இளங்குயில் பாடுதோ பாடல் | Ilanguyil Paadutho song | SPB, K. S. Chithra love song .
Автор: 4k Classic Movies & Song
Загружено: 2022-02-07
Просмотров: 3383
Описание:
#prabhusongs #lovesongs #4ksongs
இளங்குயில் பாடுதோ பாடல் | Ilanguyil Paadutho song | SPB, K. S. Chithra love song . Tamil Lyrics in Description .
Movie : Kaliyugam
Music : Chandrabose
Song : Ilanguyil Paadutho
Singers : SPB, K. S. Chithra
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
ஆண்: பாட்டு படிக்கும் பூங்குயில்தான்
கூட்டை திறக்கும் நேரமிது
கூட்டை திறந்து ஜோடியுடன் கூடி கலக்கும் காலமிது
பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
பெண் : மன்னன் மடியில் நானாட
மஞ்சள் குளித்து பூச்சூட
ஆண் : ஊமை கனவில் நான் வாட
உன்னை நினைத்து போராட
பெண் : அம்மாடி உன்னாலே தூக்கம் ஏது ராத்திரியில்
ஆண் : இன்னும் என்ன நாணம் விட்டு என்னை தழுவு
பெண் : உன்னை விட்டு எங்கே போவும் இந்த நிலவு
ஆண் : முத்தம் ஒன்று வைக்க சொல்லும் பட்டு உதடு
பெண் : கெட்டி மேளம் கொட்டி தானே காட்டில் உறவு
ஆண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
பெண் : இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
ஆண் : வீணை இருக்கு மீட்டாமல்
வேண்டும் ஸ்வரங்கள் கூட்டாமல்
பெண் : அந்தப்புரத்தில் நீ மீட்டு
ஆதி தாளத்தை நீ போட்டு
ஆண் : கையோடும் மெய்யோடும்
காதல் தேவன் கீர்த்தனை தான்
பெண் : போக போக என்னன்னவோ ராகம் பிறக்கும்
ஆண் : பாட பாட பொன்னுலகின் வாசம் திறக்கும்
பெண் : எந்த பூவும் வாசம் வீச வேளை இருக்கு
ஆண் : தென்றல் வந்து பூவை கிள்ள தேதி எதற்கு
பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
ஆண் : இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
பெண் : பாட்டு படிக்கும் பூங்குயில்தான்
கூட்டை திறக்கும் நேரமிது
ஆண் : கூட்டை திறந்து ஜோடியுடன்
கூடி கலக்கும் காலமிது
இருவரும் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ….
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: