28.12. 2025 வெள்ளி பூத வாகன காக்ஷி | சுவாசினி பூஜை | மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம்
Автор: Maiya Bhoomi
Загружено: 2025-12-31
Просмотров: 55
Описание:
வெள்ளி பூத வாகன காக்ஷி
சுவாசினி பூஜை
மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் - கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி (25.12.2025 - 07.30 am - 08.30 am) அதைத் தொடர்ந்து, உத்ஸவ யாகசாலையில் காலை மாலை இரு வேளைகளிலும், மிகச் சிறப்பு வாய்ந்த ஹோமங்கள் செய்து, ஒவ்வொரு நாள் இரவிலும் மற்றும் காலையிலும், உத்ஸவ நாயகர்களாகிய ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - வேத பாராயணம் முழங்கிட, நாதஸ்வர நல்லிசை நல்கிட, நான்கு வீதிகளிலும் வலம் வந்து காட்சி நல்குவார்கள்.
ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி சிறப்பு வாய்ந்த வாகனங்களில் வலம் வருவார்கள்.
தங்கத்தினாலான மஞ்சம் (25.12.2025),
சந்திர பிரபை (26.12.2025),
சூர்ய பிரபை (27.12.2025),
பூத வாகனம் (28.12.2025),
ஸகோபுரம் எனும் தெருவடைச்சான் என்று அழைக்கப்படக்கூடிய ரதம் (கோபுர வடிவத்திலான, தெரு முழுவதும் அடைத்து வரக்கூடிய விதத்தில் அமைந்தது) (29.12.2025),
யானை வாகனம் (30.12.2025),
தங்க கைலாய மலையெடுத்த வெள்ளி ராவணன் வாகனம் (மிக அற்புதமான அமைப்பு, ராவணன் உருவம் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒன்பது தலைகளும், கையில் ஒரு தலையை வீணையின் தலைப்பாகமாக அமைத்து காம்போதி ராகம் மீட்டும் வகையில் அமைந்தது) (31.01.2025) என்று முறையே வலம் வந்து அருள்பாலிப்பார்.
எட்டாம் திருநாளில் (01.01.2026) பிக்ஷாடனராக வலம் வருவார்.
ஒன்பதாம் திருநாள் (02.01.2026) - தேர் உத்ஸவம்.
பத்தாம் திருநாள் (03.01.2026) - ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம்.
மறுநாள் (04.01.2026) – இரவு முத்துப்பல்லக்கில் வீதியுலா.
இதற்கு அடுத்த நாள், (05.01.2026, மாலை) ஸ்ரீ சந்திர சேகரர் தெய்வ உருவம் கோயில் இருந்து, புறப்பாடு செய்யப்பட்டு, கோயிலின் தென் கிழக்கு மூலையில், சுமார் 1 ½ கி.மீ. தொலைவில் உள்ள பழம் பெருமை வாய்ந்த `ஞானபிரகாசம் தெப்ப குளத்தில்’ தெப்போத்ஸவம் மிகச் சிறப்பாக நடைபெறும்.
ஆன்மீகம், கல்வி, வேலைவாய்ப்பு,சுற்றுலா, ஆரோக்கியம், சமையல் கலை, சுய முன்னேற்றம், பொழுது போக்கு, முக்கிய செய்திகள்,
போன்றவைகளை தாங்கள் பயனுறும் வகையில் அனுபவமிக்க சான்றோர்கள் மூலம் காணொளியாக வழங்குவதே எங்களின் நோக்கம்!
Maiya Bhoomi
For Queries,
Advertisements & Collaborations
Contact & WhatsApp : +91 9942425577
Mail id - [email protected]
உங்கள் வீடியோ நமது சேனலில் இடம்பெற மேற்கண்ட இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: