Motivation 🔥 குட்டிக்கதை 😇 இல்லற இரகசியம் 🤫
Автор: Ramapriya SenthilNathan
Загружено: 2026-01-28
Просмотров: 159
Описание:
ஹலோ பிரண்ட்ஸ்,
கணவன், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே நிபந்தனையற்ற அன்பு இருப்பதே இல்லறத்தின் அடிப்படை
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்கிறார் திருவள்ளுவர்.
வாங்க நேரா இன்றைய குட்டி கதைக்குள்ள போலாம் : குட்டிக்கதை : இல்லற இரகசியம்.
ஒரு நாள், ஒரு சாது மரத்தடியில் சும்மா அமைதியா உட்கார்ந்திருந்தார்.
அப்போ ஒரு பறவை வந்து,
“ஐயா… எனக்கு உலகத்தை சுற்றிப் பார்க்கணும் ஆசை இருக்கு.
முதல்ல ஆயிரம் காத தூரம் கடலுக்கு மேல பறந்து, அங்க இருக்குற அழகான தீவைக் காணணும்”ன்னு சொன்னது.
சாது சிரிச்சுட்டு,
“பறவையே… அவ்வளவு தூரம் கடலுக்கு மேல பறக்கறது சுலபம் இல்ல.
ஆனா முயற்சி பண்ணலாமே.
ஆனா ஒரு விஷயத்தை நினைச்சுக்கோ.
பறக்கும்போது முதல் தடவை சோர்வாக தோணும்போதே, உடனே புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வா”ன்னு சொன்னார்.
பறவை தலையசைச்சுட்டு பறந்துட்டு போச்சு.
அதுக்கப்புறம் சாது, பக்கத்துல இருந்த சீடன்கிட்ட,
“சீடனே… ஒருத்தன் முதல் தடவை சோர்வடையறப்போதே,
அவன் பாதி பலத்தை இழந்துடுறான்.
அந்த நேரத்துல திரும்பினாதான் உயிரோட தப்பிச்சு வர முடியும்”ன்னார்.
ஒரு வாரம் கழிச்சு அந்த பறவை திரும்பி வந்தது.
“ஐயா… 200 காத தூரம் பறந்ததும் எனக்கு ரொம்ப களைப்பு வந்துச்சு.
நீங்க சொன்ன மாதிரி உடனே திரும்பிட்டேன்.
இல்லைன்னா கடல்ல விழுந்திருப்பேன்.
ஆனா கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் முயற்சி பண்ணணும்”ன்னு சொன்னது.
சாது சொன்னார்,
“இந்த தடவை தனியா போகாத.
உன் துணையையும் கூட்டிட்டு போ.
இரண்டாவது தடவை சோர்வாக தோணும்போதே திரும்பி வா”ன்னார்.
இரண்டு பறவைகளும் சேர்ந்து பறந்துச்சு.
15 நாள் கழிச்சு திரும்பி வந்தாங்க.
“ஐயா… எங்களால 400 காத தூரம் தான் பறக்க முடிஞ்சது.
இரண்டாவது தடவை சோர்வானதும் திரும்பிட்டோம்.
தொடர்ந்து போயிருந்தா இறந்திருப்போம்.
ஆனா எங்களுக்கு இலக்கை அடையணும் ஆசை இருக்கு. உதவி பண்ணுங்க”ன்னாங்க.
சாது கொஞ்சம் யோசிச்சார்.
கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்துக் கொடுத்து,
“இந்த குச்சியை உங்களோட கூட்டிட்டு போங்க.
களைப்பா இருந்தா கடலில போட்டுடுங்க.
அது மிதக்கும்.
அதுல உட்கார்ந்து கொஞ்சம் ஓய்வெடுங்க.
பிறகு மீண்டும் பறங்க”ன்னார்.
பறவைகள் சந்தோஷமா நன்றி சொல்லிட்டு பறந்துட்டாங்க.
இரண்டு மாதம் கழிச்சு திரும்பி வந்தாங்க.
“ஐயா… உங்க ஆசீர்வாதத்தால, ஆயிரம் காத தூரத்துக்கு அப்பால இருக்குற தீவைக் கூட பார்த்துட்டோம்.
களைப்பா இருந்த போதெல்லாம் அந்த குச்சியால ஓய்வெடுத்தோம்”ன்னாங்க.
சாது கேட்டார்,
“அந்த குச்சி உங்களுக்கு சுமையா தெரியலையா?”
பறவை சொன்னது,
“ஐயா…
சில நேரம் தனித்தனியா அந்த குச்சியை சுமந்தோம்.
சில நேரம் சேர்ந்து சுமந்தோம்.
அப்போ எல்லாம் அது ரொம்ப சுமையா தான் தோணிச்சு.
சண்டை கூட வந்துச்சு.
ஆனா கடலில குச்சியை போட்டு, அதுல உட்கார்ந்து ஓய்வெடுத்தப்போ தான் புரிஞ்சது…
**‘குச்சியை நாங்க சுமக்கல…
குச்சிதான் நங்களை சுமந்து காப்பாத்துது’**ன்னு.”
அப்படின்னு சொல்லிட்டு பறவைகள் பறந்துட்டாங்க.
அப்போ சாது சீடன்கிட்ட சொன்னார்:
“பறவை தனியா பறந்தப்போ சீக்கிரமே களைச்சுது.
துணையோட பறந்தப்போ அதிக தூரம் போக முடிஞ்சுது.
அது துணையால தான்.
ஆனா இலக்கை அடைய அது மட்டும் போதல.
ஒரு கருவி தேவைப்பட்டது.
அந்த கருவிதான் இந்த குச்சி.
அந்த குச்சி சில நேரம் சுமையா தெரிஞ்சது,
சில நேரம் சண்டையை உண்டாக்கிச்சு,
ஆனா அதே குச்சிதான் இலக்கை அடைய உதவிச்சு.
அதே மாதிரி தான் மனித வாழ்க்கையில,
பறவைக்கு குச்சி எப்படி கருவியோ,
மனுஷனுக்கு இல்லறம் அப்படிங்கற குடும்ப வாழ்க்கை தான் அந்த கருவி.
‘சம்சார சாகரம்’ன்னு சொல்லுற வாழ்க்கை கடலை
நீந்தி கடக்க வேண்டிய அவசியம் இல்ல.
இல்லறம் அப்படிங்கற குச்சியை பிடிச்சுக்கிட்டா,
மிதந்தே கடக்க முடியும்.
கணவன்–மனைவி
இல்லறத்தை நடத்துற மாதிரி தோணும்.
ஆனா உண்மையில,
இல்லறம்தான் அவர்களை வழி நடத்துது.
மொத்தமா பார்த்தா, மனித வாழ்க்கையோட உண்மையான குறிக்கோள் என்னன்னா
அன்பை கொடுக்குறதும், அன்பை அனுபவிக்குறதும் தான்.
குடும்பமா இருந்தாலும், நண்பர்களா இருந்தாலும், சமூகமா இருந்தாலும்
இந்த எல்லா உறவுகளையும் ஒன்றா கட்டி வச்சிருக்குற ஒரே விஷயம்
அன்பு தான்.
பணம் வரும்… போகும்.
பதவி இருக்கும்… மாறும்.
அதிகாரமும், வசதிகளும்
எல்லாம் தற்காலிகம்.
ஆனா
அன்பால கட்டப்பட்ட உறவு மட்டும் தான்
நாளும் நிலைக்கும்… நெஞ்சுக்குள்ளேயே இருக்கும்.
அதனால தான்
வாழ்க்கை முழுக்க ஓடிக் களைச்சு சேர்க்குறத விட,
அன்பா வாழ்றதுதான் உண்மையான வாழ்க்கை.
அன்பு தான் எல்லாம்! அன்பே சிவம்!
நன்றி! வாழ்க வளமுடன்!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: