ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

உலக மண் தினத்தில் 95 ஆயிரம் மரங்கள் நட்ட விவசாயிகள்

cauverycalling

savesoil

காவேரி கூக்குரல்

உலக மண் தினம்

Автор: POORANAM TV

Загружено: 2024-12-16

Просмотров: 657

Описание: உலக மண் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் மூலமாக மரக்கன்று நடவு

உலக மண் தினத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 95 ஆயிரம் மரங்கள் நடப்பட்டது. ஆண்டுதோறும் மண் வளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் உலக மண் தினம் டிசம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், ஊட்டச்சத்து, மற்றும் கரிம சத்துக்கள் அபாயகரமான அளவில் குறைந்து வருகிறது. விவசாய நிலங்களில் மண் வளத்தை மீட்டெடுக்க இயற்கை விவசாயம் மற்றும் மரம் சார்ந்த விவசாயம் ஒரு தீர்வாக உள்ளது. மரம் சார்ந்த விவசாயத்தை ஒவ்வொரு விவசாயிக்கும் சாத்தியப்படுத்தும் நோக்கில் காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டுவருகிறது. விவசாய நிலத்தின் வேலியோரங்களில் டிம்பர் மரங்களை நடுவது மண்வள பாதுகாப்புக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

மண்வளத்தை பாதுகாப்பதில் காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் மண்காப்போம் இயக்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது விவசாய நிலங்களில் டிம்பர் மரங்களை நடுவதாகும், இதன் மூலம் நதி நீர் மீட்டெடுப்பு, விவசாயிகளின் வருவாய் அதிகரித்தல், மண்வள மேம்பாடு போன்ற பயன்கள் நிகழும். தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற டிம்பர் மரங்கள் நடுவதற்கு உகந்த மரங்கள் ஆகும். காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக உலக மண் தினத்தில் 364 ஏக்கர் பரப்பளவில், 95,260 மரக்கன்றுகள் நடப்பட்டன. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 33 மாவட்டங்களில் உள்ள, 51 விவசாய நிலங்களில், விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்களால் இம்மரக்கன்றுகள் நடப்பட்டது.

மண்வளப் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஈஷா தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டு அஜர்பைஜானில் ஐக்கிய நாடுகள் சபையால் (UNFCCC) நடத்தப்பட்ட COP29 சர்வதேச மாநாட்டில் ஈஷா சத்குரு அவர்களும், ஈஷா பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அம்மாநாட்டில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் எதிர்கொள்ள எரிசக்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மண்வள பாதுகாப்பிற்கும் கொடுக்கவேண்டும் என்றும், விவசாய நிலங்களின் மண்ணை மீட்டெடுப்பது காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்வதில் ஒரு முக்கியமான அம்சம் என்றும் சத்குரு எடுத்துரைத்தார்.


மண்ணில் பசுமை போர்வையும், நிழலும் நுண்ணுயிர்கள் நன்றாக வளர அவசியமாகும். பூமியில் 95 சதவீத உயிர்கள் மண்ணை நம்பி வாழ்கின்றன, கிட்டத்தட்ட 60 சதவீத உயிரினங்கள் மண்ணுக்குள்ளே வாழ்கின்றன. தற்போதும் 54 சதவீத மக்கள் மண்ணை நம்பியே தொழில் செய்கிறார்கள். எனவே மண்ணைக் காப்பது என்பதில் உணவு பாதுகாப்பு, ஊட்டசத்து பாதுகாப்பு, நுண்ணுயிர்கள் பாதுகாப்பு என மூன்றையும் அடக்கியுள்ளது. மண்ணில் சேர்க்கும் ஒவ்வொரு பசும் இலையும் காலநிலையைச் சரி செய்யும் ஒரு படிநிலை என்பதால் விவசாய நிலங்களில் மரங்கள் நடவு முக்கியத்துவம் பெறுகிறது.

ஈஷா இதுவரை தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஏறக்குறைய 12 கோடி மரங்களை விவசாயிகளுக்கு வினியோகித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களில் 1,01,42,331 மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் 1.21 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 80 லட்சத்திற்கு மேற்பட்ட மரங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக தமிழகம் மற்றும் கார்நாட விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடுவதற்கு ஈஷா திட்டமிட்டுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 50 ஈஷா நர்சரிகள் மூலம் டிம்பர் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தற்போது தேவையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு ஈஷா நர்சரிகளில் விநியோகத்திற்கு தயாராக உள்ளது. மரக்கன்றுகள் பெறுவதற்கு 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற
உங்கள் மாவட்ட Whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்.
👇
https://bit.ly/3GesaSf

காவேரி கூக்குரல்
80009 80009

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
உலக மண் தினத்தில் 95 ஆயிரம் மரங்கள் நட்ட விவசாயிகள்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]