பொன்மலை வேலாயுத சுவாமி திருக்கோவில் கிணத்துக்கடவு
Автор: TRAVELING LOVE & DOG LOVER
Загружено: 2024-10-29
Просмотров: 853
Описание:
பொன்மலை வேலாயுதசாமி கோயில் , கோயம்புத்தூருக்கு அருகே கிணத்துக்கடவிலுள்ள சிறு குன்றான பொன்மலை மீதமைந்துள்ள இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் முதன்மைக் கடவுள் வேலாயுதசாமி ஆவார். இக்குன்றின் அடிவாரத்தில் கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தம் உள்ளதால் கோவையிலிருந்து பேருந்து மூலம் இக்கோயிலுக்குச் செல்லலாம்.
ஞானப்பழத்திற்காக அம்மையப்பரிடம் கோபித்துக் கொண்டு பாலமுருகன் பழனி செல்லும் வழியில் இக்குன்றில் பாதம் பதித்தார் என்பது மரபுவழி வரலாறு. குன்றின் மேலுள்ள வேலாயுதசாமி கருவறைக்குப் பின்புறம் இரு பாதங்கள் கொண்ட ஒரு சிறு சன்னிதி உள்ளது. வேலாயுதசாமிக்கு பூசை செய்யும் முன்னர் இப்பாதங்களுக்கே முதலில் பூசை நடைபெறுகிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இம்மலையிலுள்ள மூலிகையைக் கொண்டு மைசூர் திவானின் காற்புண்ணை ஆற்றி இத்தலத்து இறைவன் அருள்செய்தார் என்றும், நலமடைந்த திவான் மைசூர் அரசரிடம் இறைவனின் அருள் பற்றிக் கூறியதால் அரசர் இங்கு இறைவனுக்கு இக்கோயிலைக் கட்டியதாகவும் தலவரலாறு கூறப்படுகிறது.
பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள புரவி பாளையம் சமீன்தார் இங்கு வழிபட்டதாகவும் மரபுவழி வரலாறு வழக்கிலுள்ளது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: