mannikka vendugiren- Ktrack for Male Singers (HamsaRishi)
Автор: Hamsa Priya
Загружено: 2015-02-06
Просмотров: 1879
Описание:
Mannikka Vendugiren- Karaoke for Male Singers (HamsaRishi)
---
Thanks to Raja
Thanks to CR
---
Lyrics:
---
படம்: இரு மலர்கள் (1967)
பாடல் அமைப்பு: எம் எஸ் விஸ்வநாதன்
பாடகர்கள்: டி எம் சௌந்தர் ராஜன் & பி சுஷீலா
-----
F:
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
M:
தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு x 2
நாம் பிறிவென்னும் ஒரு சொல்லை மறந்தால் என்ன
கண்ணோடு உண்டானது நெஞ்சோடு ஒன்றானது
உன் மேனி என் தோளில் நின்றாடும் இந்நாளில்
F:
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
-------
M:
எண்ணம் என்ற ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தைத் தேடும் வாழ்க்கையிலே துணைவி
F:
அன்பு என்ற காவியத்தில் நல்ல ஆரம்பமே வருக
முன்னுறைத்த காதலையே உந்தன் முடிவுரையேத் தருக
M:
முதுமை வந்த பொழுதும்
F:
இளமை கொள்ளும் இதயம்
Both:
நான் வழங்க… நீ வழங்க…. இன்பம் நாளுக்கு நாள் வளரும்
M:
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
------
M:
முக்கனிக்கும் சக்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ
மெய்மறக்கக் கண்மயக்கும் அழகில் தெய்வம் கூட வருமோ
F:
நீ கொடுத்த நிழலிருக்க பெண்மை ஊஞ்சலாட வருமோ
ஒருவனுக்குத் தருவதற்கு என்றே என்றும் இந்த மனமோ
M:
மலர்கள் ஒன்று சேரும்
F:
மாலையாக மாறும்
Both:
நெஞ்சினிக்க நினைவினிக்க கண்கள் நூறு கதை கூறும்
------
F:
மன்னிக்க வேண்டுகிறேன்
M:
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
F:
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
M:
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: