100% மானியத்தில் விவசாயிகளுக்கு இலவச பைப் | Free pipes subsidy for farmers விவசாயிகளுக்குமானியம்
Автор: இயற்கை
Загружено: 2021-10-13
Просмотров: 32140
Описание:
#subsidyforfarmers #விவசாயிகளுக்குமானியம் #இலவச பைப் #விவசாயிகளுக்குஇலவசபைப் #இயற்கைnature
நண்பர்களே!
தண்ணீர் என்பது இந்த பூமியில் உயிர்வாழும் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத ஒரு ஆதாரம். இயற்கையை பாதுகாப்பதில் தண்ணீருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அந்த தண்ணீரை மிக சிக்கனமாக தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விவசாயத்திற்கும் தண்ணீர் மிக முக்கியம். ஆனால், நமது விவசாயிகள் தண்ணீரின் மகத்துவத்தை உணராமல், நிறைய தண்ணீரை வீணடிக்கிறார்கள். பயிர்களின் மகசூலுக்கு அதிக நீர் பாய்ச்ச வேண்டும் என்ற கருத்து தவறானது. ஆனால், அந்தந்த பயிர்களுக்கு தேவையான அளவு நீரைப் பாய்ச்சினால் போதுமானது.
நீரை விவசாயிகள் மிக சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதற்கு
1. சொட்டுநீர் பாசனம் (Drip irrigation. system)
2. தெளிப்புநீர் பாசனம்(Sprinkler irrigation system)
3. மழைத்தூவான் (Rain gun irrigation)
போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.
இதுபோன்ற புது தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தி விவசாயத்தில் தண்ணீரை சேமிக்க 'பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது.
நுண்ணீர்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், போட்டோ, கணினி சிட்டா, பயிர் அடங்கல், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, நில வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை முடிவு ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.
மேலும் தெளிவான விவரங்களுக்கு தங்கள் அருகிலுள்ள தோட்டக்கலைத்துறை அல்லது வேளாண் துறை அலுவலரை தொடர்பு கொள்ளவும்.
👉 நீர் இன்றி அமையாது உலகு 💧🌧🌬⛈ 👈
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: