எடுத்த காரியங்களில் வெற்றி பெற திருநீலகண்டம் பதிகம் | அவ்வினைக்கு இவ்வினை | சிவன் பாடல் Sivan Songs
Автор: Shiva Arpanam
Загружено: 2024-10-08
Просмотров: 878
Описание:
#Bhakti #thiruchitrambalam #Natarajar #Siva #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional
திருநீலகண்டம் பதிகம் | அவ்வினைக்கு இவ்வினை | பிணி தீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல்கள் | Sivan Songs
ஓம் நமச்சிவாய. திருச்சிற்றம்பலம்.
திருஞானசம்பந்தர் பல்வேறு ஊர்களுக்கும் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடி அருளி வந்தார்.
ஒரு சமயம் காவேரிக்குத் தென்கரையிலுள்ள ஆலயங்களைத் தரிசித்து வருகையில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள திருச்செங்கோடு திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார்.
திருச்செங்கோடு என்று நாம் அழைக்கும் ஊர் திருக்கொடி மாடச் செங்குன்றூர் என அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஊராகும்.
அர்த்தநாரீஸ்வரரைத் தரிசித்துப் பின்னர் பொன்னி நதிக்கு மேற்புறம் உள்ள திருநண்ணா முதலிய தலங்களைத் தரிசித்துப் பின்னர் மீண்டும் திருச்செங்கோட்டிற்கு எழுந்தருளினார்.
அப்போது குளிர்காலம்.கடும் பனியால் அனைவரும் வருந்திக் கொண்டிருந்தனர். பலநாள் அங்கு அவர் பக்தர் குழாமுடன் வசித்து வருகையில் குளிர் ஜுரம் கண்டு அடியார்கள் பலரும் வாடினர்.
அதைக் கண்ட அருளாளர் திருஞானசம்பந்தர் ‘அவ்வினைக் கிவ்வினை’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார். குளிர் ஜூரம் அடியர்களைத் தீண்டக் கூடாது என்று ஆணையிட்டுப் பாடினார்.
அவ்வளவு தான், குளிர் ஜுரம் உடனே அடியார்களை விட்டு அகன்றது. அதுமட்டுமல்ல, அந்த நாட்டில் பலரையும் வருத்தி வந்த அந்த நளிர் ஜுரம் நாட்டை விட்டே அகன்றது.
இந்தப் பதிகம் திருநீலகண்டம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
இன்றும் இதை விபூதி இட்டு ஓதுவாரை ஜுரம் பீடிக்காது என்பது அனுபவப் பழக்கமாகும்.
"அவ்வினைக்கு இவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறாதிரு நீலகண்டம்"
--திருஞானசம்பந்தர் --
Other Songs:
குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | கண்காட்டும் நுதலானும் Kankattum Nudhalanum:
• குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு ...
திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | Karpagambal Pathigam:
• திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில்...
ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல்வ வளம் பெருக வரவைக்கும் பாடல் | Mahalakshmi Sahasranamam :
• ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல...
திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam
• நோய் நீங்கும் மந்திரம் திருநீற்றுப் பதிகம...
Thank YOU for watching! Click 'Like' if you enjoyed it. And hit 'Subscribe' If you don't want to miss any videos
/ @shivaarpanam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: