உடனே பணம் சம்பாதிக்கலாம்'னு" ஆசை | Say NO to fake shortcuts | Export Help Center
Автор: Export Talks (Export Help Center)
Загружено: 2025-10-23
Просмотров: 404
Описание:
கல்லூரி வாழ்க்கை... கண்ணீரில் முடிந்த ஏற்றுமதி கனவு! | Export Help Center
சமீபத்தில், மூன்றாம் ஆண்டு கல்லூரியை முடிக்கவிருந்த, ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி, Export Business கனவால் ஏமாந்து, தன் உயிரையே மாய்த்துக்கொண்ட துயரச் சம்பவம் நடந்திருக்கு.
அந்த அப்பாவிப் பெண்ணிடம், "குறைந்த முதலீட்டில் பெரிய லாபம், உடனே பணம் சம்பாதிக்கலாம்'னு" ஆசை வார்த்தை காட்டி, கிட்டத்தட்ட ₹5 லட்சம் ரூபாய் வரைக்கும் மோசடி செஞ்சு, அவங்க வாழ்க்கையைச் சீரழிச்சிட்டாங்க.
அந்தப் பெண், பணத்தை இழந்தது மட்டுமில்லாமல், எதிர்கால நம்பிக்கையையும் இழந்து, இந்த உலகத்தை விட்டுப் போயிட்டாங்க. இந்தச் செய்தி நம்ம எல்லாரையும் ரொம்பவே உலுக்குது. இத்தகைய துயரம் வேறு யாருக்கும் நடக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான் இந்த விழிப்புணர்வுப் பதிவு!
🚫 யாரும் ஏமாறாதீங்க! - மாணவர்களுக்கும் பெற்றோருக்கும்
மாணவர்களே கவனியுங்கள்!
அவசரம் வேண்டாம்: எக்ஸ்போர்ட் பிசினஸ்ங்கறது பெரிய சமுத்திரம் மாதிரி. அதுக்குள்ள இறங்குறதுக்கு முன்னாடி, அதைப் பத்தி சரியான புரிதல் (Proper Knowledge) ரொம்ப முக்கியம்.
ஆசை வார்த்தைகளை நம்பாதீங்க: "நாங்க எல்லாத்தையும் செஞ்சு தர்றோம், நீங்க சும்மா இருங்க, உங்க பணம் பல மடங்காகும்"னு யாராவது சொன்னா, அதுக்குள்ள கண்டிப்பா ஒரு மோசடி (Fraud) ஒளிஞ்சிருக்குனு அர்த்தம்.
குருட்டு நம்பிக்கையைத் தவிருங்கள்: உங்க பணத்தையும், நேரத்தையும், உயிரையும் பணையம் வெச்சு, வெறும் ஆசையாலயோ, யாரோ சொன்னாங்கன்னு குருட்டுத்தனமான நம்பிக்கையிலயோ எந்த முடிவும் எடுக்காதீங்க!
பெற்றோர்களே உஷார்! 👨👩👧👦
உங்கள் பிள்ளைகள் சமூக ஊடகங்கள் அல்லது வெளிநபர்கள் மூலம் வரும் 'சிறு முதலீடு, பெரும் லாபம்' போன்ற கவர்ச்சியான திட்டங்களில் முதலீடு செய்ய முயன்றால், உடனே அவர்களைத் தடுத்து, விசாரித்து, சரியான வழிகாட்டுதலைக் கொடுங்க.
அவர்கள் எந்த ஒரு புதிய தொழிலில் இறங்கினாலும், அதுபற்றி நீங்களும் தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.
🙏 ஒரு வேண்டுகோள்
தயவுசெய்து இந்தப் பதிவை நீங்க மட்டும் படிக்காம, உங்க நண்பர்கள், உறவினர்கள், கல்லூரி மாணவர்களோடு அதிகமா பகிர்ந்து கொள்ளுங்க. இது பல பேரின் பணத்தையும், நேரத்தையும், முக்கியமா உயிரையும் காப்பாற்ற உதவும்!
பொதுநலன் கருதி வெளியிடுவோர்: Export Help Center, Madurai
#OnlineFraudAwareness #StudentsSafety #JobScams #BewareOfScams #ExportScamAlert #ExportBusinessMistakes #BeginnerExportTips #ExportBusinessFraud #ViralNewsTamil #TamilNaduNews #StudentSuicide #ExportHelpCenter #ExportHelpCentre #ExportTalks #Exportism
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: