ஓசூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக செஸ் கிளப் திறப்பு விழா..
Автор: Star News Hosur
Загружено: 2025-12-13
Просмотров: 54
Описание:
ஓசூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக செஸ் கிளப் திறப்பு
ஓசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட செஸ் கிளப்பை தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் துவக்கி வைத்தார்.
ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படிக்கும் செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்கள் திறமைகளை மென்மேலும் வளர்ப்பதற்காக பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியர் சுவர்ணா என்பவர் ரூ 1.5 லட்சம் தனது சொந்த செலவில் புதிதாக செஸ் கிளப்பை அமைத்து கொடுத்துள்ளார்.
இந்த புதிய செஸ் கிளப்பை தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் மாணவ மாணவியர்களோடு அமர்ந்து செஸ் விளையாட்டினார். அதனைத் தொடர்ந்து பள்ளியை பார்வையிட்ட அவர் மரக்கன்றுகளை நட்டு அதன்பின் பள்ளியில் நடந்து வரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த பள்ளியில் பயின்று வரும் செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் பள்ளி வளாகத்தில் செஸ் விளையாடி வந்தனர்.
அவர்களுக்கு என தனியான இடம் இல்லாமல் இருந்தது. தற்போது பள்ளியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளோடு புதிய செஸ் கிளப் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதால், செஸ் விளையாட்டில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது :-
நமது பள்ளியில், முறையாக செஸ் விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் செஸ் விளையாட்டில் தனித்துவம் பெற்று போட்டிகளில் வெற்றி பெறுவோம் என மாணவர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்று எந்த அரசு பள்ளிகளிலும் செஸ் கிளப் இல்லை என்பதும் இந்த மேல்நிலைப் பள்ளியில் புதிதாக செஸ் கிளப் அமைத்து கொடுத்த ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: