பாலகணபதி நமோ நம | Bala Ganapathi - Ramu | Vinayagar | Ulundurpettai Shanmugam | Vijay Musicals
Автор: Vijay Musical
Загружено: 2017-08-22
Просмотров: 72607
Описание:
ALBUM : VINAYAGAR MURUGAN PUGAZH MAALAI
Sangadahara Sathurthi Song
SONG : BALA GANAPATHI NAMO NAMA
SINGER : MAHARAJAPURAM RAMU
MUSIC : SIVAPURANAM D V RAMANI
LYRICS : ULUNDURPETTAI SHANMUGAM
VIDEO : KATHIRAVAN KRISHNAN
PRODUCED BY VIJAY MUSICALS
#vinayagarsongs#vijaymusicals
சங்கடஹர சதுர்த்தி விரதம் பாடல் .
பால கணபதி - விநாயகர் பாடல்
விநாயகர் முருகன் புகழ் மாலை
பாடியவர் : மகாராஜபுரம் ராமு
இசை : சிவபுராணம் D V ரமணி
இயற்றியவர் : உளுந்தூர்பேட்டை சண்முகம்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
நமஸ்தே கஜவத்ராய கஜானனஸ்வரூபிணி
பராசுரசுராயைவ வட்சலாசுனவே நமஹ
வக்ரதுண்ட மஹாகாய சூரியக்கொடி ஸமப்ரபா
அவிக்னம் குருமேதேவ சர்வகார்யேசுஸர்வதா
பாலகணபதி நமோநம யோககணபதி நமோநம
லக்ஷ்மிகணபதி நமோநம மஹாகணபதி நமோநம
தோற்றம் அதனை யாரறிவார்
முடிவைக் கண்டதும் யாரோ யார்
மாற்றம் இல்லா மாணிக்கமே
கேட்டதை கொடுக்கும் கற்பகமே
உலகம் முழுதும் உன் கையில்
மோதகமாகி உருளுதய்யா
உனக்கோ அதுஒரு விளையாட்டு
உலகுக்கெல்லாம் தாலாட்டு
முதலில் பிறந்தது ஒரு சுழிதான்
தொடர்ந்து வந்தது ஒரு கோடு
அதனை தொடங்கி வைத்தது யார்
சிவசக்தி பெற்ற பிள்ளையார்
ஓம் விக்நவிநாயகா சகலலோக நாயகா
மூலமுதல்வா கணநாதா சரணம் சரணம் குருநாதா
ஊற்றுப்புனலே சுழியாகும்
ஓடும்போது நதியாகும்
வாழ்க்கை பயணம் அப்படித்தான்
கடவுளோடு கலந்திடுமே
பாலகணபதி நமோநம யோககணபதி நமோநம
லக்ஷ்மிகணபதி நமோநம மஹாகணபதி நமோநம
ஓம் எனும் நாதம் உருவாகும்
யானை முகத்தோடு எதிர்தோன்றும்
தூக்கிய துதிக்கை வாழ்த்திடுமே
கணபதி திருவடி சரணடைந்தோம்
கணத்தில் காட்சி தருவதனால்
கணபதி என்று அழைத்தாரோ
கணங்களின் தளபதி என்பதனால்
கணபதி என்றே உரைத்தாதோ
உனக்கும் மேலே ஒருவருக்கும்
தலைவன் ஆகும் தகுதியில்லை
மூத்தோருக்கும் மூதாதவனே
முன்னே நின்று காப்பவனே
எங்கேதான் நீயில்லை
எளிமையென்றாள் நீ எல்லை
தங்கப்பிள்ளை குணநிதியே
மங்களநாயக கணபதியே
ஆற்றங்கரையில் இருப்பாயே
அடுப்பங்கரையில் இருப்பாயே
அரசமர நிழல் அமர்வாயே
அரண்மனை உள்ளேயும் அமர்வாயே
பிடித்த மஞ்சளில் சாணத்தில்
அருஉருவாக வருவாயே
அடுத்து நிற்பவர் யாரெனினும்
அஞ்சேல் என்றே சொல்வாயே
அருகம்புல்லே போதுமென்பாய்
எருக்கம்பூவும் ஏற்கின்றாய்
ஏழைகள் தோழன் நீதானே
என்றும் எப்போதும் துணை நீயே
குழந்தையாக தவழ்ந்திடுவாய்
குறுகுறு நடனம் ஆடிடுவாய்
சிவனும் உமையும் உனைவிரும்பி
மகனாய் பெற்றே மகிழ்ந்தாரே
வெல்லப்பிள்ளை உனைக்கிள்ளி
கிள்ளிய வெல்லத்தை படைப்பாரே
செல்லப்பிள்ளை சிணுங்காமல்
சிரித்துக்கொண்டே சுவைப்பாயே
பாலும் தேனும் அவல் பொரியும்
பாகும் பருப்பும் பாயசமும்
கரும்பும் கனியும் இருந்துவிட்டால்
விருப்பி விரும்பி உண்பாயே
மனமும் வாக்கும் தொடமுடியா
மௌன வெளியே இருப்பாயே
தினமும் உன்னை துதிப்பவர்க்கு
செல்வம் யாவும் அளிப்பாயே
சந்தம் தருவாய் சொல் தருவாய்
சங்கீதம் கேட்டு உருகிடுவாய்
தந்தம் ஒடித்து பாரதத்தின்
சரிதம் எழுதி தந்துவிட்டாய்
ஏழுகோடி மந்திரங்கள் யாவும்
தொந்தியில் அடக்கமைய்யா
வேழமுகத்தில் விழித்தாலே
வினைகள் பிணிகள் பறக்குமய்யா
சிவனின் சூலம் கோடாரி
உமாவின் பாசம் அங்குசம்
நாராயணின் சங்குசக்ரம்
மாதனின் கரும்பினில் ஏந்தினை
மஹாலக்ஷ்மியின் தாமரை
பூமாதேவியின் நெல்மணி
வாணியின் வீணை ஜெபமாலை
ரதியின் அல்லி மலர்கொண்டாய்
முருகனின் தண்டம் தோளிலே
பிரம்மனின் கமண்டலம் கையிலே
வராகர் கதையோடு ஆயுதம்
அனைத்தும் தேவர்கள் அம்ஷமே
விலங்கின் வதனம் மனித உடல்
பூதகனத்தின் வயிறுடையாய்
தேவர்க்கெல்லாம் தேவன் நீ
யாவும் அடங்கும் உன்னிடமே
யானையை அடக்கும் அங்குசமும்
பாசமும் உன்கரம் பற்றிடுமே
யாருக்கும் அடங்கா வேலம்நீ
அன்புக்கு அடங்கும் நண்பன் நீ
ஞானப்பாடம் தொடுப்பவனே
நானெனும் ஆணவம் அழிப்பவனே
ஆனந்த அமுதம் அளிப்பவனே
வானக வாழ்வு கொடுப்பவனே
கோடிசூர்ய ப்ரகாசமே
ஆடி அசைகின்ற உல்லாசம்
உன்னைக்கண்டால் ஆனந்தம்
நீதான் அந்த ஆனந்தம்
காணாது சென்றால் உன்னிப்பாய்
கருத்தில் வைத்தே கவனிப்பாய்
தடைகளை போட்டே தண்டிப்பாய்
தவறை உணர்ந்தபின் மன்னிப்பாய்
முன்னே உன்னை வணங்கியபின்
முடிவு வரையிலும் துணைவருவாய்
என்ன இடர்கள் வந்தாலும்
எட்டி உதைப்பாய் செயல் முடிப்பாய்
தாயோ சர்வ மங்களை
சங்கரன் என்றாலும் மங்களன்
மாமன் லக்ஷ்மியின் மணவாளன்
ஆமாம் நீயும் அவ்வாறே
ஒற்றை தந்தம் இரு செவிகள்
முக்கண்ணாலும் துதிக்கைதான்
ஐந்து கரங்கள் கொண்டவனே
அறுமுகன் தமையன் ஆனவனே
உலகம் முழுதும் உன் உருவம்
ஒவ்வொரு வகையில் வழிபாடு
பல பல தோற்றம் கொண்டாலும்
பரம்பொருள் ஒன்றென உணர்த்திடுவாய்
பதினாறு பேர்கள் கொண்டவனே
பதினாறு பேறுகள் தருபவனே
மூல மந்திரம் சொல்பவரை
கால காலம் காப்பவனே
தாயினும் சிறந்த தாய்நீயே
தந்தையின் குணமும் கொண்டாயே
குருவாய் அருகில் அழைத்தாயே
திவ்ய தரிசனம் கொடுத்தாயே
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: