🔴 பித்ருதோஷம் குணமாக்கும் மஹாளய அமாவாசை 2025 - ஏன் இந்த நாள் முக்கியம்? Mahalaya Amavasya 2025
Автор: Aalayam Selveer
Загружено: 2025-09-19
Просмотров: 2557
Описание:
#aalayamselveer #pithrudosham #mahalayaamavasya #mahalayaamavasai
🔴 பித்ருதோஷம் குணமாக்கும் மஹாளய அமாவாசை 2025 - ஏன் இந்த நாள் முக்கியம்? Mahalaya Amavasya 2025
பித்ருதோஷம் என்பது பொதுவாக முன்னோர்களின் ஆத்மா அமைதியில்லாமல் இருப்பது அல்லது அவர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாடு, தர்ப்பணம், கடமைகள் செய்யப்படாமல் விடப்படுவதால் ஏற்படும் தோஷம்.
👉 இதனால் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றலாம்:
பணப் பிரச்சனை
குடும்பச் சண்டை
வேலைத் தடைகள்
திருமணத் தடை
குழந்தைப் பேறு தடை
தொழில் நஷ்டம்
ஆரோக்கியக் குறைவு
🪔 பித்ருதோஷம் நீங்குவதற்கு ஒரே தீர்வு – நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாடு, தர்ப்பணம், கடமைகளை அவர்கள் இறந்த தேதி (ஒவ்வொரு ஆண்டும்) அல்லது அமாவாசைகளில் செவ்வனே செய்வது தான்.
கடமைகள் செய்யப்படாவிட்டால், பித்ருதோஷம் நம் தலைமுறையையும் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் நம்மில் பலருக்கு முன்னோர்களின் இறந்த தேதி தெரியாது. அப்படிப்பட்ட சூழலில் என்ன செய்றதுன்னு தெரியாம குழம்பிப்போய் நிற்கிறீர்களா?
உங்க தலையெழுத்தையே மாற்றப்போகிற ஒரு மகா சக்தி வாய்ந்த நாள் வருது... அதுதான் மஹாளய அமாவாசை! மஹாளய அமாவாசை அன்று செய்யும் தர்ப்பணம், தலைமுறை தலைமுறையாக வரும் பித்ருதோஷத்தையே முற்றிலும் நீக்கக்கூடிய சக்தி கொண்டது!
வருடத்திற்கு 12 அமாவாசை வந்தாலும், ஆடி, தை அமாவாசையை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது மஹாளய அமாவாசை!
🌑 மஹாளய அமாவாசை – தலையெழுத்தை மாற்றும் அற்புத நாள் 🌑
📅 நாள்: ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 21
⏰ தொடங்கும் நேரம்: அதிகாலை 1:03 AM
⏰ முடியும் நேரம்: திங்கட்கிழமை இரவு 12:25 AM
⏰படையல் வைக்க உகந்த நேரம்: செப்டம்பர் 21, 11.00 AM - 02.00 PM
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 21 காலையில் எழுந்ததும் குளித்து, வீட்டைச் சுத்தம் பண்ணிட்டு,உங்க முன்னோர்களின் போட்டோவை நடு வீட்டில் வைத்து, சந்தனம், குங்குமம், பூ எல்லாம் வைத்து அலங்காரம் செய்து படையல் வைங்க.
ஒரு பிடி தயிர் சாதம் அல்லது பருப்பு சாதத்தில் கருப்பு எள்ளை கலந்து, உங்க வீட்டு மொட்டை மாடியில தெற்குத் திசையில் காகத்திற்கு வைத்து ‘என் முன்னோர்களே, என் சந்ததியை நல்லா வாழ வைங்க’-னு மனசார வேண்டி கொள்ளுங்கள்.
காகம் வந்து அந்த சாதத்தை சாப்பிட்டால், உங்க முன்னோருங்க உங்கள் வழிபாட்டை ஏற்றுக்கொண்டார்கள் என்பது பொருள்!
✨ இந்த நாளில் செய்யும் தர்ப்பணம், முன்னோர்களின் ஆசீர்வாதத்தால் ஆயுள், செல்வம், ஆரோக்கியம், குடும்ப நிம்மதி அனைத்தையும் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp: 90035 71910
ஆலயம் செல்வீர் சேனலில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 90035 71910
Subscribe To: / @aalayamselveer
Facebook Link: / aalayamselveer
Instagram Link: / aalayamselveer
WhatsApp channel link: https://whatsapp.com/channel/0029Va7O...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: