சென்னை ஏர்போர்ட்டில் அதிகாலையில் சம்பவம் | Chennai Airport | LOC Accused
Автор: Dinamalar
Загружено: 2024-10-02
Просмотров: 19570
Описание:
#Partnership விழுப்புரம் மாவட்டம் தொட்டியம் அண்ணாநகரை
சேர்ந்தவர் முத்துசாமி, வயது 30.
இவர் மீது கோவை போலீசில் வரதட்சணை கொடுமை
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை நடத்த போலீசார் தேடிய நிலையில் கடந்த
ஒரு வருடமாக முத்துசாமி தலைமறைவாக இருந்தார்.
வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டு இருப்பதாக கோவை
போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து முத்துசாமி தேடப்படும் தலைமறைவு
குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அனைத்து ஏர்போர்ட்களிலும் முத்துசாமி மீது லுக்-அவுட்
நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.
புதனன்று அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து
துபாய் செல்லும் விமானம் கிளம்ப தயாரானது.
பயணிகளின் பாஸ்போர்ட், ஆவணங்களை குடியுரிமை
அதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலம் சரி பார்த்தனர்.
தலைமறைவு குற்றவாளியான முத்துசாமி துபாய் தப்பி
செல்ல வந்திருந்தார்.
அவரது ஆவணத்தை ஸ்கேன் செய்ததுமே லுக்-அவுட்
நோட்டீஸ் கொடுக்கப்பட்டது தெரிந்துள்ளது.
உடனடியாக முத்துசாமியின் துபாய் பயணத்தை குடியுரிமை
அதிகாரிகள் ரத்து செய்தனர்.# #ChennaiAirport
#EarlyMorningIncident
#LOCAccused
#AirportSecurity
#ChennaiCrime
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: