சித்திரை நட்சத்திரம் நீங்கள் அறிந்ததும் அறியாததும் | Chithirai natchathiram secret | Astro Mani
Автор: Astro Answers
Загружено: 2025-07-30
Просмотров: 2458
Описание:
Astro Answers: சித்திரை நட்சத்திரம் நீங்கள் அறிந்ததும் அறியாததும் | Chithirai natchathiram secret | Astro Mani
சித்திரை 1-ம் பாதம்: நட்சத்திர அதிபதி: செவ்வாய்; ராசி அதிபதி: புதன்; நவாம்ச அதிபதி: சூரியன்
நவாம்ச அதிபதியாக சூரியனைக்கொண்ட நீங்கள் சாதுர்யமாகப் பேசிக் காரியம் சாதிப்பவர்களாக இருப்பீர்கள்.
படித்த படிப்புக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத வேலையைச் செய்வீர்கள்.
மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுவீர்கள் என்பதாலும், இனிமையாகப் பேசத் தெரியாது என்பதாலும் குறைவான நண்பர்களையே பெற்றிருப்பீர்கள்.
தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
மற்றவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டித் திருத்துவீர்கள்.
எந்தச் சூழ்நிலையிலும் சுயகௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். குடும்பத்தினரின் எதிர்கால நன்மையைப் பற்றி சிந்தித்துச் செயல்படுவீர்கள்.
பிடிவாத குணம் இருந்தாலும்கூட அவசியமான நேரத்தில் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கவும் தயங்க மாட்டீர்கள்.
இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குச் சென்று வருவதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள்.
தாயின் வார்த்தைகளை வேத வாக்காக மதித்து நடப்பீர்கள். புதுமையை விரும்புவீர்கள்; புதுமையாகச் செயல்படுவீர்கள்.
சித்திரை 2 - ம் பாதம் நட்சத்திர அதிபதி: செவ்வாய்; ராசி அதிபதி: புதன்; நவாம்ச அதிபதி: புதன் நவாம்ச அதிபதியாக புதனைக்கொண்டிருக்கும் நீங்கள், மற்றவர்கள் விரும்பும்படி நடந்துகொள்வீர்கள். உடல்நலனில் அக்கறைகொண்டவராக இருப்பீர்கள். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுப்பவர்களாக இருப்பீர்கள்.
நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருப்பீர்கள் என்பதால், எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
தெய்வ பக்தி மிகுந்தவராக இருப்பீர்கள். மற்றவர்களுக்குப் புரியும்படி தெளிவாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசுவீர்கள்.
எந்த வேலையையும் அரைகுறையாக முடிப்பதை விரும்ப மாட்டீர்கள். 'செய்வன திருந்தச் செய்' என்றபடி செய்யும் செயலை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்க மாட்டீர்கள்.
வாக்கு கொடுத்துவிட்டால், அதை எப்படியும் நிறைவேற்றி முடிப்பீர்கள்.
உங்கள் சக்திக்கும் தகுதிக்கும் உட்பட்ட காரியங்களை மட்டுமே செய்வீர்கள். நிறைய நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். ஒருவரைப் பார்த்த உடனே அவருடைய குணநலன்களை எடைபோட்டு விடுவீர்கள். உங்களுக்குள் திறமைகள் இருந்தாலும், வெளிக்காட்டிக்கொள்ளத் தயங்குவீர்கள்.
சித்திரை 3 - ம் பாதம்
நட்சத்திர அதிபதி: செவ்வாய்; ராசி அதிபதி புதன்; நவாம்ச அதிபதி: சுக்கிரன் நவாம்ச அதிபதியாக சுக்கிரனைக் கொண்ட நீங்கள், புதுமையான சிந்தனைகொண்டவர்களாக இருப்பீர்கள். சமூகத்தில் மற்றவர்களால் போற்றிப் புகழப்படுவீர்கள். செல்வாக்கு மிகுந்தவராக இருப்பீர்கள். `எல்லாமும் எல்லோருக்கும்' என்ற பொதுவுடைமைச் சிந்தனைகொண்டிருப்பீர்கள். சமூக நலனில் அதிக அக்கறைகொண்டவர்களாக இருப்பீர்கள். கலைத்துறையில் புகழுடன் விளங்குவீர்கள். விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர்களாக இருப்பீர்கள். ஏழை எளியவர்களிடம் இரக்கம் கொண்டு அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வீர்கள். ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். எதையும் நேருக்கு நேராகப் பேசுவீர்கள். ஒரு வேலையில் ஈடுபடுவதற்கு முன்னர், அந்தச் செயலினால் ஏற்படும் பின்விளைவுகளை நன்றாகத் தெரிந்துகொண்ட பிறகே அதில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கைத்துணைக்கு முக்கியத்துவமும் முழு சுதந்திரமும் கொடுப்பீர்கள். அவருடைய ஆலோசனையைக் கேட்ட பிறகே முடிவெடுப்பீர்கள்.
சித்திரை 4 - ம் பாதம்:
நட்சத்திர அதிபதி: செவ்வாய்; ராசி அதிபதி: புதன்; நவாம்ச அதிபதி: செவ்வாய்
மனஉறுதி அதிகம் கொண்டவர்களாக இருப்பீர்கள். எதிரிகள் அஞ்சுகிற அளவுக்கு வீரமும் விவேகமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். நாட்டுப்பற்று, மொழிப்பற்று அதிகம்கொண்ட நீங்கள், பெரியவர்களிடம் அதிக மரியாதைகொண்டவர்களாக இருப்பீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தை முடிக்கும்வரை ஓய மாட்டீர்கள். கல்வியில் அதிக ஆர்வம்கொண்டவர்களாக இருப்பீர்கள். சிலருக்குக் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக படிப்பு பாதியில் தடைப்படவும் வாய்ப்பிருக்கிறது. பெற்றோர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு நடப்பீர்கள். ஒழுக்கமாக நடந்துகொள்வதுடன் பிள்ளைகளையும் ஒழுக்கத்துடன் வளர்ப்பீர்கள்.
Here is list of the most interesting videos of Astro Answers :
---------------------------------------------------------------------
ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் • ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் ? | Raghu ...
நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு? • நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் எதற்க...
கேது நின்ற இடம் யாருக்கு பலம்? • கேது நின்ற இடம் யாருக்கு பலம் ? Kethu nind...
எது வலிமையான நட்சத்திரம்? • எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star i...
உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? • உங்கள் ஜாதகம் சரியா தவறா ? | Ungal Jathaga...
லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் • Astro Answers: லக்னம் கண்டுபிடிக்கலாம் வார...
லக்னாதிபதி பலம் • லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam | As...
இரண்டு கல்யாணம் யாருக்கு • இரண்டு கல்யாணம் யாருக்கு ? Two Marriage Z...
கேது திசை முன் எச்சரிக்கை • கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in ...
குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை • குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way ...
ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு • ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்ப...
திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? • திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? | Luc...
நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ? • நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to ...
------------------------------------------------- -----------------------------------------------------
Follow Us On Social Medias :
---------------------------------------------------
Facebook: / myastromani
Instagram: / myastromani
Twitter: / myastromani
#astroanswers #astromanikandan #astromani
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: