108 கேது பகவான் போற்றி - கேது பெயர்ச்சி பாடல்கள் | kethu Bhahavan 108 Potri _Bombay Saradha
Автор: SivamAudios
Загружено: 2019-07-23
Просмотров: 41662
Описание:
Ketu Ashtottara Shatanamavali - 108 Times | Popular Sanskrit Devotional Chant | Bhakti Songs
கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றின் பாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகள் இன்றி கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி ஓம்
கீழ்பெரும்பள்ளம் எனும் திருத்தலத்தில் கோவில் கொண்டவனே
கேது பகவானே போற்றி
சிரசில் ஐந்து தலை நாகம்மோடு காட்சிதருபவனே போற்றி
கிரகமண்டலத்தில் முறத்தின் வடிவில்
ஆசனமிட்டு அமர்ந்திருப்போனே போற்றி
கதையும் வரதமுத்திரையும்
இரு கரங்களில் கொண்டவனே கேது பகவானே போற்றி போற்றி
காளகஸ்தியை சேத்ரமாக கொண்டவனே போற்றி
காளகஸ்தீஸ்வரரை மூர்த்தியாகக் கொண்டவனே போற்றி
சாயா கிரகமானவனே போற்றி
அசுர உடல் வாகினை கொண்ட கேது பகவானே போற்றி போற்றி
சிங்கத்தை வாகனமாய் கொண்டவனே போற்றி
சித்ரலேகா என்கிற அழகிய மனைவி உடையவனே போற்றி
செந்நிற மேனியனே போற்றி
பல வண்ண ஆடை அணிவோனே
கேது பகவானே போற்றி போற்றி
இந்திரனை அதி தேவதையாய் கொண்டவனே போற்றி
அஸ்வினி மகம் மூலம் நட்சத்திரத்துக்கு அதிபதி ஆனவனே போற்றி
சுக்ரன் சனீஸ்வரனை நண்பனாய் கொண்டவனே போற்றி
சமுக்கேது என்னும் நாமம் கொண்ட
கேது பகவானே போற்றி போற்றி
நெடிய உருவம் கொண்டவனே போற்றி
அஞ்சரி ஹஸ்தனே போற்றி
அர்த்த சரீரனே போற்றி
அபயகரம் கொண்டவனே
துப்பிறகேது என்னும்
பெயர் பெற்ற
கேது பகவானே போற்றி போற்றி
என் பிள்ளை உடையவனே போற்றி
வந்தனைக்குரியவனே போற்றி
ஏழ்மையை கலைபவனே போற்றி
மால் அருள் பெற்று மகா
கேது என்று அழைக்கப்படுபவனே
கேது பகவானே போற்றி போற்றி
மோகினியால் சிரஸினை
இழந்தவனே போற்றி
இரு கூறானவனே போற்றி
மதிக்கு எதிரி ஆனவனே போற்றி
முருகப்பெருமானின் சேவகனான
கேது பகவானே போற்றி போற்றி
வைடூரியத்தை ரெத்தினமாக
கொண்டவனே போற்றி
துருக்கல்லினை உலோகமாய்
கொண்டவனே போற்றி
விநாயகரை வணங்கிட
அகமகிழ்ந்தருள்வோனே போற்றி
மகத்துக்கு அதிபதி ஆன
கேது பகவானே போற்றி போற்றி
ராகுவின் பாதி ஆனவனே போற்றி
தத்துவ ஞானியே போற்றி
தனிகிரகமிலாதவனே போற்றி
நிறைவான கனம்
அல்லி தருபவனே
கேது பகவானே போற்றி போற்றி
செவ்வல்லி மலர் அர்ச்சனையில்
மகிழ்பவனே போற்றி அமுதை நாடியவனே
போற்றி தோஷங்கள் தீர்த்தருள்பவனே போற்றி
உலகில் உன்னத வாழ்வளித்து வாழ்விக்க
வந்த லோக கேதுவான
கேது பகவானே போற்றி போற்றி
மகா கேதுவே தும்பர கேதுவே
லோக கேது பகவானே போற்றி போற்றி
மகா கேதுவே தும்பர கேதுவே
லோக கேது பகவானே போற்றி போற்றி
மகா கேதுவே தும்பர கேதுவே
லோக கேது பகவானே போற்றி போற்றி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: