ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

சரணடைந்து விட்டேன் ரப்பே | Labbaik Yaa Rab | Ramadan Munajat | Vocals Only | Ahmad Salih Faheemi

Автор: Ahmad Salih Faheemi

Загружено: 2023-04-10

Просмотров: 329729

Описание: An emotional Munajat with complete surrender in the court of Almighty Allah with sincere repentance for the wrong-doings seeking His Ultimate Salvation.

அல்லாஹு ரப்பி
அல்லாஹு ஹஸ்பீ
இக்ஃபிர் துனூபி
பி ஃபைழில் ஹபீபி

அல்லாஹு அல்லாஹ்
அஸ்தக்ஃபிருல்லாஹ்
அடியாரின் பிழைகள்
பொறுப்பாயே அல்லாஹ்

1.
ரமழானை தந்த
ரஹ்மானே உன்னை
போற்றித் துதித்து
துவங்குகின்றேனே
பார்ப்போனும் நீயே
கேட்போனும் நீயே
அடியாரின் குறைகள்
தீர்ப்போனும் நீயே
உன்னை அன்றி
எவருண்டெமக்கு
எங்களின் முறையீடு
கேட்பாயே அல்லாஹ்

முன்பில் உதித்த
முத்தாம் முஹம்மது
முகமலரை யாம்
முன் வைத்து கேட்போம்
அன்னவரின் துய்ய
பரம்பரையோர்கள்
அஹ்லுல் பைத்தினர்
அஸ்ஹாபிமாம்கள்
இறை நேசர்களையும்
முன் வைத்து கேட்போம்
வேண்டல்கள் யாவும்
ஏற்பாயே அல்லாஹ்

2.
என்னருள் எந்தன்
கோபத்தை விஞ்சும்
என்று பகர்ந்தாய்
ஏகாந்த நாதா
என் செயல் கண்டு
நீ தீர்ப்பளிப்பின்
நிலையான நரகில்
மீளாது மாய்வேன்
உன்னருள் கொண்டே
பிழைகள் பொறுத்தே
உயர்வான சுவனத்தில்
சேர்ப்பாயே அல்லாஹ்

அரசன் முன் நிற்கும்
கைதியைப் போல
நிர்க்கதியுற்று
நிலையின்றி நின்றேன்
மாபாவி என்னை
தண்டித்திடமால்
மன்னித்துக் காப்பாய்
மறை தந்த மன்னா
நரகத்தின் சூட்டை
தாங்கிடுவேனோ
நடுங்கிடும் எந்தன்
பயம் தீரு அல்லாஹ்

3.
பாவக் கடலில்
மூழ்கித் திணறும்
பாவியை மீட்டி
கரையேற்று ரப்பீ
முன் செய்த பாவம்
பின் செய்த பாவம்
கண் செய்த பாவம்
கழித்திடு அல்லாஹ்
அறிந்திட்ட அறியா
அழுக்கான பாவம்
இழுக்கான யாவும்
அழித்திடு அல்லாஹ்

கேள்வியால் செய்த
கேடான பாவம்
கை கால்கள் செய்த
இழிவான பாவம்
நாவினால் செய்த
நசலான பாவம்
நலிந்தோரை கடிந்த
பொல்லாத பாவம்
உள்ளத்தில் தோன்றும்
நில்லாத பாவம்
எல்லாமும் பொறுத்தென்னை
புதிதாக்கு அல்லாஹ்

4.
தவ்பாவை ஏற்கும்
தயவாளன் உந்தன்
தாள் பணிகின்றேன்
தயவு செய் தய்யான்
நல்லவனாக
மாறிடும் ஆசை
மிகைத்தாலும் மீண்டும்
தவறுகள் செய்தேன்
பாவங்கள் பக்கம்
மீளாத மீட்சி
தந்தென்னை நீயே
மீட்பாயே அல்லாஹ்

ஓரெட்டு நகர்வின்
பத்தெட்டு விரைவேன்
என்று பகர்ந்தாய்
என்னன்பு எஜமான்
பவம் எந்தன் குணமே
மன்னிப்புன் குணமே
லெப்பைக ரப்பே
சரணடைகின்றேன்
தணலினில் வீழ்ந்த
புழு போல் துடிக்கும்
துரும்பென்னை மீட்டி
துய்தாக்கு அல்லாஹ்

5
இதயத்தில் எதுவும்
இல்லாமலாக்கி
நீ மட்டும் அமரும்
இடமாக்கு நாதா
இன்ஸானு ஸிர்ரீ
வ அன ஸிர்ருஹ்
என்பதன் ஸிர்ரை
உணர்த்திடு நீதா
காதலனே உன்
முழுதான அழகை
கண்டு மயங்கும்
வரம் தா நீ அல்லாஹ்

நூரு முஹம்மதை
நயன மணியில்
ஒளிர்ந்திடச் செய்துன்னில்
ஒளித்திடு கண்ணே
நூரான நபியின்
நேரான வழியில்
பார் மீதில் செலுத்தி
சீராக்கு என்னை
கரை ஏதும் இல்லா
உன் நேசக் கடலில்
முழுதாய் அமிழ்த்தி
மூழ்கச் செய் அல்லாஹ்

6
பெற்றோரின் குறைகள்
பொறுத்திடு அல்லாஹ்
அவர் மீது கருணை
காட்டிடு அல்லாஹ்
பிள்ளைகள் நீயே
வளர்த்திடு அல்லாஹ்
அறிவுடன் ஞானம்
வழங்கிடு அல்லாஹ்
ஒழுக்கம் மிகைத்தே
செழிப்போடு வாழும்
பெரும் பேறு நீயே
அருள்வாயே அல்லாஹ்

காலம் கடந்தும்
கரை சேர்ந்திடாமல்
வெதும்பிடும் பேர்க்கு
கரம் தந்தருள்வாய்
குழந்தைகள் இன்றி
மனம் வாடும் எவர்க்கும்
மழழைகள் ஈந்து
மகிழ்வாக்குவாயே
மற்றவரைப் போல்
இவர்களை ஆக்கி
மனதில் நிறைவை
பொழிவாயே அல்லாஹ்

7
நோய் நொடியின்றி
நிம்மதியோடு
நில மீதில் வாழும்
நிலை எமதாக்கு
ஜின் மற்றும் ஷைத்தான்
ஸிஹ்ரு பொறாமை
கண்ணேறு வெறுப்பு
அண்டாமலாக்கு
பகைவர்கள் சூழ்ச்சி
பக்கம் வாராது
திசை மாறச் செய்வாய்
தக்கோனே அல்லாஹ்

நஃப்ஸின் பதற்றம்
நலிவான எண்ணம்
திடுக்கங்கள் போக்கி
திடமாக்கு மெளலா
இதமான தூக்கம்
இல்லாத ஏக்கம்
இல்லாமலாக்கி
எழிலாக்கு மெளலா
கூரான பார்வை
தெளிவான கேள்வி
கை கால்கள் திறனாய்
ஆக்கிடு அல்லாஹ்

8
தொழிலில் விருத்தி
தொய்வின்றி தந்து
வாரி வழங்கும்
வாய்ப்பை தா அல்லாஹ்
உனையன்றி எவரை
அஞ்சாத நிலையும்
அண்டாத வாழ்வும்
அளிப்பாயே அல்லாஹ்
கடனற்ற நிலையில்
கடைசி வரைக்கும்
கரங்கள் உயர்வாய்
இருக்கச் செய் அல்லாஹ்

பயனான மழையை
வருஷிக்கச் செய்து
வயல்கள் வெளிகள்
வளமாக ஆக்கு
நெல் தானியங்கள்
புல் காய்கனிகள்
கால் நடைகளில்
பரக்கத்தை நிரப்பு
இயற்கையின் சீற்றம்
பெரும் தொற்று நோய்கள்
அழிவுகள் யாவும்
அகற்றிடு அல்லாஹ்

9
கடினம் குரோதம்
பழி வாங்கும் எண்ணம்
பிடிவாத குணங்கள்
அடியோடு போக்கு
ஒருவர்க்கு ஒருவர்
அன்பை பகிர்ந்து
பண்போடு வாழும்
பரிவை வழங்கு
இதயத்தில் மென்மை
பனி போல் சொரிந்து
வேற்றுமை யாவும்
தூராக்கு அல்லாஹ்

எம் நாட்டில் ஊரில்
வீதியில் வீட்டில்
பயமின்றி வாழும்
நிலை என்றும் வேண்டும்
மத வேறுபாடு
இன பேதம் நீங்கி
மனிதத்தை போற்றும்
நல்லாட்சி வேண்டும்
ஒற்றுமை குலைவால்
எதிரிகள் எம்மை
வீழ்த்தி விடாமல்
காப்பாற்று அல்லாஹ்

10
இறுதி என் மூச்சை
சுவாசிக்கும் முன்பு
கஃபாவின் காட்சி
கண்ணுக்குள் காட்டு
புவனத்தின் சுவனம்
மதினத்தின் மடியில்
சில நாட்களேனும்
தஞ்சம் தருவாய்
ரவ்ழாவின் அருகில்
மிம்பர்க்கு நடுவில்
மரணத்தை தந்து
உயிராக்கு அல்லாஹ்

மண்ணறையை நீ
விரிவாக்கி வைத்து
சொர்க்கத்தின் வாசம்
சுவாசிக்கச் செய்வாய்
மஹ்ஷர் பெரு வெளியில்
மன்றாடி சேர்க்கும்
மஹ்மூதின் கரங்கள்
பற்றச் செய் அல்லாஹ்
உயர்வான பதியில்
உம்மிய்யின் பணியில்
உனைக் கண்டு களிக்கும்
உயர்வை தா அல்லாஹ்

CREDITS :

Voice and Lyrics :
Hafiz B.S. Ahmad Salih Faheemi

Audio Mixing : Fahmi Farooqi

Editing :
MSL Studio

Technical Support :
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk

Released by :
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council

Supported By :
Chinna Maraicar Family (Kilakarai)

#AhmadSalihFaheemi

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
சரணடைந்து விட்டேன் ரப்பே | Labbaik Yaa Rab | Ramadan Munajat | Vocals Only | Ahmad Salih Faheemi

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

மதியாளர் மடியினில் மரணிக்க வேண்டும் | Iraiva Un Arulal | A Virtual Journey | Ahmad Salih Faheemi

மதியாளர் மடியினில் மரணிக்க வேண்டும் | Iraiva Un Arulal | A Virtual Journey | Ahmad Salih Faheemi

Allaah Munajaat (in Tamil) by Keelakarai Pallak Waliyullaah [Recited by: Ahmad Salih Faheemi]

Allaah Munajaat (in Tamil) by Keelakarai Pallak Waliyullaah [Recited by: Ahmad Salih Faheemi]

Джем – சரணடைந்து விட்டேன் ரப்பே | Labbaik Yaa Rab | Ramadan Munajat | Vocals Only | Ahmad Salih Faheemi

Джем – சரணடைந்து விட்டேன் ரப்பே | Labbaik Yaa Rab | Ramadan Munajat | Vocals Only | Ahmad Salih Faheemi

ТОХА СУРА для открытия дороги, открывающая все закрытые дороги сильная сура

ТОХА СУРА для открытия дороги, открывающая все закрытые дороги сильная сура

Faith Confessions / விசுவாச அறிக்கை  / 1000 Visuvasa Arikkai

Faith Confessions / விசுவாச அறிக்கை / 1000 Visuvasa Arikkai

கேளுங்க கேட்டுக்கிட்டே இருப்பீங்க Jukebox| Old ISLAMIC SONG |A.M thalif and sarala songs | rare song

கேளுங்க கேட்டுக்கிட்டே இருப்பீங்க Jukebox| Old ISLAMIC SONG |A.M thalif and sarala songs | rare song

Subhana Mawlid Shareef | سبحان مولد شريف | Mowlid | Moulood | Ahmad Salih Faheemi

Subhana Mawlid Shareef | سبحان مولد شريف | Mowlid | Moulood | Ahmad Salih Faheemi

யா ரஹ்மானே எங்களின் பாவம் | Ya Rahmane | Ramadan Munajat | Vocals Only | Ahmad Salih Faheemi

யா ரஹ்மானே எங்களின் பாவம் | Ya Rahmane | Ramadan Munajat | Vocals Only | Ahmad Salih Faheemi

Badr Sahabas Name Baith  | Kerala | பத்ர் ஸஹாபாக்கள் திருநாமம் பைத்

Badr Sahabas Name Baith | Kerala | பத்ர் ஸஹாபாக்கள் திருநாமம் பைத்

வல்லோனின் தூதர் வான்மதியே யா ரசூலல்லாஹ்

வல்லோனின் தூதர் வான்மதியே யா ரசூலல்லாஹ்

உள்ளத்தை ❤️ உருக்கும் உயிர் நபி நேசப் பாடல்(வீடியோ)ஒரு முறை கேட்டால் ?

உள்ளத்தை ❤️ உருக்கும் உயிர் நபி நேசப் பாடல்(வீடியோ)ஒரு முறை கேட்டால் ?

கஸிதத்துள் புர்தா ஷரீப்

கஸிதத்துள் புர்தா ஷரீப்

பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை..|| ISAI MURASU NAGORE E.M.HANIFA || ISLAMIC SONGS || BILAL HISTORY

பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை..|| ISAI MURASU NAGORE E.M.HANIFA || ISLAMIC SONGS || BILAL HISTORY

Vilayaththin Vendarae Ya Jeelani - விலாயத்தின் வேந்தரே யா ஜீலானீ | Ahmad Salih Faheemi

Vilayaththin Vendarae Ya Jeelani - விலாயத்தின் வேந்தரே யா ஜீலானீ | Ahmad Salih Faheemi

Salovatlar va Nashidlar to’plami Nilufar bintu Ulug’bek

Salovatlar va Nashidlar to’plami Nilufar bintu Ulug’bek

7 Fatiha 7 Ayetel Kürsi 7 Kafirun 7 İhlas 7 Felak 7 Nas Kur'an-ı Kerim Rukye

7 Fatiha 7 Ayetel Kürsi 7 Kafirun 7 İhlas 7 Felak 7 Nas Kur'an-ı Kerim Rukye

ZIKR SUBHANALLAH | WALHAMDULILLAH | WALA ILAHA ILLALLAH | WALLAHU AKBAR

ZIKR SUBHANALLAH | WALHAMDULILLAH | WALA ILAHA ILLALLAH | WALLAHU AKBAR

ASMA UL HUSNA TAMIL MUSLIM SONGS BY ZAINUL ABIDEEN FAIZI

ASMA UL HUSNA TAMIL MUSLIM SONGS BY ZAINUL ABIDEEN FAIZI

احمد صالح فهيمي -  یَا نَبِیْ سَـلَامْ عَلَیْکُـمْ :: Ya Nabi Salam Alaikum  - Ahmad Salih Faheemi

احمد صالح فهيمي - یَا نَبِیْ سَـلَامْ عَلَیْکُـمْ :: Ya Nabi Salam Alaikum - Ahmad Salih Faheemi

பரக்கத்தை அள்ளித்தரும் சுபுஹான மௌலூது| Subuhana Moulid

பரக்கத்தை அள்ளித்தரும் சுபுஹான மௌலூது| Subuhana Moulid

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]