ஸ்ரீ ஜெய் மா பாலாவிற்கு நடந்த ஊஞ்சல் உற்சவ விழா | கல்லிடைக்குறிச்சி | சித்த பாலா பீடம் | MAYILOSAI
Автор: MAYILOSAI
Загружено: 2026-01-28
Просмотров: 123
Описание:
#bala #sri_jei_maa_bala #aanmegam #kallidaikurichi #unchal_urchavam #unchal_urchava_vila #god_jei_maa_bala #amman #amman_songs #siddha_bala_peedam #jhoola_uthsavam #annai_bala #golu #narasimmar #narasimmar_kadhaigal #jei_maa_bala_kadhaigal #mayilosai #tamil #aanmeega_kathaigal #aanmeega_sorpolivu
ஸ்ரீ ஜெய் மா பாலாவிற்கு நடந்த சிறப்பு ஊஞ்சல் உற்சவ விழா | திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி | ஸ்ரீ சித்த பாலா பீடம் | MAYILOSAI
பாலா ஊஞ்சல் உற்சவம்
கல்லிடைக்குறிச்சியில் கடந்த 23/1/2026 தை மாதம் வெள்ளிக்கிழமையன்று அன்னை பாலாவிற்கு வெகு விமரிசையாக ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கிராமத்தில், வைத்தியப்பபுரம் தெருவில் , ஶ்ரீசித்த பாலா பீடம் என அழைக்கப்படும் இல்லத்தில் ஶ்ரீபாலா கொலுவிருந்து அருள் பாலித்து வருகிறாள். தை மாதத்தின் ஒரு வெள்ளிக்கிழமையில் அன்னை பாலாவிற்கு ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம். கடந்த வெள்ளியன்று மாலை மிக விமரிசையாக நடைபெற்றது. பீடத்தில் எழுந்தருளியுள்ள நரசிம்மர், ஞானஸ்கந்தன், காளி மற்றும் மூகாம்பிகை ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டோத்திரங்களும், பாலாவிற்கு ஶ்ரீலலிதாசகஸ்ர நாம அர்ச்சனையும், பாராயணமும் தொடர்ந்து ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. பரம்பரையாக ஶ்ரீபாலாவை குலதேவதையாகக் கொண்ட ஶ்ரீகோமதிதாஸ் ஸ்வாமிகள் பூஜைகளையும் உபசாரங்களையும் செய்தார். இவரது குருதந்தை ஶ்ரீவித்யாதாஸ் ஸ்வாமிகள் காலத்தில் அனைத்து விழாக்களும் மிகச்சிறப்பாக நடைபெறும். திரு. மதுரை சோமு, திரு. A.K.C.நடராஜன், திரு. T.V. கோபாலகிருஷ்ணன், ஸாக்ஸஃபோன் திரு. கத்ரி கோபால்நாத் போன்ற முன்னனி கலைஞர்கள் இசைக்கச்சேரிகள் செய்திருக்கிறார்கள்.
திரு. கோமதிதாஸ் ஸ்வாமிகள் பாலாவின் மேல் பல பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றை அவரது மகள் திருமதி. பூர்வஜா அவர்கள் அந்த பாடல்களைப் பாடியுள்ளார். பாடல்களை Bala S. Poorvaja என்ற யூடியூப் சேனலில் காணலாம். திருமதி. பூர்வஜா பாடலைப்பாடியபடி ஊஞ்சல்
சேவை செய்ய கலந்துகொண்ட பெண்களும் உடன் பாடி பாலாவைப் பிரார்த்தித்தனர். தீபாராதனை, உபசாரங்கள், ஆரத்தி மற்றும் பிரசாத விநியோகமும் நடந்தது.
நாட்டினிலும் வீட்டினிலும்
நல்லவை நடந்திடவே,
அதர்மந்தனை அழித்து என்றும்
தர்மந்தனை காத்திடுவாய்.!
ஆடீரோ ஊஞ்சல்! ஆடீரோ ஊஞ்சல்!
பாலையே உனையழைத்தோம்
வந்தெதிரே நின்றிடுவாய்-உன்
உன் வரம் தரும் கரந்தனை எம்
சிரந்தன்னில் இருத்திடுவாய்.
ஆடீரோ ஊஞ்சல்!அம்மா! ஆடீரோ ஊஞ்சல்!
என்ற அனைவருடைய நலத்திற்கான பிரார்த்தனையோடு ஊஞ்சல் விழா இனிதே நிறைவடைந்தது. ஜெய்மா.
எங்களது சேனலில் நாங்கள் பதிவிடும் பதிவுகள் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. இதில் வரும் ஆன்மீக தகவல்களில் உள்ள கருத்துகள் எல்லாம் அவர்களையே சாரும். எங்களது சேனலின் கருத்துக்கள் அல்ல. பணம் சம்பத்தப்பட்ட பரிமாற்றங்கள் நாங்கள் பொறுப்பு கிடையாது.
#MAYILOSAI #MAYILOSAI_INDIA #@MAYILOSAI_INDIA #AANMEEGAM #AANMEEGA_THAGAVAL #AANMEEGA_KATHAIGAL #AANMEEGA_SORPOLIVU #VILLISAI #TAMIL
எங்களது சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க| லைக் பண்ணுங்க | ஷேர் பண்ணுங்க | எங்களது வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வையுங்கள் | எங்களது சேனல் வீடியோ சம்பந்தமான உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: