முஸ்லிம் கணவருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு | muslim second marriage issue | kerala court judgement
Автор: Dinamalar
Загружено: 2025-11-05
Просмотров: 3906
Описание:
#Partnership முதல் மனைவி சம்மதம் இல்லாமல்...
முஸ்லிம் கணவருக்கு அதிரடி செக்!
குர்ஆனை சுட்டிக்காட்டி
ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
கேரளாவின் கண்ணுார் அருகே உள்ள கருமத்துார் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷெரீப் வயது 44. இவர், 2017-ல் காசர்கோடை சேர்ந்த 38 வயதான ஆபிதாவை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
ஆனால் முதல் மனைவியை ஷெரீப் முறைப்படி விவாகரத்து செய்யவில்லை. இதனால் 2வது திருமணத்தை பதிவு செய்ய திருக்கரிப்பூர் பஞ்சாயத்து செயலர் மறுத்தார்.
இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் ஷெரீப் மனு தாக்கல் செய்தார்.
முஸ்லிம் மத சட்டத்தின்படி 2வது திருமணம் செய்ய உரிமை உண்டு என்பதால், தன் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிடக் கோரினார். இதை விசாரித்த நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
அதன் விபரம்:
அரசியலமைப்பு சட்டத்தில் இருபாலருக்கும் சம உரிமை உள்ளது. ஆண்களுக்கு கூடுதல் அதிகாரம் எதுவும் கிடையாது.
தன்னை முறைப்படி விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய 99.99 சதவீதம் பெண்கள் விரும்ப மாட்டார்கள்.
திருமணத்தை பதிவு செய்யும் விண்ணப்பத்தில் வேறு மனைவி இருந்தால் அவர்களது விபரங்களை குறிப்பிட வேண்டும். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் வேறு திருமணத்தை செய்யலாம்.
ஆனால் திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமென்றால் முதல் மனைவியின் சம்மதம் கண்டிப்பாக தேவை. 2வது திருமணத்துக்கு முதல் மனைவியின் சம்மதம் தேவையில்லை என்று குர்ஆனில் கூட கூறவில்லை.
மனுதாரர் 2வது திருமணத்தை பதிவு செய்ய மீண்டும் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகலாம். ஆனால் முதல் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பி அவரது கருத்தை கேட்ட பின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த தீர்பில் நீதிபதி கூறினார்.# #MuslimSecondMarriageIssue #KeralaCourtJudgement #MuslimMarriage #SecondMarriage #MarriageLaws #FamilyLaw #LegalUpdate #IslamicMarriage #CourtRuling #GenderEquality
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: