TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?
Автор: Career Guidelines For U Tamizha
Загружено: 2022-10-28
Просмотров: 36
Описание:
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு – II /IIA ( தொகுதி – II /IIA) ஆகிய தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்த முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழகம் முழுவதும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஆனது மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சத்து 94 ஆயிரம் பேர் எழுதி உள்ளனர். குரூப் 2, 2ஏ தேர்வுகள் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 5 ஆயிரத்து 413 இடங்கள் நிரப்பட உள்ளன.
குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் தெரிவித்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகளின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது என TNPSC தற்போது தெரிவித்துள்ளது.
அந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், மேலும் இது குறித்து ,சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு TNPSC-யின் https://www.tnpsc.gov.in/ என்ற இணைய முகவரியை மட்டுமே அணுக வேண்டும் என தேர்வாணையம் மூலம் தெரிவித்துள்ளது .
Press Release Link
https://drive.google.com/file/d/1UmJC...
#careerguidelinesforutamizha
#jobportal
#governmentjobs2022
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: