள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: