தினம் ஒரு மந்திரம் - திருமூலர் திருமந்திரம் - பாடல் 486
Автор: Parameswaran Sreenivasan
Загружено: 2025-09-12
Просмотров: 76
Описание:
ஓம்
திருச்சிற்றம்பலம்
திருமூலர் திருமந்திரம்
இரண்டாம் தந்திரம்
2. காமிகாகமம்
(குற்றமற்ற சீவராசிகளின் விருப்பம் நிறைவேற்றுதல்)
மந்திரம் – 33
16. பாத்திரம் (தகுதி உடைய (பிச்சைப் பாத்திரம்) ஆன்மா)
486-வது பாடல்
கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து
மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிலாத இடிஞ்சிலு மாமே.
பொருள்
கருவாக இருந்தபோதிலிருந்தே சிவனை நினைத்தேன். உடல் வாடினாலும், ஈசன் திருவடிகளைத் தேடிக்கொண்டே இருந்தேன். எண்ணெய் இல்லாமலே ஒளி தரும் விளக்கு ஈசன் திருவடி. இறைவன் திருவடி அடைய பொய்மைகள் விட்டு சிவனின் பாதங்களை அடைந்தேன். ஆகவே சோதனைகள் என்னை எரித்தாலும், ஈசன் திருவடியிலிருந்து நான் விலகவில்லை.
தமிழ் இலக்கியப் பாசறை
சுப ஸ்ரீனிவாசன்
துணைச் செயலாளர்
ஆர் எஸ் புரம், கோயம்புத்தூர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: